என்னைச் செதுக்கிய புத்தகங்கள்

சில புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. ஏன் மனது அப்படி புத்தகங்களின் மீது ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று இன்றுவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.                                                                                                                                              –எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத் தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்.                                                                                                               – ஹென்றி டேவிட் தோரோ

நான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்த பட்டியல்

நாவல்கள்

 1. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
 2. கம்பாநதி – வண்ணநிலவன்
 3. உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 4. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
 5. யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 6. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
 7. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
 8. கொற்றவை – ஜெயமோகன்
 9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
 10. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
 11. கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
 12. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
 13. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
 14. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
 15. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
 16. நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்,
 17. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
 18. பார்த்திபன் கனவு – கல்கி
 19. பொன்னியின் செல்வன் – கல்கி
 20. ஆழி சூழ் உலகு – ஜோடி குரூஸ்
 21. நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
 22. கல்மரம் – திலகவதி
 23. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
 24. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
 25. பொய்த்தேவு- க.நா.சு
 26. கானல் நதி – யுவன் சந்திரசேகர்
 27. அபிதா – லா.ச.ரா
 28. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
 29. அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
 30. குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
 31. நளபாகம் – ஜானகிராமன்
 32. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
 33. நட்டுமை – ஆர்.எம்.நௌஸாத்
 34. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
 35. கன்னி மாடம் – சாண்டில்யன்
 36. கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
 37. பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
 38. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
 39. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
 40. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) –  சிங்கிஸ் ஜத்மதேவ்
 41. ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
 42. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
 43. மோபிடிக் (திமிங்கல வேட்டை) – ஹெர்மன் மெல்வின்

கட்டுரைகள்

 1. பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
 2. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
 3. நாள் மலர்கள் – தொ.பரமசிவன்
 4. தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்,
 5. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்,
 6. கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
 7. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
 8. காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன்,
 9. இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்,
 10. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்,
 11. சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
 12. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
 13. கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
 14. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
 15. தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
 16. என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
 17. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்பிரமணியன்
 18. கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்பிரமணியன்
 19. மந்திரங்களும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன்
 20. மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
 21. தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
 22. உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
 23. இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
 24. தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகம்
 25. நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
 26. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
 27. நிகழ்தல் – ஜெயமோகன்
 28. புத்தகங்களின் உலகில் – ந.முருகேசபாண்டியன்
 29. மீள்கோணம் – அழகிய பெரியவன்
 30. பறவைகளும் வேடந்தாங்கலும் – மா.கிருஷ்ணன்
 31. பெண்மை என்றொரு கற்பிதம் – ச.தமிழ்ச்செல்வன்

சிறுகதைகள்

 1. நகரம் – சுஜாதா
 2. ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா
 3. நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
 4. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
 5. மதினிமார்கள் கதை – கோணங்கி
 6. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
 7. பெய்தலும் ஓய்தலும் – வண்ணதாசன்
 8. வண்ணதாசன் முத்துக்கள் பத்து
 9. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – வண்ணதாசன்
 10. நடுகை – வண்ணதாசன்
 11. வண்ணநிலவன் முத்துக்கள் பத்து
 12. கான்சாகிப் – நாஞ்சில்நாடன்
 13. ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
 14. திசைகளின் நடுவே – ஜெயமோகன்
 15. மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
 16. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
 17. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
 18. வெண்ணிலை – சு.வேணுகோபால்
 19. மண்பூதம் – வா.மு.கோமு
 20. புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
 21. வெளியேற்றப்பட்ட குதிரை – பாவண்ணன்
 22. அன்பின் ஐந்திணை – சு.மோகனரங்கன்
 23. ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்

ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்

 1. மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
 2. ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
 3. சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
 4. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
 5. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு – விக்ரமாதித்யன்
 6. பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
 7. ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா

மதுரை

 1. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
 2. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
 3. அழகர் கோயில் – தொ.பரமசிவன்
 4. எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
 5. மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
 6. கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
 7. மதுரை கோயில்களும் திருவிழாக்களும் – ஆறுமுகம்

