தெய்வம் என்பதோர் _தொ.பரமசிவன்

Posted: திசெம்பர் 1, 2010 in வழியெங்கும் புத்தகங்கள்

எல்லோரும் புத்தகங்களிலிருந்தும் தத்துவங்களிலிருந்தும் வாதங்களை வைத்துக் கொண்டிருந்த சூழலில் தமிழ்நாட்டுத்தெருக்களில் கோயில் வாசல்களில் பிரகாரங்களில் ஆற்றங்கரை கிணற்றடிகளில் சாவு வீட்டு முற்றங்களில் நாட்டார் தெய்வப் பீடங்களில் முன் நின்று எனத் தமிழ் மண்ணின் புழுதி படிந்த வார்த்தைகளில் தொ.ப. பேசினார். அவரது குரல் ஆய்வுலகில் முற்றிலும் புத்தம் புதிய குரல். அவரது கட்டுரைகள் ரெண்டு மூணு பக்கம் தான். அவை ஒவ்வொன்றும் வாசக மனதில் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஆழமானவை.

   _அணிந்துரையில் ச.தமிழ்ச்செல்வன்

தொ.பரமசிவன் அய்யாவின் உரையை மூன்றுமுறை மதுரைப்புத்தக திருவிழாவில் கேட்டிருக்கிறேன். அவரது உரையை கேட்டபின் நாட்டுப்புறவியல் மற்றும் சங்க இலக்கியம்  மீதான ஆர்வம் அதிகமானது. தொ.ப. அய்யாவின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியது பெரும் பாக்கியம். தெய்வம் என்பதோரில் தாய்த்தெய்வங்களில் தொடங்கி பெரியாரியப்பார்வையில் சமய நல்லிணக்கம் வரையிலான பதினைந்து கட்டுரைகளும் தெய்வம், சமயம் தொடர்பாக நம் மனதில் புத்தொளி பாய்ச்சுகிறது.

(இப்படம் பாமரன் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி)

தாய்த்தெய்வம் கட்டுரையில் நவராத்திரி எட்டாம் திருநாளில் மீனாட்சி வேப்பம்பூ மாலை சூடுவதிலிருந்து பாண்டியர்களின் குலதெய்வமாக சிலப்பதிகாரம் குறிப்பிடும் தென்னவன் குலமுதல் கிழத்தி மீனாட்சியாக இருக்க வேண்டும் என்கிறார். பாண்டியர்களின் குடிப்பெயரான வேம்பன் என்பதையும், வேப்பம்பூ மாலை அவர்களின் அடையாளம் என்பதையும் நினைவூட்டுகிறார்.

ஒரு சமணக்கோயில் என்ற கட்டுரையில்

சிங்கிகுளம் மக்கள் சமணப்பள்ளியை பகவதி அம்மன் கோயிலாக்கி வாழ வைத்திருக்கிறார்கள். அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும்,அழிப்பதும் அரசர்களும்,அமைச்சர்களும்,அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒரு போதும் செய்யமாட்டார்கள்

என்கிறார். இவரது களஆய்வு நம்மை புதிய களத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும் கட்டுரையில்

அரசுப்பிறப்பு, அரசதிகாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது இராமாவதாரம். அன்றும் இன்றும் அரசியல் அதிகார வேட்கையினை உடையவர்கள் இராமாவதாரத்தினைக் கொண்டாடுவதன் உட்கிடக்கை இதுவேதான். அதனை விடப் புற அழுக்கு நிறைந்த வாழ்க்கை அசைவுகளையுடைய கிருஷ்ணாவதாரத்தையே வைணவர்கள் கொண்டாடுகின்றனர்

தமிழ்நாட்டு வைணவம் பற்றிய இவரது கட்டுரைகள் நாம் படிக்க வேண்டியவை.

மேலும் பழையனூர் நீலி, உலகம்மன், வள்ளி, ஆண்டாள், வள்ளலார், பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும், மரபும் மீறலும் சாதி சமய அரசியல் பின்னணி பற்றிய கட்டுரைகளும் மற்றும் பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் அவரது அனுவத்தால் ஆழமான கருத்துக்களை கொண்டு எளிமையாக இருப்பதே இதன் சிறப்பு. நம்ம கமல்ஹாசனே மக்களின் தெய்வங்கள் பற்றி பேசுவதற்கு தொ.ப.அய்யாவின் தாக்கம் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கட்டாயம் நாம் வாசிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று.

யாதுமாகி பதிப்பகம், விலை 50 ரூபாய்

பின்னூட்டங்கள்
 1. sivakumar சொல்கிறார்:

  please say where and how can i get மக்களின் தெய்வங்கள் , in which shop please , i tried a lot but i cant buy this book

 2. Dinesh Babu சொல்கிறார்:

  Can you please give contact number for yathumagi pathipagam. I’ve tried so many shops but i’didn’t get any yathumagi pathipagam books. I’ve send aletter to them but i didn’t get any reply. I need this book. can you please help me on this.

  • பொட்டிதட்டி சொல்கிறார்:

   யாதுமாகி பதிப்பகம் தொ.ப அய்யாவின் முகவரி போல உள்ளது. 37/17, இராமசாமி கோயில் சன்னதி தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002 என்ற முகவரியா அல்லது 29ஏ யாதவர் கீழத்தெரு என்று ஒரு முகவரி உள்ளதே அதுவா என்று தெரியவில்லை. அதுபோல அய்யாவின் தொடர்பு எண்களாக 94434 86285 அல்லது 94895 25901 ஆகியவை தேடலில் கிடைக்கின்றன. இரண்டையும் முயற்சிக்கலாம் அல்லது தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

   • Dinesh babu சொல்கிறார்:

    அய்யாவின் எல்லா புத்தகமும் மணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது .
    நான் எல்லா புத்தகங்களையும் ஆர்டர் செய்து விட்டேன். உங்கள் தகவுலுக்கு மிக்க நன்றி .

  • ‘தெய்வம் என்பதோர்’ மற்றும் ‘வழித்தடங்கள்’ மணி பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

   மணி பதிப்பகம், 29ஏ, யாதவர் கீழத் தெரு,
   பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627002

   தொலைபேசி 0462 – 2560083

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s