சித்திர வீதிகள்

Posted: ஒக்ரோபர் 23, 2010 in நான்மாடக்கூடல்

ஒருமுறை டவுன்ஹால் ரோடின் உள்ளே நடந்து பாருங்கள்.உங்கள் வேலை ரீகல் தியேட்டரில் இருந்து திரும்பி ஒரு எட்டு உள்ளே நுழைவது மட்டும் தான். ஆற்றின் வேகம் போல ஜனத்திரள் தானே உங்களை அழைத்துக்கொண்டு போய் மீனாட்சி கோபுரத்தின் அருகில் சேர்த்துவிடும். அங்கும் நீங்கள் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் வெயிலேறிய மீனாட்சிஅம்மன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் சூடு கொதிக்கும் கல்லில் நிதானமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

– எஸ்.ராமகிருஷ்ணன் (வாசக பர்வம்)

ஒவ்வொருவருக்கும் பல விதமான இரசனைகள் இருக்கும். சிலருக்கு பராக்(கு) பாக்குறது ரொம்ப பிடிக்கும். எனக்கு பராக்பாண்டியன்னு பட்டமே கொடுக்கலாம். எங்கம்மா கூட வேடிக்கை பார்த்துட்டே போயி நிறையா திட்டு வாங்கிருக்கேன். பத்தாவது படிக்கிற வரை எங்கப்பாவுடன் சைக்கிளில் மதுரை முழுக்க சுற்றியிருக்கேன் .
சிறுவயதில் ஆடிவீதியில் உள்ள கல்யானையில் ஏறி பலமுறை விளையாடியிருக்கிறேன். இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி மேற்குகோபுரம் அடியில உள்ள கல்யானையில் ஏறி உட்கார்ந்திருந்தேன்.இரயில், கடல், யானை மட்டுமல்ல. மதுரையையும் பார்க்க பார்க்க சலிக்காது.

மதுரை வீதிகளில் சும்மா சுற்றி திரிவதில் உள்ள மகிழ்ச்சிக்கு வேறு இணையான விசயம் எதுவுமில்லை. படிக்கும் போது சிம்மக்கல்லில் இறங்கி நானும் என் நண்பனும் சித்திரை வீதி வழியாக பெரியார் வரை நடந்தே பல முறை சென்றிருக்கிறோம்.

இப்பொழுதெல்லாம் இரயில்நிலையத்துக்கு வெளியே சைக்கிள நிறுத்திட்டு நானும் நண்பரும் டவுன்ஹால் ரோட்டுக்குள்ள நடைய கட்டுனோம்னா மீனாட்சியம்மன் கோயில் வரைக்கும் போய் சித்திரை வீதியை ஒரு சுத்து சுத்திட்டு தான் திரும்புவோம்.

கட்டாயம் வாரம் ஒரு முறையாவது டவுன்ஹால் ரோட்லயிருந்து சித்திரை வீதி வரைக்கும் போவோம். எதாவது காரணம் கிடைக்காட்டி சும்மா போய் சுத்திட்டாச்சும் வருவோம். ஏன்னா பத்து நாள் அந்த பக்கம் போகலைன்னா கிறுக்கு புடிச்ச மாதிரி ஆயிரும்.

மாசிவீதி, ஆவணிவீதி, சித்திரைவீதி, மாரட்வீதி, மேஸ்திரி வீதின்னு எதாவது ஒரு வீதியில என்னைய பாக்கலாம். பானிபூரி, மிளகாபஜ்ஜி, கீரவடை, பணியாரம், தென்னங்குருத்து, ஜிகர்தண்டா, பன்னீர்சோடா, ரோட்டோர இட்லிகடை இங்கன தான் திரிவேன்.
மதுரைக்கு ‘விழாமலி மூதூர்’ன்னு ஒரு பேர் இருக்கு. வருசத்துல எல்லா மாசமும் இங்க எதாவது ஒரு விழா நடந்துட்டே இருக்கும். திடீர்ன்னு ஒரு கூட்டம் வைகை ஆத்துக்குள்ளயிருந்து(யானைகல்லு தரைப்பாலத்து கிட்டதான்) பால்குடம், முளைப்பாரின்னு கிளம்பி வருவாங்க.நையாண்டி மேளம், தப்பாட்டன்னு வச்சு போனாங்ஙன்னா நானும் வேடிக்கை பார்க்க கூட போயிருவேன்.
வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் (இவர்கள் தான் உண்மையான கலை இரசிகர்கள்), பிறமாநிலத்தவர்கள், மதுரைக்காரர்கள், நடைபாதை சிறுவியாபாரிகள், பக்தர்கள், எளியவர்கள், முதியவர்கள், வசதி படைத்தவர்கள், தேவதைகள், பிச்சைக்காரர்கள் இவர்களோடு நானும் வீதிகளில் சுற்றிக்கொண்டே திரிகிறேன்.

ஓடி விளையாடிய
ஆடி வீதிகளும்
சித்திரம் பழகத்தூண்டிய
சித்திரை வீதிகளும்
தாவணி பார்த்தலைந்த
ஆவணி வீதிகளும்
வாசித்து திரிந்த
மாசி வீதிகளும்
களிப்பூட்டும்
வெளி வீதிகளும்
மறக்குமென்றால்
மரிக்கிற அன்றாயிருக்கும்.
-சித்திரவீதிக்காரன்

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் மதுரை வாசகன் / சித்திர வீதிக்காரன்

  நேற்று ‘தமிழ் நாட்டில்’ புத்த்க வெளியீட்டு விழாவில் சந்தித்தோம் – நினைவிருக்கும்.

  மதுரை வீதிகளின் மலரும் நினைவுகளைத் தூண்டி வீடமைக்கு நன்றி. அருமையாக எழுதப்பட்ட இடுகை. வீதிகளின் சிறப்பை வெளிப்ப்டுத்தும் கவிதை அருமை.

  நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா – 98406 24293

 2. சுட்டபழம் சொல்கிறார்:

  நண்பா அடுத்த தடவ கோச்சட பக்கமும் நடந்து வாங்க ;-))

 3. […] பெரும்பாலும் பயணிக்கிறது. மதுரை வீதிகளிலும், மலைகளிலும், கிராமங்களிலும் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s