உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும்

Posted: மார்ச் 10, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

நாடி தளந்தவங்க, ஆடி நடப்பவங்க,

நல்லவங்க, கெட்டவங்க, நம்பமுடியாதவங்க,

பாடி கனத்தவங்க, தாடி வளர்த்தவங்க,

பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க,

படிப்பவங்க – வீடு

புடிப்பவங்க,

பொடிப்பசங்க – பெரும்

போக்கிரிங்க – இன்னும்

பொம்பளைங்க, ஆம்பளைங்க

மேலே உள்ளவங்கல்லாம் (பட்டியல் வரிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது) என்னா பண்றாங்கன்னு பாக்குறீங்களா? அம்புட்டு பேரும் கிரிக்கெட் பாக்குறாங்க. அதன் மூலமாத்தான நம்ம தேசப்பற்ற வெளிப்படுத்த முடியும்? உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும். அதனால் என்னவாகிவிடப் போகிறது? கால் இறுதியில் கூட நுழையாமல் வெளியேறினால் இவர்களை நம்பி பணங்கொட்டக் காத்திருந்த விளம்பரக் கம்பெனிகளுக்குத்தான் அடி. அடித்தட்டு மக்களுக்கல்ல. ஆனால் அது நடக்காது போல! புதிதாக விளையாட வந்த நாடுகளுடன் முதலில் விளையாடுவதால் ஆளாளுக்கு சதம் அடிச்சு சாதனை பண்ணுவாங்க!

ஆறு பந்துக்கு நாலு அல்லது அஞ்சு விளம்பரம் போடலாம். அப்ப 100 ஓவர்க்கு 400 முதல் 500 விளம்பரம் வரை போடலாம். இந்த நாட்டைக் காக்கும் வீரர்கள் கோடிக்கணக்கில் வாங்கிட்டு விளம்பர இடைவேளைகளில் வந்து இந்த மூத்திரத்தக்குடி (வெயில் காலம்ல) இந்த ஜட்டி வாங்குன்னு நமக்கு புத்தி சொல்வாங்க. மத்த விளையாட்டுல இவ்வளவு விளம்பரம் போட வாய்ப்பில்லை. எனவே, யாரும் அவைகளை சீண்டுவது கிடையாது. அம்புட்டு பேப்பரும், வாரப் பத்திரிக்கையும், பண்பலையும், தொ(ல்)லைக் காட்சிகளும் கிரிக்கெட்டதான் கொண்டாடுறாங்க. ஏன்னா அம்புட்டும் விளம்பரம். இவனுக விளையாட எல்லாப்பயலும் பொழப்பக் கெடுத்து, தூக்கங்கெடுத்து பாக்க அவங்ங போட்டிக்கு முன்னாடி பயிற்சி பண்ணாம விளம்பரத்துல எந்த நடிகை கூடவாவது நடிச்சுகிட்டு இருப்பாங்ங.

கப்பு வாங்காட்டியும் இந்த பாகிஸ்தான செயிச்சா அது பெரிய வெற்றி. விளையாட்ட விளையாட்டா பார்க்காம இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடப்பது போல நெனைக்கிறது எவ்வளவு மடத்தனம். தமிழ்நாட்டுக்காரன் சோத்துல என்னைக்கு பாகிஸ்தான்காரன் மண்ண அள்ளி போட்டாங்கன்னு தெரியல. வெடி போட்டு கொண்டாறது. வெங்காயம் வாங்க வக்கில்லாட்டியும் இதான் இவங்களுக்கு பெரிய பிரச்சனை.

