மதுரையை பெரிய கிராமம் என்றால் அது மிகையாகாது. பெருந்தெய்வங்களைவிட எளிய இம்மண்ணின் தெய்வங்களையே மக்கள் இன்றளவும் விரும்பி வணங்கி வருகிறார்கள். மதுரை பாண்டிமுனி கோயிலை பற்றி எல்லோரும் அறிந்திருப்பார்கள். பாண்டிமுனியை பற்றி பல கதைகள் உலவி கொண்டிருக்கின்றன. “அவர் மகாகோவக்காரரு, அவர கட்டி போட்டிருக்கிற சங்கிலி அவுந்தா ஒலகம் அழிஞ்சிரும்” அப்படின்னு சிறு வயதில் கேள்விபட்டிருக்கேன். பாண்டிகோயிலுக்கு சின்ன வயசுல போகும்போது ஆடு வெட்டுறத பாத்த ஞாபகம்.
கல்லூரியில் படிக்கும் போது பேருந்து அந்த வழியாகத்தான் போகும். அச்சமயங்களில் பெண்கள் பேருந்து மேலமடையை தாண்டியதும் திடீரென சாமிவந்து கத்துவார்கள். நிறுத்தம் வந்ததும் இறங்கி ஓடுவார்கள். நானும் என் நன்பனும் சிலமுறை சென்றிருக்கிறோம். என்னுடைய தொழில்நுட்பகல்வி சான்றிதழை பாண்டி கோயிலில் பாண்டி காலடியில் வைத்து வணங்கி வாங்கி வந்தேன்.இன்றும் மதுரையை விட்டு பாண்டிமுனி போல எங்கும் போகாமல் இருக்கிறேன்.
அங்கு போனால் கட்டாயம் யாராவது சாமி வந்து ஆடிக்கொண்டோ, கத்திக்கொண்டோ இருப்பதை பார்க்க முடியும். இவர்கள் உன்மையாகவே தங்களை அறியாமல் தான் ஆவேசங்கொண்டு கத்துகிறார்கள்.ஆடுகிறார்கள். நான் ஒருமுறை சென்ற போது பதினைந்து வயது பெண் தன்னை அறியாமல் ஆடிக்கொன்டு இருந்தாள். ஒரு இருவது வயது பெண் தன்னை மீறி அழுது கொண்டிருக்கிறாள். அதுவும் வசதியான குடும்பப்பெண்.வயதான பெண்கள் சிலர் ஆடிக்கொண்டு இருந்தாகள். இவர்கள் யாரும் நடிக்கவில்லை. தன்னை அறியாமல் அவர்கள் உள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி அப்படி செய்ய வைக்கிறது. சங்க காலத்தில் ஆடிய வெறியாட்டத்தின் எச்சமாயிருக்கலாம். அல்லது அடங்கி கிடக்கும் பெண்களின் மனஎழச்சியாககூட இருக்கலாம். இதைப் பற்றி தேடிப்படிக்க வேண்டும்.
பாண்டியை தங்கள் குலதெய்வமாக கொண்ட மக்கள் இங்கு தங்கள் குழந்தைகளுக்கு மொட்டையெடுத்து காதுகுத்தி தங்கள் உறவினர்களை அழைத்து ஆட்டுக்கிடா வெட்டி கும்பிடுகின்றனர். கோயிலில் உள்ளே சென்று நமது நாயகன் பாண்டிமுனியை கானும் போது முறுக்குமீசையுடன் அழகாக அமர்ந்திருக்கிறார். நமது முன்னோராகத்தான் பாண்டி இங்கு இருக்கிறார். நம்ம தாத்தாவை பார்த்தது போல ஒரு திருப்தி மனசுக்குள் எழுகிறது.சன்னதிக்கு நேரே நடந்தால் நடுப்பாண்டி மற்றும் கடைப்பாண்டியை காணலாம்.
கடைப்பாண்டி கோயில்லாம் சீமகருவல காட்டுகுள்ள இருக்கு. போக பாதை நன்றாகத்தான் இருக்கு. கடைசிப்பாண்டி சன்னதியில் இடை வரை உள்ள சிலை தான் உள்ளது. பாண்டிகோயிலுக்கு ஞாயிறன்று நிறைய பேர் வருகின்றனர்.எளிய மக்கள் இங்கு குடும்பத்தோடு வந்து மொட்டையெடுத்து பொங்கல் வைத்து வழிபட்டு செல்வதை காணவே ஆசையாக இருக்கும்.
பாண்டிகோயிலுக்கு சென்று திரும்பும் போது நமது வேர் இன்னும் வலுவாக உள்ளதை காணலாம். நமது நாட்டுப்புற தெய்வங்கள் உள்ள வரை தமிழர் பண்பாடு நிலைத்து நிற்கும்.
super……….. naan santhosamaga irukiren. intha nanban pol veru oruvanum illai
அன்பின் மதுரை வாசகன் , அருமை அருமை – மதுரை மண்ணின் பழம்பெரும் கிராம தேவதையினை பற்றிய இடுகை அருமை.
//சங்க காலத்தில் ஆடிய வெறியாட்டத்தின் எச்சமாயிருக்கலாம். அல்லது அடங்கி கிடக்கும் பெண்களின் மனஎழச்சியாககூட இருக்கலாம். இதைப் பற்றி தேடிப்படிக்க வேண்டும்.// – சங்க காலம் துவங்கி தற்காலம் வரை அறிந்து – படித்தவற்றை மறக்காமல் ஆங்காங்கே ப்யன் படுத்துவது நன்று. திறமை பளிச்சிடுகிறது.
//என்னுடைய தொழில்நுட்பகல்வி சான்றிதழை பாண்டி கோயிலில் பாண்டி காலடியில் வைத்து வணங்கி வாங்கி வந்தேன்.இன்றும் மதுரையை விட்டு பாண்டிமுனி போல எங்கும் போகாமல் இருக்கிறேன்.// வாழ்க வளமுடன்.
நட்புடன் சீனா