காதல் கவிதைகள்

Posted: பிப்ரவரி 18, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

நம்மளுக்கும் காதலுக்கும் காத தூரம் இருந்தாலும் இப்ப எழுதுற சில பேர் மாதிரி கல்லூரிக்காலங்களில் நானும் காதல்கவிதை எழுதுவேன். அதை எல்லாம் இன்று நினைத்தால் சிரிப்பாக வந்தது. நீங்களும் சிரிக்கட்டுமே என்பதற்காக அக்கவிதைகளுக்கு கீழாக எனது கருத்தைப் போட்டுள்ளேன். இதே மாதிரி கவிதை ஒரு நாளைக்கு நூறு சொல்வான் என் அருப்புக்கோட்டை நண்பன். 

 

கண்டதையே நினைத்த

என் மனது – இப்பொழுது உன்னைக்

கண்டதையே நினைக்கிறதே

என்ன செய்ய?

(மருந்தக் குடி! சரியாப்  போயிரும்)

 

தாவணிக்கு முன் என்னடா

போட்ட நீ – இப்ப

தாவணி போட்டதும் என்னடா

சொல்லலாம்ன்னு யோசிக்கிறாயா?

(இல்ல, உன்ன எத வச்சு அடிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்)

 

புயலால் பள்ளி, கல்லூரிகளுக்கு

விடுமுறை என்றதால் உன்னை

காணாமல் என்னைப் போலவே

அழுதது மழை.

(அழுதது மழையில்லடா நாங்க)

 

என்னைக் கண்டதும் வெட்கத்தில்

உன் கண்கள் கூட சிவக்கிறதே

என நினைத்தேன் – உனக்கு

கண்வலியெனத் தெரியாமல்

(ஓ மொகறய பாத்து சிவந்தா விளங்குமாடா?)

 

நீ ஒத்தைக் காலில் நிற்பதை

பார்த்து என்னைக் கட்டத்தான்

 தவம் கிடக்கிறாய் என

நினைத்தேன் – நீ நொண்டி

விளையாடுவது தெரியாமல்

(நினைப்புத்தான் பொழப்பக் கெடுக்குமாம்)

 

வாழ்க்கை ஒரு திருவிழா

என்றார் ஓஷோ – எப்படிக்

கொண்டாடலாம் என்றிருந்த

போது தான் திருவிழாவாக

வந்தாய் நீ!

(இது ஓஷோவுக்குத் தெரியுமாடா?)

 

உன்னைப் போல் பிறரை நேசி

என்றார் இயேசு – ஆனால்

நானோ என்னைவிட உன்னையே

நேசிக்கிறேனே!

(உன்னையப் புடிச்சு சிலுவையில அறையனும் போல இருக்கு)

 

உன்னை மறக்க வேண்டும்

என்றே அடிக்கடி

நினைக்கிறேன்

(உன்னைய அடிக்க வேண்டும் என்றே அலைகிறேன்)

 

நீ சொல்லும்

ம் அழகாக இருக்கிறது

என்பதற்காகத்தான் நான்

கதை சொல்கிறேன்

என உனக்குத் தெரியாதா?

(எனக்குத் தெரியும்டா நீ சொல்ற எல்லாமே கதைன்னு)

 

எத்தனையோ இதழ்களை

வாசித்துவிட்டேன் – அவள்

இதழ்களைத் தவிர!

(இவரு பெரிய இதழாசிரியரு)

 

நீ பட்டுடுத்தி ஸ்கூட்டியில்

வந்த போது அம்மனின்

புதிய வாகனம் போல என்று

நினைத்து கொண்டேன்.

(ஆத்தா, இவன் கண்ணெக் கெடுக்க மாட்டியா?)

 

உன் பெயரை எழுதும் போது

தான் நினைத்தேன் – என்

எந்தக் கவிதையும் உன்

பெயருக்கு ஈடாகாதென்று.

(நீ எழுதுற எதுவுமே கவிதை கெடையாதுடா அத தெரிஞ்சுக்கோ)

 

நம் காதலைப் பிரித்தது

அந்த ஒரு பழமொழி

உன் சடையைப் பார்த்து

‘வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்

கேட்குதோ?’ என்றேனே அதான்!

(ஒன்னோட நாறவாய் பண்ண ஒரே நல்ல காரியம் இதான்டா )

 

நான் காதலுக்கு எதிரி இல்ல. ஏன்னா சாதி, மத அமைப்புகள் காதலுக்கு எதிர்ப்பாய் இருப்பதால் நான் காதலுக்கு ஆதரவாளன் தான். காதலர் தினத்தை எதிர்க்கலாம். தப்பில்லை. ஆனால், காதலை எதிர்ப்பது தான் தப்பு. ஏன்னா மதம் தோன்றுவதற்கு முன்பே காதல் தோன்றிவிட்டது. இது முன்ணனியில் இருப்பவர்களுக்கு தெரியாதா?. அப்புராணி நாய்க்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. தைரியம் இருந்தா வெறி நாயப் புடிச்சு கட்டி வைக்கட்டும் பார்ப்போம். ஆனால், எனக்கு காதல் ஒரு பெண்ணின் மீது  வரவே மாட்டேங்குது? திக்கெட்டும் களிப்புற நோக்குவதால் நம் அன்பைத் தனியாக ஒரு பெண் மீதெல்லாம் பிரித்து அளிக்க முடியாது. அதனால பகுமானமா காதலிக்க நேரமில்லைன்னு சொல்லிடுவோம். ஏன்னா, காதலிக்க ஆள் இல்லாதவர்கள் தான் காதலை எதிர்ப்பார்கள்.

(ஆமா, இவரு பெரிய கலெக்டர் வேலை பார்க்குறாரு)

காதல் கவிதைன்னா அழகான பொண்ணுங்க படந்தான் போடணுமா?

பின்னூட்டங்கள்
  1. தொப்புளான் சொல்கிறார்:

    ச்சீ..ச்சீ இந்தப் பழம் புளிக்கும்?!!

  2. sathish சொல்கிறார்:

    hi……………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s