சாத்தியார் அணையும் கல்லுமலைக் கந்தன் கோயிலும்

Posted: ஜனவரி 20, 2011 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

நான் மலையை நோக்கிச் செல்வதில் விருப்பமுள்ளவனாக இருந்திருக்கிறேன். மலைகள் எப்போதும்போல தொலைவில் காட்டும் வியப்பை அருகில் சென்றதும் உருமாற்றிவிடுகின்றன. மலைகளோடு நாம் பங்கு கொள்ள முடியாது. அவை நம்மை அதன் வெளி வடிவங்களில் ஊர்ந்து செல்ல மட்டுமே அனுமதித்திருக்கின்றன. ஒரு மலையை அதன் மீது ஏறுவதைப் தவிர வேறு எப்படி எதிர்கொள்வது என்பதைத் தெரியாத வயதில் மலைகளின் மீது ஏறுவதையும் அங்கு மர்மத்தின் நடனம் தனியே நடந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க வேண்டுமென்றும் தோன்றியதுண்டு. 

 -எஸ்.ராமகிருஷ்ணன் (இலைகளை வியக்கும் மரம்)

மதுரை பாலமேட்டுக்கருகில் வயிற்றுமலைச்சாரலிலும், பின்னால் மலைகள் சூழவும் சாத்தியார் அணை அமைந்துள்ளது. மதுரைக்கருகில் இவ்வளவு மலைகள் உள்ளதா என நாம் சாத்தியார் அணைக்கு சென்றால் தான் தெரியும். வயிற்று மலை மதுரைக்கு வடக்கே இருப்பதால் சின்ன வயசுல இதைத்தான் இமயமலைன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கு. சாத்தியார் அணையில் இருந்து சில ஊர்கள் கடந்தால் குட்லாடம்பட்டி அருவி செல்லலாம்.

நானும் அண்ணனும் முதல் முறை சென்ற போது சித்திரைமாத கத்திரி வெயில் மண்டைய பிளந்து கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் கல்லுமலைகந்தன் கோயில்ல திருவிழான்னு கேள்விப்பட்டு சித்திரைத்திருவிழா தேர் பாத்துட்டு மாசிவீதிலயிருந்து அப்படியே பாலமேட்டுக்கு வந்தோம். பாலமேட்லயிருந்து கிட்டத்தான்னு நெனச்சு நடந்தா அஞ்சு கிலோமீட்டராவது இருக்கும். கல்லுமலைகந்தன் கோயில் சாத்தியார் அணைக்கு செல்லும் பாலத்தின் இடது புறம் உள்ளது. கல்லுமலைகந்தன் கோயில பாத்தா டைல்ஸ்லாம் போட்டு உலகமயமாக்கல்ல சிக்கியிருக்கு. நாங்க ஒரு வரலாற்று சின்னமாக இருக்கும் என எண்ணி ஏமாந்துபோனோம். ஏனென்றால் அழகர் முன்னாடி தேனூர் பக்கம் போய் ஆற்றில் இறங்கிய போது (பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு) அலங்காநல்லூர் வழியாத்தான் சென்றிருக்கிறார். அப்போது இந்த மலையில் நாட்டுப்புற மருத்துவம் மற்றும் திருவிழா நடந்திருக்கு.

இதை மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும் என்ற நூலில் முனைவர் ஆறுமுகம் (இவர் மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரிகிறார்) கல்லுமலை மகாலிங்கம் கோயிலில் நாட்டுப்புற மருத்துவம் என்ற தலைப்பில்

‘அலங்காநல்லூரையடுத்து வயிற்றுமலைச்சாரலில் சாத்தியாறு அணை அருகே ஒரு மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்றும் மதுரை சித்திரைத்திருவிழா நாளில் விழா நடைபெறுகிறது. அவ்வமயம் பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து பல்வேறு தானியங்களைக் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றனர்’.   என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாலிங்கத்தை ஏன் கந்தன் என்று அழைக்கிறார்கள் என தெரியவில்லை. சதுரகிரி மகாலிங்கத்திற்கும் இக்கோயிலுக்கும் ஏதேனும் தொடர்பு அக்காலத்தில் இருந்திருக்கலாம். எதிர்பார்த்த அளவு இல்லாததால் நாங்க கிளம்பலாம்ன்னு பார்த்தா சாமிகும்பிட வந்தவங்க சாப்பிட்டு போக சொன்னாங்க. எங்களுக்கும் பசி அதனால சரின்னு காத்துக்கிடந்தோம். பொங்கலும் சோறும் வயிறார உண்டு கிளம்பினோம். மக்கள் இன்னும் அப்படியே மாறாமல் உள்ளனர் என்பது மகிழ்ச்சி. அப்ப சாத்தியார் அணைய போய் பாத்தா தண்ணியெல்லாம் வத்தி கம்மா மாதிரி கிடந்துச்சு. ஆனால் அண்மை காலமாக பேஞ்ச மழைல அணையில் கடல் மாதிரி தண்ணி கிடக்கு. சாத்தியார் அணை பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளுக்கு விவசாயத்திற்கு உதவியாக இருக்கிறது. 

வாடிப்பட்டியில் உள்ள மாதாகோயிலுக்கு செல்லும் போது சாத்தியார் அணையை நின்று வேடிக்கை பார்த்துட்டுத்தான் செல்வோம். சிலநாள் நண்பர்கள் இறங்கி குளிப்பார்கள். எனக்கு நீச்சல் தெரியாததால் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். நிறைய பேர் விடுமுறை நாட்களில் வருகின்றனர். நம்ம கிராமத்து நாயகன் ராமராஜன் படம் கூட இந்த அணையில் எடுத்திருக்காங்க. இந்த அணைக்கு பின்னால் உள்ள ஒரு மலை ஒரு பெண் படுத்திருப்பது போல தோன்றும்.

இந்த அணையை பார்க்க தெத்தூர் பேருந்து, வாடிப்பட்டி-பாலமேடு பேருந்திலும் வரலாம். மக்கள் கூட்டத்திலிருந்து தப்பி இந்த மாதிரி இயற்கையன்னையின் மடியில் இருக்க வாருங்கள். நிழற்படங்களை எடுத்து தந்த நண்பர் சாலமனுக்கு நன்றி.

பின்னூட்டங்கள்
  1. உங்கள் நண்பன் சொல்கிறார்:

    கட்டுரை அருமை……. படத்தை எடுக்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட இணையத்தில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பணி தொடர வாழ்த்துக்கள்…….. என்றும் உங்களுடன் …..நண்பன்….

  2. sivaparkavi சொல்கிறார்:

    இணையத்தில் பார்க்கும் படத்தை தொடர மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  3. Raja சொல்கிறார்:

    அருமையான கட்டுரை. இந்த அணையின் வீடியோ பதிவினை பார்வையிட http://www.youtube.com/watch?v=zTboMAMmDe4

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s