தொ.பரமசிவன் அய்யாவிடம் பெற்ற கையொப்பம்

Posted: நவம்பர் 11, 2010 in பார்வைகள், பகிர்வுகள்

ஐந்தாவது மதுரை புத்தகத்திருவிழாவில் பாரதி புத்தகாலய அரங்கில் நின்று கொண்டிருந்தேன்.ஒருவர் அந்த அரங்கில் நுழைய புகைப்படக்காரர் அவரை புத்தகத்தை கையில் வைத்தபடி நிற்க சொல்லிக்கொண்டிருந்தார். திரும்பி பார்த்தால் தொ.பரமசிவன் அய்யா நின்று கொண்டிருந்தார். எனக்கு மேனியெல்லாம் சிலிர்த்து புல்லரித்துவிட்டது. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர் புத்தகதிருவிழா அலுவலக அறையில் நுழைந்ததும் அவரிடம் ஒரு புத்தகத்தில் கையொப்பம் வாங்க நினைத்து சிங்கிஸ் ஜத்மாதவ் எழுதிய ஜமீலா என்ற புத்தகத்தை வாங்கினேன்.

அலுவலக அறையை விட்டு அய்யாவும் அவரது துணைவியாரும் வெளியே வந்ததும் அருகில் போய் வணக்கம் சொன்னேன். அவரும் நல்லாயிருக்கீங்களா? என கேட்டதும் உச்சி குளிர்ந்துவிட்டது. அவர் எழுதிய ‘’பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், சமயம், தெய்வம் என்பதோர்’’ எல்லாம் வாசித்ததாக சொன்னேன். இதை தவிர பரிசல் வெளியீடாக சமயங்களின் அரசியல் என்ற புத்தகம் இப்போது வந்திருப்பதாக சொன்னார். பிறகு வாங்கிய புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையொப்பம் வாங்கினேன். வாழ்த்துகளுடன் தொ.பரமசிவன் என்று கையொப்பம் போட்டிருந்தார். அவர் புத்தக திருவிழா அரங்கிற்குள் செல்ல நான் அவரிடம் விடைபெற்று வந்தேன்.

அவரிடம் கையொப்பம் பெற்று பேசியதை எண்ணி நானாக சிரித்துக்கொண்டே நடந்தேன். இரண்டாவது புத்தக திருவிழாவில் முதன்முதலாக தொ.ப அய்யாவைப் பார்த்தேன். நான்மாடக்கூடல் என்ற அரங்கு திறந்த அன்று சங்ககால மதுரை என்ற தலைப்பில் பேசினார். அன்றிலிருந்து அவரிடம் பேசி ஒரு கையொப்பம் பெற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இந்த ஆண்டு நிறைவேறியது.

பின்னூட்டங்கள்
 1. palanikumar சொல்கிறார்:

  Hi,

  Finally today I find a time to visit ur address. Really Superb. All the best.

  Others will speak directly.

  with love,
  Palani.

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் மதுரை வாசகன்

  மூன்றாண்டு கால ஆசை நிறைவேறியதை அழகாக இடுகையாக்கியது நன்று – இரசித்தேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s