தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்

Posted: திசெம்பர் 1, 2010 in வழியெங்கும் புத்தகங்கள்

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஓர் பறவை தான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை. இனி என் பயணங்களில் நான் தங்கப்போகும் கிளைகளில் என் அருமைத்தம்பியின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.                                               

 -அன்பேசிவம் பட இறுதிக்காட்சியில் கமல்ஹாசன்.

என்னுடைய தேசாந்திரி புத்தகப் பிரதியின் முதல் பக்கத்தில் மேலே உள்ள வரிகளை தான் எழுதி வைத்திருப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனும் தேசாந்திரியில் இப்படி தான் பயணித்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணனின் பயணங்கள் தான் அவரது எழுத்தை இவ்வளவு அழகாக்குகிறது என நினைக்கிறேன். இந்த புத்தகத்தை இருபது முறைக்கு மேல் வாசித்திருப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனின் மொழி அவ்வளவு லாவகமானது.                 இவை பிரமாண்டங்களை நோக்கி பயணித்த பயணியின் பயணக்கட்டுரைகள் அல்ல. நாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் சமணர்படுகைகள்,நூலகம்,சிற்பங்கள்,ஓவியங்கள் மற்றும் இயற்கையின் அற்புதங்களை நமக்கு நினைவூட்டுகிறார். இதை வாசித்து முடித்த பின் வெயில்,மழை,மேகம்,கடல்,மலை எல்லாம் உங்கள் நண்பர்களாகிவிடுவார்கள்.

நல்லதங்காள் கிணற்றை பார்ப்பதற்காக விருதுநகர் சென்றது, மழையை காண்பதற்காக லோனாவாலா சென்றது, மேகங்களை பார்க்க மூணாறு சென்றது, சமணர்படுகைகளை காண மதுரையை சுற்றிய குன்றுகளுக்கு சென்றது, கணிதமேதை இராமானுஜம் வீட்டைக்காண கும்பகோணம் சென்றது, கூவாகம் திருவிழா பார்க்க விழுப்புரம் சென்றது என நாம் பயணிக்க நினைக்காத இடங்களுக்கெல்லாம் பயணம் செய்து நம்மையும் தன் எழுத்தின் மூலம் அந்த இடங்களுக்கெல்லாம் அழைத்து செல்கிறார்.

எல்லா நாகரிகத்தையும் தாண்டி இன்னமும் நமது நிறைய கிராமங்கள் இயற்கையை மட்டுமே நம்பி இருக்கின்றன. எல்லா அழிவுகளையும் தாண்டி இயற்கை தங்களைக் காப்பாற்றிவிடும் என்று நம்புகிறார்கள்

என மழையில்லாமல் போனதால் தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்த கிராம மக்களின் நம்பிக்கையை வியக்கிறார் (மழை அன்று பெய்ததையும் பதிவுசெய்திருக்கிறார்).

கோழிக்குஞ்சுகளுக்குக் கூட நீலம்,மஞ்சள்,சிவப்பு என நிறம் மாற்றி பூசி விற்கத் தொடங்கிவிட்ட வணிக உலகில் கலைகள், சிற்பம், பாரம்பரிய இசை என்று பேசுவது கூட பைத்தியகாரத்தனமானதாக கருதப்படும். ஆனாலும், காலத்தில் நாம் எதையல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத்திரும்ப நிரூபித்து வருகிறது

என கங்கை கொண்ட சோழபுரத்தின் கலையழகை நம்மவர்கள் காணாதிருப்பது கண்டு ஆதங்கப்படுகிறார்.

டீக்கடைகளை விடவும் அதிகமாக பாலர் பள்ளிகள் பெருகிவிட்டன, கோழிப்பண்ணைகளைவிட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கின்றன என்றால், கல்வி வளர்கிறது என்று அதற்கு அர்த்தம் இல்லை. டீக்கடையைவிட,கோழிப்பண்ணையைவிட கல்வி அதிக வருமானம் தரும் வணிகமாகிவிட்டது என்பதே பொருள். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு இருக்கும் இந்தக்கல்விச் சீர்கேடு, நோய்க்கிருமியை விடவும் மிக ஆபத்தானது

என சிதைந்து போன நாலாந்தா பல்கலைக்கழகத்தை பார்த்து இன்றுள்ள கல்வியின் அவலத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரைக்கு முன்னாலும் ஒரு எழுத்தாளரின் கவிதை உள்ளது.எல்லாமே அற்புதமான கவிதைகள். உதாரணத்திற்கு ஒரு கவிதை:

அலைகளைச் சொல்லி

 பிரயோஜனமில்லை 

கடல் இருக்கும்வரை.

-நகுலன்

 

ஓவியர் மகி இதிலுள்ள 41 கட்டுரைகளுக்கும் பொருத்தமாக ஓவியம் வரைந்திருக்கிறார். இப்புத்தகத்தை படித்தபின் தான் மதுரையில் சமணர் படுகைகளையெல்லாம் பார்த்தேன். இயற்கையோடும், கலைகளின் மீதும் எனக்கிருந்த பார்வையை இப்புத்தகம் இன்னும் தெளிவாக்கியது. எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஒரு முறை பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. தினசரி நாம் வாசிக்க வேண்டிய புத்தகங்களுள் இதுவும் ஒன்று. நிறையப்பேருக்கு  கல்யாணப்பரிசாக இப்புத்தகத்தைத்தான் வாங்கி கொடுத்திருக்கிறேன். இப்புத்தகம் கட்டாயம் உங்களையும் பயணிக்க வைக்கும் என நம்புகிறேன். 

தேசாந்திரிவிகடன் பிரசுரம் 120 ரூபாய்

பின்னூட்டங்கள்
  1. \\எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஒரு முறை பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது\\ – ஆசை நிறைவேறிவிட்டது.
    மதுரையில் பெரும்பாலான மலைகளில் காணப்படும் சமணர் படுகைகள், கல்வெட்டுக்களை பார்க்கவும், பாதுகாக்கவும் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் தீவிர முயற்சியால் ‘பசுமைநடை’ என்று ஒரு குழுவாக மாதமொருமுறை பயணித்து வருகிறோம். இம்முறை எங்களுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வந்திருந்தார். வரிச்சூர் சென்ற அந்த பயணத்தை தன் தளத்தில் சமணநடை என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். அதற்கான இணைப்பு http://www.sramakrishnan.com/?p=2562
    எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பயணித்தது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. மறக்க முடியாத பயணம். நன்றி.

    http://www.sramakrishnan.comnan.com/?p=2562

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s