வாசித்த புத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும்

Posted: ஜூன் 19, 2011 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்.

– ஹென்றி டேவிட் தோரோ

என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகங்களோடு நான் என்று முன்பு எழுதிய பதிவின் தொடர்ச்சிதான் இப்பதிவு. நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப் பார்க்கும் போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.

நாவல்கள்

 1. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
 2. கொற்றவை – ஜெயமோகன்
 3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
 4. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
 5. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
 6. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
 7. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
 8. நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்
 9. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
 10. பார்த்திபன் கனவு – கல்கி
 11. பொன்னியின் செல்வன் – கல்கி
 12. ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
 13. நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
 14. கல்மரம் – திலகவதி
 15. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
 16. பொய்த்தேவு- க.நா.சு
 17. கானல் நதி – யுவன் சந்திரசேகர்
 18. அபிதா – லா.ச.ரா
 19. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
 20. அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
 21. குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
 22. பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
 23. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
 24. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
 25. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
 26. அந்நியன் – ஆல்பெர் காம்யூ

கட்டுரைத்தொகுப்புகள்

 1. பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
 2. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
 3. தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்
 4. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்
 5. கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 6. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 7. காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்
 8. இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்
 9. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்
 10. சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
 11. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
 12. கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
 13. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
 14. தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
 15. என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
 16. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
 17. கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்
 18. மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
 19. தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
 20. உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
 21. இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
 22. தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்
 23. நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
 24. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்

சிறுகதைத்தொகுப்புகள்

 1. நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
 2. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
 3. மதினிமார்கள் கதை – கோணங்கி
 4. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
 5. ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
 6. திசைகளின் நடுவே – ஜெயமோகன்
 7. மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
 8. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
 9. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
 10. வெண்ணிலை – சு.வேணுகோபால்
 11. மண்பூதம் – வா.மு.கோமு
 12. புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
 13. அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்
 14. ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்

ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்

 1. மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
 2. சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
 3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
 4. பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
 5. ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா

மதுரை

 1. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
 2. அழகர் கோயில் – தொ.பரமசிவன்
 3. எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
 4. மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
 5. கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்

கவிதைகள்

 1. விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி
 2. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
 3. மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
 4. நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
 5. நட்பூக்காலம் – அறிவுமதி

கதைகள்

 1. பஞ்சதந்திரகதைகள்
 2. தெனாலிராமன் கதைகள்
 3. பீர்பால்கதைகள்
 4. மரியாதைராமன் கதைகள்
 5. விக்ரமாதித்தன் கதைகள்
 6. ஜென் கதைகள் – புவியரசு
 7. திராவிடநாட்டுப்புறக்கதைகள்
 8. மதனகாமராசன் கதைகள்
 9. பரமார்த்த குரு கதைகள்
 10. மகாபாரதக்கதைகள்
 11. சூஃபி கதைகள்
 12. முல்லா கதைகள்
 13. ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
 14. கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 15. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
 16. மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி
 17. மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்

மற்றவை

 1. திசைகாட்டிப்பறவை – பேயோன்
 2. நவீன ஓவியம் – இந்திரன்
 3. கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்
 4. தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
 5. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து

இப்பட்டியல் இன்னும் தொடரும். நிறைய புத்தகங்களை இன்னும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பில் பத்து கதைகள் மட்டும் படிக்காமல் விட்டதால் அதைக்குறிப்பிட முடியவில்லை. சிலநேரம் புத்தகங்களை வாசிக்கவே விடாமல் காலம் கொடுமை செய்துவிடும். மொத்தத் தொகுப்பை வாசிக்கும்போது இப்படி அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.

 வலைத்தளங்கள்

பாரதி சொன்னது போல “நோக்குந் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம்” என்று இணையத்தில் தமிழை பார்த்து, பார்த்து பேருவகை அடைகிறேன்.

தொகுப்புகள், எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்

 1. மதுரைத்திட்டம் http://www.tamil.net/projectmadurai
 2. நூலகம்  http://noolaham.net/
 3. தமிழ்பல்கலைகழகம் www.tamilvu.org
 4. தமிழ்விக்கிபீடியா http://ta.wikipedia.org/
 5. கீற்று www.keetru.com
 6. தமிழ்த்தொகுப்புகள் http://thoguppukal.wordpress.com/
 7. அழியாச்சுடர்கள் http://azhiyasudargal.blogspot.com
 8. கூடு  www.koodu.thamizhstudio.com
 9. உயிர்மை  www.uyirmmai.com
 10. காலச்சுவடு http://kalachuvadu.com/
 11. நட்பூ www.natpu.in
 12. முத்தமிழ்மன்றம் http://www.muthamilmantram.com/
 13.  உலகபுத்தகதினம் http://bookdaytn.blogspot.com/

எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்

 1. எஸ்.ராமகிருஷ்ணன் www.samakrishnan.com
 2. பிரபஞ்சன்  www.prapanchan.in
 3. ஜெயமோகன் http://www.jeyamohan.in
 4. வண்ணதாசன் www.vannathasan.wordpress.com
 5. நாஞ்சில்நாடன் www.nanjilnadan.wordpress.com
 6. சாருநிவேதிதா http://charuonline.com/
 7. கலாப்பிரியா http://kalapria.blogspot.com/
 8. ச.தமிழ்ச்செல்வன் http://satamilselvan.blogspot.com/
 9. கீரனூர்ஜாகிர்ராஜா http://jakirraja.blogspot.com/
 10. மகுடேஸ்வரன் www.kavimakudeshwaran.blogspot.com
 11. சுகுமாரன்  http://vaalnilam.blogspot.com/
 12. பவா.செல்லத்துரை http://bavachelladurai.blogspot.com/
 13. தி.க.சி http://thikasi.blogspot.com/
 14. வாமு.கோமு www.vaamukomu.blogspot.com
 15. க.சீ.சிவக்குமார் http://sivakannivadi.blogspot.com
 16. நாகர்ஜூணன் http://nagarjunan.blogspot.com/
 17. காலபைரவன் http://kalabairavan.blogspot.com/
 18. தமிழ்நதி   www.tamilnathy.blogspot.com
 19. சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.com
 20. கிழக்கு பதிப்பகம் பத்ரி  http://thoughtsintamil.blogspot.com
 21. புத்தகம் http://puththakam.blogspot.com/
 22. தமிழ்ச்சமணம் www.banukumar_r.blogspot.com
 23. ஷாஜி http://musicshaji.blogspot.com/
 24. மரபின்மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.com
 25. வெயிலான் http://veyilaan.com/
 26. பிச்சைப்பாத்திரம்  www.pitchaipathiram.blogspot.com
 27. தனிமையின் இசை http://ayyanaarv.blogspot.com
 28. ஆடுமாடுகாடு http://aadumaadu.blogspot.com/
 29. தீராதபக்கங்கள்  www.mathavaraj.com
 30. மொழிவிளையாட்டு http://jyovramsundar.blogspot.com/
 31. தமிழில் http://linguamadarasi.blogspot.com
 32. பதியம் http://www.pathiyam.com
 33. நிசப்தம் www.nisaptham.com
 34. பி.கே.பி. http://pkp.blogspot.com/
 35. கூட்டாஞ்சோறு http://koottanchoru.wordpress.com
 36. என் காலடி ஓசை http://adhiyaman.blogspot.com/

மதுரைப்பதிவர்கள்

 1. மதுரை சரவணன் http://veeluthukal.blogspot.com/
 2. தருமி http://dharumi.blogspot.com
 3. யாழிசை http://yalisai.blogspot.com
 4. ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com
 5. ஸ்ரீ http://sridharrangaraj.blogspot.com
 6. பொன்னியின் செல்வன் http://ponniyinselvan-mkp.blogspot.com
 7. ஆம்பல் www.aambal.wordpress.com
 8. கல்வெட்டு http://kalvetu.blogspot.com/
 9. மதுரைக்காரன் http://maduraipandi1984.blogspot.com/
 10. தீதும்நன்றும் பிறர்தரவாரா http://yaathoramani.blogspot.com/
 11. மதுரைவாசகன் https://maduraivaasagan.wordpress.com/

வலைத்தள வாசிப்புக்கு நான் வந்தே இரண்டு ஆண்டுகள்தானிருக்கும். எனவே மேலே உள்ள பட்டியல் நீளும். இதில் உள்ளதைத் தாண்டியும் வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன். பின்னூட்டமிடும் நண்பர்களின் தளங்கள் மற்றும் கீழேயுள்ள தளங்களில் உள்ள இணைப்புகளில் இருந்து புதிய முகவரிகளுக்கு சென்று வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன். மதுரைப்பதிவர்களின் தளங்களையோ, மதுரையையோ குறித்து வாசிக்கும்போது அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையே இல்லை. இன்னும் நிறைய வாசிக்கணும்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தளம்தான் முதலில் வாசித்தது. அவரது தளம்தான் என் இணைய வாசிப்பை அதிகரிக்க காரணம். எனவே, எஸ்.ரா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி. எனக்கு முதன்முதலில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய மதுரைசரவணன் அவர்களுக்கும் நன்றி. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி!

பின்னூட்டங்கள்
 1. RV சொல்கிறார்:

  நல்ல பதிவு சார்! எல்லா புத்தகங்களையும் நான் இன்னும் படிக்கவில்லை, படிக்க நிறைய இருக்கிறது என்று தெரிகிறது.

  சிலிகான் ஷெல்ஃப் என்ற புத்தகங்களுக்கான தளத்தையும் நானும் பகவதிபெருமாள் என்ற நண்பனும் நடத்துகிறோம். முடிந்தால் அதையும் பாருங்கள்!

  http://siliconshelf.wordpress.com/

 2. குமரன் சொல்கிறார்:

  மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி!

