மாவீரர் உரைகள்… நேர்காணல்கள்…

Posted: திசெம்பர் 1, 2010 in வழியெங்கும் புத்தகங்கள்

பிரபாகரனுக்குச் சித்தாந்தப் புரிதல் கிடையாது என்பவர்கள் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சீறிக் கிளம்பிய இந்தப் புலியிடம் ஆக்ரோஷம் மட்டுமல்ல; அறிவுசார் அரசியலும் நிறைந்திருந்தது.

ஒரு விடுதலை இயக்கத்தின் வேட்கையும், போராட்டப் பாதையும் தீர்மானிக்கப்படுவது அந்த மண்ணால்…மக்களால்.

வன்முறைக்குத் தீர்வு அதைவிடப் பெரிய வன்முறை என்கிற வார்த்தைகளுக்குள் ஒளிந்திருப்பது ஓர் இனத்தின் உரிமைக்கும் உயிருக்குமான ஏக்கம் என்பதைச் சமரசம் இன்றி எடுத்துவைக்கிறான் இந்தச் சமர் வீரன்.
முழுமுற்றாக ஓர் இனத்தை அழிக்கத் துடித்த அதிகார வெறி ஆட்டத்தை எதிர்கொள்ள விடுதலைப்புலிகள் முன்னெடுத்த போர்ப்பாதை நியாயமானது என்பதைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதிப்படுத்துகிறார் பிரபாகரன்.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் வீரன் நமக்கு ஈந்த போராட்ட ஆவணம், பிரபாகரனின் 20 வருடப் பேச்சும், நேர்காணலும் எந்த நூற்றாண்டுக்கும் உலகத் தமிழர்களுக்கு உரிமைப்பாடம்.
_ஆனந்தவிகடன் 02-12-09

விகடன் வரவேற்பறையில் இந்த புத்தகம் பற்றி படித்து மதுரைப்புத்தக திருவிழாவில் வாங்கினேன். பிரபாகரன் பேரை உச்சரிக்கும் போதே மேனி சிலிர்க்கிறது. ஆனால் இப்பொழுது இறையாண்மை இறையாண்மையென்று பேராண்மையை இழந்து விட்டோமோ என்ற இயலாமை தான் நெஞ்சை குடைகிறது. சிங்கள நாடாகவே இலங்கையை ராட்சசபக்சே மாற்றி கொண்டு வருகிறான். மாவீரர் தினத்தன்று பிரபாகரன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையும் கானல்நீராகி கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. எப்படியும் இருளைக்கிழித்து வெள்ளி முளைக்கும் அதுவரை நம்பிக்கையோடு காத்திருப்போம்.

இந்நூலில் பிரபாகரனது மாவீரர் தின உரைகள், நேர்காணல்கள், சிந்தனைகள் எல்லாம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தமிழர்கள் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம். அண்ணனது கருத்துக்களை,சிந்தனைகளை இனி காணலாம்.

ஒரு நேர்காணலில் 1958ல் நடந்த இனக்கலவரத்தின் போது சிங்கள இன வெறியர்கள் சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்கள், அப்பாவி தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்கொலைகள்,கற்பழிப்புகள் தம் மனதை பாதித்ததாக கூறியிருக்கிறார். எனவே ஆயத வலிமையை பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று தான் ஆழமாக உணர்ந்ததாக கூறுகிறார்.

நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம். சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில் அவர்களது சுதந்தரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு ‘தேசிய மக்களினம்’ என்ற அந்தஸ்துடன் நிம்மதியாக, சுதந்திரமாக கௌரவத்துடன் வாழ விரும்புகின்றோம். ‘’எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள்’’ என்பதுதான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாசை. இந்த நியாயமான, நீதியான, நாகரீகமான எமது மக்களின் வேண்டுகோளை சிங்கள அரசு எப்பொழுது அங்கீகரிக்கிறதோ அப்பொழுதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு. (1991 மாவீரர் தின உரையில்)

• சத்தியத்திற்காக சாகத்துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தை படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள்.

• இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.

• மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

• நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே; செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்.

• மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை.அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

• பெண் விடுதலை என்பது அரச அடக்கு முறைகளிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலருந்தும் விடுதலை தெறுவதாகும்.

• கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்க தூண்ட வேண்டும்.பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும். மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

தொகுப்பாசிரியர்: கு.பூபதி, தோழமை வெளியீடு, 300 ரூபாய்

பின்னூட்டங்கள்
  1. gell prabhakaran சொல்கிறார்:

    very truthful message.Every tamil people have known these tamil Eelam tigher captian velupillai prabhakar speach of Mhaveerar dhinam. thank you for your desire and your love of motherland.
    thank yor very much.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s