சதுரகிரி பட்டிமன்றம்

Posted: திசெம்பர் 1, 2010 in ஊர்சுத்தி

செவனேன்னு சிவன் பாட்டுக்கு சதுரகிரி காட்ல போயி உட்கார்ந்துட்டா நாம விட்டுருவமா? பொட்டணத்துல சோத்த கட்டிட்டு, ப்ளாஸ்டிக் பாட்டில்ல தண்ணிய பிடிச்சுட்டு போய் அந்த மலைய ஒரு வழி பண்ணிரமாட்டோம்? அப்படித்தான் நானும் இந்த வருசம் போனேன்.

தாணிப்பாறைல பஸ்ஸ விட்டு இறங்குனதும் மலை ஏற தொடங்கிட்டோம்.விடாப்புடியா ஏறுனா மூன்றரைமணி நேரத்துல ஏறிறலாம். நாங்க ஏற நாலரை மணி நேரமாச்சு. சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கமெல்லாம் கும்பிட்டு முடிக்க இருட்டிருச்சு. இரவு அங்கயே தங்கலாம்னு கொட்டகை,மேடைலாம் போட்டுருந்த இடத்துகிட்ட இடம் பிடித்தோம். மேடைக்கு கீழ கொஞ்சம் சாணி காஞ்சும் காயாமலும் கெடந்துச்சு. அதலாம் தூக்கி போட்டுட்டு பேப்பர விரிச்சு படுத்துட்டோம்.

கொஞ்ச நேரத்துல மேடைகிட்ட ஸ்பீக்கர கொண்டு வந்து சாமி பாட்டு போட்டாங்க. சரி பத்து மணிவரை பாட்டு போடுவாங்க அப்புறம் நிம்மதியா தூங்கலாம்ன்னு பகுமானமா படுத்துக்கிடந்தேன்.அப்ப மைக்ல ஒரு அறிவிப்பு செஞ்சாங்க. சற்று நேரத்தில் புதிய பாடலா, பழைய பாடலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் என்றார்கள். மேடைக்கு கீழதான் நான் படுத்திருந்தேன். எனக்கு பகீர்ன்னு ஆயிறுச்சு. அதவிடக்கூத்து என்னான்னா ரெண்டு பாட்டிங்க மேடைக்கு அடியிலயே படுத்துருந்தாங்க.

வெள்ளயும் சொள்ளையுமா ஒருத்தர் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்கன்னு சொன்னார். மேடை ஏறினதும் தான் தெரிந்தது அவர் நடுவர்ன்னு. தலைமை ஏற்றவர் சதுரகிரி பெருமைகளை கூறிவிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு நடந்து வந்திருப்பீங்க, அதனால உட்கார்ந்து கேட்க முடியாட்டி படுத்துட்டு கூட கேளுங்கன்னார். நானும் படுத்துட்டே கேட்டேன். இரவு 12 மணிப்போல பட்டிமன்றம் முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன். இனியாவது தூங்கலாம்ன்னு பாத்தா கூதல் பிரிச்சு எடுத்துருச்சு. நானு ஆறடி சால்வையோ நாலடி. இரவு முழுக்க காத்து அடிக்கும் போது நடுங்கிட்டே கிடந்தேன்.


(நன்றி: தினமலர்)

அதிகாலை எழுந்து மலைய பார்த்தா மலையே லிங்கம் போலவும் நிலா பிறைப்போல மலை மீது ஒட்டி இருந்தது. மீண்டும் ஒருமுறை சுந்தர மகாலிங்கத்த பார்த்துட்டு கிளம்பிட்டோம். இறங்குறது தான் பெரும்பாடு. இறங்குறவங்க மொது மொதுன்னு இறங்குனா சின்ன பாதை தாங்குமா? ரொம்ப நேரம் நின்னு நின்னு இறங்குனோம். கீழ போயி அன்னதானத்துல சோத்த வாங்கி சாப்பிட்டு பஸ் ஏறிட்டோம்.

சதுரகிரிக்கு ஏழை,பணக்காரன் எல்லாம் ஒண்ணா ஏறித்தான் வரனும் வேற வழியில்ல. அதான் சிறப்பு. கோயில் பல மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. அங்குள்ள மலைவாழ் மக்கள் சுமையாக பொருள்களை மேலே கொண்டு போவதை பார்த்தா நாம எவ்வளவு சொகுசா ஏறிமட்டும் போறோம்ன்னு புரியும்.

இன்றும் சதுரகிரிய நெனைச்சா அந்த பட்டிமன்றம் தான் ஞாபகம் வருது. அந்த நடுவரும் நாலு பட்டிமன்றத்துல இதச்சொல்லி மக்கள சிரிக்க வைப்பார்ன்னு நினைக்கிறேன். சிவனே நம்ம ஊர்ல நிறைய கூத்து போட்டுருக்காரு. அவர பாக்க போய் நமக்கு நடந்த கூத்து தான் இந்த பயணமும், பட்டிமன்றமும்.

பின்னூட்டங்கள்
  1. pon சொல்கிறார்:

    அதிகாலை எழுந்து மலைய பார்த்தா மலையே லிங்கம் போலவும் நிலா பிறைப்போல மலை மீது ஒட்டி இருந்தது…

    oh…..nice….கட‌ந்தேரிவிட்டீர்கள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s