இப்ப வாந்தி எடுக்கிற மாசம் வேற. அதனால பயலுக ஒழுங்கா கக்காம போயிருவாங்களோன்னு பெத்தவங்க வேற வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்காங்க.( +2,10th  பரிட்சைதான்). தேர்தல் மட்டும் பரிட்சை சமயத்துல கூடாதுன்னு சொல்ற தலைவர்கள், மக்கள் எல்லோரும் கிரிக்கெட் இப்ப கூடாதுன்னு ஏன் சொல்லல? அதுவும் போட்டிகள் இந்தியாவில் வேறு நடக்கின்றன. ஹாக்கி, செஸ், வாலிபால், புட்பால், டென்னிஸ், பேட்மிட்டன், கபடின்னு எத்தனையோ விளையாட்ட அழிச்சுட்டு கிரிக்கெட் மட்டும் தேசிய விளையாட்டு போல நெனைச்சுக்கிட்டுருக்காங்ங.

அட அதல்லாம் விடுங்க. கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு –  இதெல்லாம் நாம அப்ப விளையாண்ட விளையாட்டு. இதெல்லாம் இப்ப உள்ள சின்ன பசங்களுக்கு என்னன்னு தெரியாம அழிஞ்சுட்டு வருது. எல்லோரும் கிரிக்கெட்டுதான் பெரிய விளையாட்டு மாதிரி பேசுனா நமக்கு கோவம் வராதா? நான் கிரிக்கெட் அழியணும், இந்தியா தோக்கணும்ன்னுதான் வேண்டுவேன், சொல்லுவேன். நான் தோக்கணும்ன்னு சொல்றதால நீங்க என்ன திட்டும் முன்னாடி கொஞ்சம் யோசிங்க!

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  ரெண்டு வருஷம் முன்னாடி இன அழித்தொழிப்பின் உச்சத்தில் ஊடக இருட்டடிப்புனால இணையத்துல இலங்கை அல்லது ஸ்றீலங்கானு போட்டு செய்தி தேடுவேன். இந்த —-ங்க அப்ப அங்கபோய் வெளயாடிக்கிட்டுருந்துச்சு. அதனால கிரிக்கெட் செய்தியா வந்து நிக்கும். அப்பத்தான் கிரிக்கெட் பார்க்கிறதை முழுசா விட்டேன். .

  ஆனாலும் அந்த காலத்திலேயே நாங்க பக்கத்து வீட்டுலயும், பஞ்சாயத்து டிவிலயும் அகாலத்துல கிரிக்கெட் பார்த்தவன்ய்ங்க. ஆடுறதுக்கு எத்தனையோ விளையாட்டு நல்லா இருந்தாலும் பார்க்கிறதுக்கு அதுதானே நல்லா இருந்துச்சு. ஏதோ ஸ்டெஃப்பி கிராஃப் இருக்கப்போய் கொஞ்சம் டென்னிஸும் பார்த்தோம்.

  மதுரை சிவாஜி சிலை திறப்புவிழாவில்தானே கமல் கலந்துகொண்டபோது சீனியர் சிவாஜி ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் வந்தது? இப்ப அதுமாதிரி கபில்தேவ் பாராட்டுவிழாவுக்கு சச்சின் வந்தா அலப்பரை பண்ணுற கபில் ரசிகன் நானாத்தான் இருப்பேன்.

 2. வேந்தன் சொல்கிறார்:

  ஒரு நல்ல மனிதன் சொரணையுள்ளவன். சொரணையுள்ளவனுக்கே சிறுமைகள் கண்டு கோபம் வரும். செருப்பை கழட்டி அடிக்கவேண்டிய விஷயத்தில் செருப்பின் வார் பிய்ய அடித்திருக்கீறீர்கள் வாழ்த்துக்கள்.

 3. antony சொல்கிறார்:

  இந்தியா இதுலயாவது செயிக்கட்டும். மத்த விளையாட்ட பத்தி நீங்களே எழுதுங்க. பட்டியல்ல பாதி விளையாட்டு பேர நான் இப்பத் தான் கேள்விப்படுகிறேன்.

 4. ilanchezhiyan சொல்கிறார்:

  உங்களை திட்ட முடியவில்லையே!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s