எது கலாச்சாரம்? – ச.தமிழ்ச்செல்வன்

Posted: மார்ச் 13, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

“மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு” – தொ.பரமசிவன்.

கலாச்சாரம், பண்பாடு இவற்றில் எது சரியான வார்த்தை? நாகரிகமும் பண்பாடும் ஒன்றா? தமிழர்களுக்கு என ஒரு கலாச்சாரம் இருப்பதாக சொல்கிறோமே அப்படி எல்லாம் ஒன்று உண்டா? இந்தியா முழுவதற்கும் ஒரு கலாச்சாரம் உண்டா? வெளிநாட்டுக்காரர்கள் நமக்கு கற்று கொடுத்தது என்ன? பள்ளிகள், கல்லூரிகள், குடும்பம், சமயம், மீடியா நம்மை எவ்வாறு அடிமைப்படுத்துகிறது? கலாச்சாரத் தூண்களாக சிலர் தங்களை கூறிக்கொள்கிறார்களே இது சரியா? பெண்களை உண்மையிலே நாம் எந்தளவு மதிக்கிறோம்? மாற்றுப் பண்பாட்டை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு இப்புத்தகம் அழகாக பதில் சொல்கிறது. கட்டாயம் நம் வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகம். விலை பத்து ரூபாய். இதை நாம் வாங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம், திருமணத்தாம்பூல பைகளில் இது போன்ற நல்ல புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்.

இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. (மதுரையில் பாரதி புத்தகாலயம் பெரியார் பேருந்து நிலையம் நுழைவாயிலில் தமிழக எண்ணைப்பலகாரகடைக்கிட்ட இருக்கு) இங்கு இது போன்ற அற்புதமான நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐந்து ரூபாய், பத்து ரூபாயில் நல்ல புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. மேலும், குழந்தைகளுக்கான நிறைய புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. நாம் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போது நல்ல புத்தகங்களை வாங்கி கொடுத்து ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கலாம். இனி இந்நூலில் இருந்து ச.தமிழ்ச்செல்வனின் பார்வையில் சில துளிகள்:

“பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்கிறது கலித்தொகை நாம் வாழும் சமூகத்தின் பாடு அறிந்து அதாவது சமூகத்தின் போக்கு, செல்நெறி, பழக்கம் போன்ற பல பாடுகளை அறிந்து அதன்படி ஒழுகுதலே பண்பு என்கிறது அச்சங்கப்பாடல் வரி. இதனை வள்ளுவரின் இவ்வரிகளோடு சேர்த்துப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

கல்வி கேள்விகளில் பல கற்றுத்தேர்ந்தவராக இருந்தாலும் உலகத்தோடு ஒத்து வாழ்கிற பண்பாடு இல்லாதவர் அறிவில்லாதவர் என்கிறார் வள்ளுவர்.

 “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் குக்கர்களில் வைத்துப் பெண் தன் சொந்தப் பெற்றோர்களாலேயே அவித்து எடுக்கப்பட்டு மென்மையானவளாக அறிவிக்கப்படுகிறாள்”.

“அன்னியப் பொருட்கள், அந்நியக்கலாச்சாரம், மேல்நாட்டுக்கல்வி இவற்றின் மீதான மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை நமக்கு”.

“பள்ளிக்கூடத்துக்குள்ளே போனால் ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை 50 மாணவர்கள் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்படியே 15 வருசம் படித்துப் படித்து ஒரு ஆசிரியர் சொல்வதைக் கேட்ட காதும் மனமும் ஒரு முதலாளி சொன்னால் கேட்கும். ஒரு நீதிபதி சொன்னால் கேட்கும். ஒரு தலைவர் சொன்னால் கேட்கும். பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கே, இப்படி எதிர்த்து எதிர்த்துப் பேசறியே என்று சொல்கிறோமல்லவா?

கல்வி என்பது கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து இந்த உலகத்தைப் புரிந்துகொள்வது தான். மாணவர்களிடமுள்ள திறன்கள் எவை, பலவீனங்கள் எவை என்று கண்டறிந்து இருக்கும் திறனை வளர்ப்பதும் பலவீனங்களைக் களைய உதவுவதும் தான் பள்ளிக்கூடத்தின் தலையாய பணியாக இருக்க வேண்டும்”.

“ராட்சச புல்டோசர்களாக நம் மூலைகளை நசுக்கி வரும் மீடியாக்களுக்கு எதிராக தீப்பந்தங்களைப் போல நாம் புத்தகங்களையும் குறும்படங்களையும் நாமே எடுத்த ஆவணப் படங்களையும் உயர்த்திப் பிடிப்போம். இவ்வளவு கொடுமையும் அநீதியும் மிக்க சமூகத்தில் நாம் ஒரு அடி கூட வாங்காமல் நிம்மதியாக வாழ முடிகிறதென்றாலே நம்மிடம் பெரும் கோளாறு இருப்பதாகத்தான் அர்த்தம்”.

ச.தமிழ்ச்செல்வனின் வலைதளமுகவரி http://www.satamilselvan.blogspot.com/

பின்னூட்டங்கள்
  1. தொப்புளான் சொல்கிறார்:

    இம்மாத (மார்ச் ’11) காலச்சுவடு இதழ் “தமிழர் பண்பாடு – கற்பிதங்களும் யதார்த்தமும்” என்பதை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு பிரபஞ்சனுடையது உள்ளிட்ட பல கட்டுரைகள் தாங்கி வெளிவந்துள்ளது.

  2. சங்கரபாண்டி சொல்கிறார்:

    அடுத்த ஊதிய உயர்வுகுழு எப்போ அமைப்பார்கள், அதற்கு எப்போ அரியர்ஸ் வரும் என்று காத்திருக்கிறார்கள் முக்கால் வாசி ஆசிரியர்கள். பிறகு பசங்க அரியர்ஸ் வைக்காம என்ன பண்ணுவாங்க. ச.தமிழ்ச்செல்வன் சொல்வது போல நாம் ஒரு அடி கூட வாங்காம இருக்கோம்னா நம்மட்ட ஏதோ கோளாறு இருக்கு என்பது முற்றிலும் உண்மை.

  3. spk சொல்கிறார்:

    Good sharing…. Thanks.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s