மனங்கவர்ந்த கலெக்டரின் உரை

Posted: திசெம்பர் 18, 2010 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

அரசு, அரசர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள்(அடிமட்ட ஊழியர்கள் தவிர) என்றாலே எனக்கு அலர்ஜிதான். ஆனால், எல்லா இடத்திலும் நல்ல மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா? அப்படி எனக்கு மிகவும் பிடித்த மனிதர் தான் உதயசந்திரன்.

2006ல் மதுரையில் கலெக்டராக இருந்த போது முதன்முதலாக புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்தவர் நம் இதயங்கவர்ந்த உதயசந்திரன். 2007ல் புத்தகத்திருவிழாவில் நான்மாடக்கூடல் என்ற அரங்கை திறந்து வைத்து பேசிய போது மதுரையை “தமிழ்நாட்டின் பண்பாட்டுதலைநகரம்” என்றார்.  2008ல் மதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் உதயசந்திரன் அவர்கள்  மதுரையைப் பற்றி ஆற்றிய உரையை நாட்குறிப்பேட்டில் பதிந்து வைத்து இருந்தேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன். 

“வரலாற்றை தன்னகத்தே கொண்ட மதுரையை பற்றி நாம் மணிக்கணக்கில் நாள்கணக்கில் பேச வேண்டும். ஆனால், இன்று நான் வந்த விமானம் தாமதமாகவும் துரதிஷ்ட வசத்தின் உச்சமாக செல்ல வேண்டிய விமானம் சரியாக கிளம்புவதால் மூதூர் மதுரை பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்.

இருண்ட காலத்தில் தமிழுக்கு பௌத்தமும் சமணமும் செய்த உதவிகள் சொல்லிமாளாது. ஆனால் பின்னர் அவை எவ்வளவு அலைக்கழிக்கப்பட்டன என்பதும் நாம் அறிவோம். சமணம் கொங்கு பகுதி வழியாக தமிழகத்திற்குள் வந்தது. சந்திரகுப்த மௌரியர் சரவணபெலகொலாவில் வடக்கிருந்து உயிர் நீத்த பொழுது சமணம் தமிழகத்திற்குள் வந்தது. இன்னும் தமிழகத்தின் வடக்கு பகுதியில் சமணத்தின் எச்சங்களும் தென் பகுதியில் சோகம் தோய்ந்த எச்சங்களும் இன்னும் இருக்கின்றன. சீனாபுரம் மற்றும் விஜயமங்கலம் (முன்னால் வாகை) சமணக்கோயில்கள் இன்றளவும் உள்ளன.பௌத்தர்களையும் சமணர்களையும் கழுவேற்றி கொலை செய்த இடம் மதுரை. இன்னும் அந்த ரத்த துளிகள் மண்ணில் உள்ளன  என்பதை மறுக்க முடியாது.

சமீபத்தில் படித்த ஒரு புத்தகம் மார்க்கோபோலோவின் பயணகுறிப்புகள். அதில் மதுரையை பற்றி வரும் செய்திகள் நமக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. வெனீஸ் நகர வணிகனான மார்க்கோபோலோ சிலோன் வழியாக (அவனால் ஜெயிலோன் என்று அழைக்கப்பட்ட பகுதி) மதுரை வந்தான். அன்று மதுரையில் முத்துகுளித்தல் மிக சிறப்பாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் முத்துகுளிப்பவர்களிடம் கடலுக்குள் விலங்குகளால் ஆபத்து ஏற்படாமலிருக்க மந்திரம் ஓதுகிறோம் என கட்டுக்கதை கூறி வரியாக முத்தை பெற்றிருக்கிறார்கள். அப்போது மக்களிடம் தரையில் விரிப்பு போடாமல் அமரும் பழக்கம் இல்லை, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது மற்றும் நேர்மையான மக்கள் என்று குறிப்பும் வருகிறது.  வாங்கிய கடனை கொடுக்காவிட்டால் கடன் கொடுத்தவன் கடன் வாங்கியவன் வரும் பொழுது நடுத்தெருவில் ஒரு கோடு போட்டால் அதை தாண்டி செல்லக்கூடாது என்ற மரபு இருந்திருக்கிறது. இதற்கு அரசனும் ஒருமுறை அடிபணிந்தான் என்ற குறிப்பும் வருகிறது. எண்ணூறு ஆண்டுகளுக்குமுன்பே ராகுகாலம் பார்க்கும் மூடநம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.

 பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பின் விஜய நகர பேரரசின் உச்சமும் பின்பு நாயக்கர்களின் ஆதிக்கமும் இருந்திருக்கிறது. விஜயநாத நாயக்கர் காலத்தில் 72 பாளையங்களும் அதற்கு 72 கொத்தளங்களும் கட்டப்பட்டுள்ளன. பின்பு ராணிமங்கம்மாள் முதல் பலர் ஆண்டு இருக்கிறார்கள். மதுரை பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்த பொழுது கலெக்டர் பிளாக்பர்ன் பல புதிய முடிவுகள் எடுத்து மதுரையின் கதாநாயகன் ஆகியிருக்கிறார். மதுரையை சுற்றி இருந்த கல்கோட்டையை இடிக்க முடிவு செய்தார். 15அடி அகலமும் 24அடி உயரமும் கொண்டு பல மைல் நீண்ட கோட்டையை இடிக்க முடிவுசெய்தார்.மதுரையின் உருவகம் அழிந்து விடுமோ என பலர் அஞ்சனர். திருமலை நாயக்கர் கட்டிய வசந்த மண்டபத்தில்(புது மண்டபம்) ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் பிளாக்பர்ன். அதை இடித்து வரும் கற்களை அவர்களே எடுத்துகொள்ளலாம் என அறிவித்தார். அப்படி அறிவித்த பிறகு மக்கள் ஒப்புக்கொண்டு இடித்து எடுத்தனர். இதற்கு உதவியவர்கள் சர்வேயர் மாரட் என்பவரும், மேஸ்திரி பெருமாளும். அவர்கள் பெயரால் இன்றளவும் தெருக்கள் உள்ளன. பிளாக்பர்னை பணிநீக்கம் செய்தது பிரிட்டிஸ் அரசு. ஆனால் மக்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் மதுரை வந்து பணியாற்றினார். அவருடைய நினைவாக இன்றும் விளக்குத்தூண் கருப்பாக உள்ளது.

மதுரை இரவு பகலாக பாத்து ஆட்சி செய்பவள் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. அவள் இந்த ஊரின் அரசி.சொக்கநாதர் அரசியின் கணவர் மட்டுமே. அவர் அரசர் அல்ல. இதிலிருந்து தமிழ்நாட்டின் பெண்களைப்பற்றி அறிய முடிகிறது. இதை பெண்மையின் குறியீடாகவும் கொள்ளலாம். இதுபோன்ற பண்பாட்டுத்திருவிழாக்கள் அடிக்கடி நடைபெற வேண்டும். இதில் வருடா வருடம் கலந்து கொண்டு கருத்து பரிமாற ஆசையும் உள்ளது. நன்றி’’

 ப்ளாக்பர்ன் போல மதுரை மக்களை கவர்ந்த கலெக்டர் உதயசந்திரன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலத்தில் தேர்தல் எல்லாம் இவரது மதுரை சாதனை. ஈரோடு மாறிய பின் அங்கு ஒற்றை நடவுமுறையை விவசாயத்தில் பெருக்கியுள்ளார். கல்வி கடன் ஏற்பாடு செய்து உள்ளார். இவர் சென்ற இடமெல்லாம் செழிக்க வைக்கும் நதி போன்றவர்.

பின்னூட்டங்கள்
 1. நெல்லி. மூர்த்தி சொல்கிறார்:

  மிகவும் அருமையான வரலாற்றுப் பதிவு. மதுரை மாநகர் குறித்து மேலும் அறிய மனம் ஆவல் கொள்கின்றது.

 2. சங்கரபாண்டி சொல்கிறார்:

  மதுரைக்கு இப்போது வந்துள்ள கலெக்டர். சகாயமும் நல்லவர்.நேர்மையானவர். எனவே, ஆளாளாக்கு அவரை மாற்ற சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!

 3. […] நான்மாடக்கூடல் குறித்து உதயசந்திரனும் பேசினர். 2008 டிசம்பரில்தான்  கவிஞர் […]

 4. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார

  மனக்கவர்ந்த மாவட்ட ஆட்சியடைப் பற்றிய உரை நன்று. சொற்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன். நல்ல நடை – நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 5. Sujana g சொல்கிறார்:

  East or West he is the one and only best person.now a days he is one of the role model to many of the people’s.in every work he shows his best.best wishes sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s