  நல்லதொரு தொகுப்பு சித்திரவீதிக்காரரே! இதில் நான் படிக்க வேண்டிய நூல்கள் இருக்கின்றன. அடுத்த முறை மதுரைக்கு வரும் போது தேடி வாங்க வேண்டும். சர்வோதய இலக்கியப் பண்ணையில் நிறைய நூல்கள் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

 3. தொப்புளான் சொல்கிறார்:

  தமிழிலக்கியத்தின் உச்சபட்ச சாதனையான “பொன்னியின் செல்வன்” படித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனால், சாண்டில்யனின் கில்மா கதைகள் ஒன்றுகூடவா படித்ததில்லை? பின் வரலாற்று அறிவு எப்படி வளரும்?

  அரசியல் அறிவாவது இருக்குமா எனிலோ குருணாநிதியின் “குஞ்சுக்கு மீதி”யும் படிக்கவில்லை.

  கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்” படிக்காத ஆன்மிக அறிவிலியாகவே இருந்துவிட உத்தேசமா?

  தத்துவம் தமிழில் ஒரு தனித்த ஒரு துறையாக வளரவே இல்லை (என்பதே ஒரு தத்துவம்) என்பதால் “அம்மையப்பனே உலகம்” என்று கருதி ஆன்மிக அறிவையே வளர்த்து நோற்றுச் சுவர்க்கம் புகவேண்டியது.

  “குடும்ப ஜோதிடம்” என்றொரு நூல் இருக்கிறது. அதைப் படித்து வானியல் அறிவை வளர்த்துக் கொள்ளவும். அந்த அறிவை அவ்வப்போது இற்றைப்படுத்த “____ பெயர்ச்சிப் பலன்கள்” என்ற பெயரில் குறித்த கால இடைவெளிகளில் வரும் பருவ இதழ்களைப் படித்து வரவும்.

  பருவம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. பாலியல் அறிவை ஆழப்படுத்த / நீளப்படுத்த (குறித்த புத்தகம்தான் என்று சொல்ல முடியாததால்) பேருந்து நிலையக் கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் புத்தகங்களை ஏற இறங்கப் பார்க்கவும்.

  பண்பாடு குறித்த உங்கள் அறியாமையும், கற்பிதங்களும் நீங்க கற்பு, ஒழுக்கம், நன்னடத்தை, பணிவு, புனிதம் போன்ற சொற்கள் மலிந்த நூல்கள் உடனடி பலனளிக்கும்.

  ஏதோ சித்த வைத்தியர் கணக்கில் மேற்சொல்லப்பட்டவை அறிவாற்றல் வளர. நினைவாற்றல் வளரவும் நூலுண்டு நம் கையில் – திருக்குறள் அதன் பேர். Cos (3.14/2) * 58^4* 3C2* 4! போன்றவற்றை மாத்திரைப் பொழுதில் கணக்கிட்டு எந்த எண் வருகிறதோ அதற்குரிய குறளைச் சொல்வது; பின்னமாகவோ, குறை எண்ணாகவோ வந்தால் அதற்கேற்ற விதிகளை உருவாக்கிக் கடைப்பிடிப்பது; ‘இன்ன சொல்லில் தொடங்குகிற’ / ‘இன்ன சொல்லில் முடிகிற’ என்று மட்டும் இல்லாமல் ‘இன்ன சொல் இத்தனாவது சீராக வருகிற’ குறள்களும் தெரிந்திருப்பது என்றிருந்தால் மட்டுமே போட்டி நிறைந்த இப்பூவுலகில் தப்பமுடியும்.

  சமகாலக் கவிஞர்களில் தபூசங்கர் நல்ல வளவளப்பான கவிதைகளைத் தருகிறார். தினத்தந்தி குடும்ப மலரில் சொரசொரப்பான கவிதைகள் கிடைக்கும்.

  வலைத்தளங்கள் மேற்கூறிய நூல்கள் அளவுக்கு ஆழமும் விரிவும் அற்றவை என்பதால் அந்தமட்டில் விடுகிறேன்.

  இறுதியாக ஒன்று. எல்லா கலை, அறிவுத்துறைகளும் வேதத்தில் தோன்றி, வளர்ந்து அதிலேயே மடிபவையே. எனவே வேதங்களைப் படித்தால் போதும் என்று நினைத்தால் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன:
  (1) வேதத்தைப் பொறுத்தவரை அர்த்தத்தைவிட சத்தமே முக்கியம்
  (2) அதைப் படிக்கும் அனுமதி உங்களுக்கு உண்டா என்பது உங்கள் மூதாதையர்கள் யாரவது ரிஷியின் வழித்தோன்றல்களா என்பதைப் பொறுத்தது.

  பார்த்த திரைப்படங்கள் என்று ஒரு பதிவிட்டால் விடுபட்ட திரைக்காவியங்களை இலவசமாகச் சுட்டிக்காட்ட அணியமாயும், ஆவலாயும் இருக்கிறேன்.

 4. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் மதுரை வாச்கன் – வாசிப்பு பிரமிக்க வைக்கிறது – ஓய்வு நேரம் முழுவதும் நூலினைப் படிப்பது தான் வழக்கம் போலும். வாழ்க ஆர்வம். இலக்கிய உலகில் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள் – பிரார்த்தனைகள் – நட்புடன் சீனா

 5. Gopi Ramamoorthy சொல்கிறார்:

  பிரமிக்க வைக்கிறது தங்கள் ஆர்வம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s