கவிதைகள்

 1. விக்ரமாதித்யன் கவிதைகள் – விக்ரமாதித்யன்
 2. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்துஇருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
 3. மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
 4. நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
 5. நட்பூக்காலம் – அறிவுமதி
 6. உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் – தாணு பிச்சையா
 7. இதற்கு முன்பும் இதற்கு பிறகும் – மனுஷ்யபுத்திரன்
 8. சுந்தரராமசாமி கவிதைகள் – சுந்தர ராமசாமி
 9. கலாப்ரியா கவிதைகள் – கலாப்ரியா
 10. தேவதைகளின் தேவதை – தபூசங்கர்
 11. விழியீர்ப்பு விசை – தபூசங்கர்
 12. அடுத்த பெண்கள் கல்லூரி ஐந்து கிலோமீட்டர் – தபூசங்கர்
 13. வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் – தபூசங்கர்

கதைகள்

 1. பஞ்சதந்திரகதைகள்
 2. தெனாலிராமன் கதைகள்
 3. பீர்பால்கதைகள்
 4. மரியாதைராமன் கதைகள்
 5. விக்ரமாதித்தன் கதைகள்
 6. ஜென் கதைகள் – புவியரசு
 7. திராவிடநாட்டுப்புறக்கதைகள்
 8. மதனகாமராசன் கதைகள்
 9. பரமார்த்த குரு கதைகள்
 10. மகாபாரதக்கதைகள்
 11. சூஃபி கதைகள்
 12. முல்லா கதைகள்
 13. ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
 14. கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 15. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
 16. கால் முளைத்த கதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
 17. மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். (யூமா வாசுகி)
 18. மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்

மற்றவை

 1. திசைகாட்டிப்பறவை – பேயோன்
 2. நவீன ஓவியம் – இந்திரன்
 3. கோபுலு ஜோக்ஸ் – விகடன்
 4. ராஜூ ஜோக்ஸ் – விகடன்
 5. தாணு ஜோக்ஸ் – விகடன்
 6. தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
 7. ஈரான் – மர்ஜானே சத்ரபி
 8. பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – நளினி ஜமிலா

நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப்பார்க்கும்போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்து கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.

என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்னூட்டங்கள்
 1. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அடேயப்பா! படித்த புத்தகங்களின் பெயர்களைத் தொகுப்பாய்ப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. நானும் தொகுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்
  செய்ய வேண்டும்வாழ்த்துக்கள் சுந்தர்

 2. தமிழ் சொல்கிறார்:

  உங்கள் தொகுப்பைக் கண்டவுடன் நானும் தொகுக்க ஆசை ஏற்படுகிறது. ஆனால் உங்கள் அளவு நானும் படித்ததில்லை என்பதும் உண்மை.

 3. Natesan Karuppaiah Muthu சொல்கிறார்:

  Thelivana nokkam. Nalla Muyarchigal. anbu, arivu melum ayarvaru inbam tharum iniya thamizh inayam

 4. Sampath Krishnan சொல்கிறார்:

  Very good list…best wishes….read more and more and more..

 5. யுவா சொல்கிறார்:

  இதை நான் ரெஃப்ரனஸ்-ஆக கொள்வேன். நன்றி!

 6. கந்தவேல் ராமசாமி சொல்கிறார்:

  ஜெயககாந்தனின் ஒரு சிறுகதைகூட நீங்கள் படிக்கவில்லையா? விருப்பமில்லையா?

  • ஜெயகாந்தனின் சிறுகதைகள் நிறைய வாசித்திருக்கிறேன். குறிப்பிட மறந்துவிட்டேன். ஜெயகாந்தனின் ஒரு நாவல்கூட வாசித்திருக்கிறேன். தத்தனேரி சுடுகாடு எல்லாம் அக்கதையில் வரும். பெயர் மறந்துவிட்டது. பதிவை மேம்படுத்தும் போது ஜெயகாந்தன் சிறுகதைகளைச் சேர்த்துக்கொள்கிறேன். நன்றி.

 7. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சுந்தர்

  உனது புத்தகங்கள் படிக்கும் ஆர்வமும் – புத்தகங்கள் பற்றிய பதிவுகளும் பிரமிக்க வைக்கிறது. படிப்பதற்கென்றே நேரம் ஒதுக்குவது பாராட்டத் தக்கது. பசுமை நடை – புத்தக வாசிப்பு அனைத்திலும் காட்டும் ஈடுபாடு பாராட்டுக்குரியது.

  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

 8. Ponniah .Karunaharamoorthy சொல்கிறார்:

  இன்னும் இலங்கையில் வெளிவந்த நூல்களும், புலம்பெயர்ந்தவர் படைப்பிலக்கியங்களும் உங்கள் வாசிப்பின் நிரலில் இடம்பெற்றால் அது பூரணாமாய் அமையுமென நினைக்கிறேன். நன்றி. வாழ்த்துக்களுடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s