மதுரை அரிட்டாபட்டிமலையில் பாண்டியர்கால குடைவரைக்கோயில்

Posted: ஜூலை 8, 2011 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல்

காக்கை குருவி  எங்கள் ஜாதி – நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்குந் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்              – மகாகவி பாரதியார்  

மதுரையைச் சுற்றி பாண்டியர் காலத்தில் நிறைய குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, கழுகுமலை வெட்டுவான்கோயில் எல்லாம் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை என்றே நினைக்கிறேன். பசுமைநடை பயணமாக இம்முறை அரிட்டாபட்டி சென்றிருந்தோம். இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான சான்றுகளை இவ்வூர் கொண்டுள்ளது. இங்குள்ள பாண்டியர்கால குடைவரைக் கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

நாங்கள் முதலில் பாதைமாறி சுற்றி வந்ததால் பசுமைநடை நண்பர்களுடன் இணைந்து இக்குடைவரையை காண இயலவில்லை. நடைமுடிந்த பின் அனைவரும் சென்றபிறகு இங்கு உள்ள பாண்டியர்கால குடைவரைக் கோயிலை காண நானும் நண்பரும் சென்றோம்.

ஆனைகொண்டான் கண்மாயில் நீர் இல்லாததால் அதில் இறங்கி குடைவரையைக் காண நடந்தோம். மிக அருமையான இடம். மலையைக் குடைந்து மிகப்பெரிய சிவலிங்கம், வாயிலில் துவாரபாலகர்கள், குடைவரையின் வெளிமுகப்பில் பெரியபிள்ளையார், இலகுலீசர் சிலையும் உள்ளது. மிகவும் அரிதான சிவனின் இலகுலீசர் சிற்பம் இங்கு காணப்படுகிறது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள மலையிலிருந்து கொண்டு வரும் சுனைநீரிலிருந்துதான் சிவனைக் குளிப்பாட்டுகிறார்கள். எனவே இந்தச் சுனை நீரை இக்கோயில் தீர்த்தச்சுனைநீர் எனலாம். குடைவரைக்கு அருகே ஒரு சிறுகுகை ஒன்று உள்ளது. ஒருவர் மட்டும் உள்ளே படுக்கலாம். உள்ளே படுத்துப் பார்த்தால் மிகவும் குளுமையாக இருந்தது. அதன் அருகே பெண்தெய்வம் சிறு மண்டபத்திலுள்ளது. இந்த ஊர் மக்கள் இவ்விடத்தை இடைச்சிமண்டபம் என்கின்றனர்.

பாண்டியர்கால குடைவரையை பார்த்துட்டு ஆனைகொண்டான் கண்மாய்க்குள் இறங்கி ஊருக்குள் வந்தோம். அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு பேருந்து நிறுத்தத்தருகிலிருந்த வேப்பமரத்தடியில் அமர்ந்தோம். அந்த வேப்பமரத்தடியில் நாளிதழ்களை போட்டு உள்ளனர். நல்ல பட்டியக்கல் போட்டுவைத்துள்ளனர். அங்கு அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தோம். அருகிலுள்ள தேநீர்விடுதியிலிருந்து இளையராஜாவின் இசையில் வந்த சிறந்த பாடல்களை போட்டுக்கொண்டிருந்தனர். அந்த பட்டியக்கல்லில் படுத்துக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த ஊரிலேயே இருந்துவிடலாமா என்ற எண்ணம் வந்துவிட்டது. அங்கிருந்த பெரியவர்கள் தினசரிகள் வாசித்துக்கொண்டு ஊர்நிலவரம், அரசியல் எல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த ஊரில் உள்ள மலையில்தான் ‘அரவான்’ படப்பிடிப்பு நடந்துள்ளது. மத்தியானம் ஒரு மணிக்குத்தான் பேருந்து வந்தது. இன்னும் அந்த மலையும், மக்களும் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

(இதில் உள்ள பழைய பாண்டியன் குடைவரைக்கோயில் படத்தை நண்பர் சாலமன் கொடுத்தார். இப்படத்தை எடுத்தது யார் எனத்தெரியவில்லை. அவருக்கும் நன்றிகள் பல!)

பின்னூட்டங்கள்
 1. radhakrishnan சொல்கிறார்:

  nalla padivu.pasumaippayanaththil udan vara miga viruppam. aanal anmaikkala muzankalvaliyai ninaiththal bayamaka ullathu.

 2. குமரன் சொல்கிறார்:

  சித்திரவீதிக்காரன்.

  இந்த குடைவரைக்கோவிலின் படத்தைப் பார்த்தவுடன் ஒரு எண்ணம் தோன்றியது. பிற்காலக் கோவில்களில் சிவன் பார்வதி நடுவில் இருக்க, பிள்ளையார் முதன்மைத் தெய்வத்திற்கு வலப்புறமாகவும் முருகன் இடப்புறமாகவும் அமர்ந்திருப்பார்கள். இந்தக் குடைவரைக்கோவிலிலும் திருப்பரங்குன்றத்திலும் முருகன் வலப்புறமாகவும் பிள்ளையார் இடப்புறமாகவும் அமர்ந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் அப்படித் தான் அமைத்தார்கள் போலும். பின் ஏதோ காரணத்தால் ஆகம முறைக் கோவில்களில் மாற்றியமைந்திருக்கிறது.

  இந்த குடைவரையில் சிவனுக்கு வலப்புறம் இருப்பது வேலைக் கையில் பிடித்திருக்கும் முருகனைப் போல் இருக்கிறதே. நீங்கள் இலகுலீசர் என்று சொல்லியிருக்கிறீர்கள். எப்படி?

  • தொப்புளான் சொல்கிறார்:

   இந்த பழைய படத்தில், அது ‘வேல்’ அல்ல தடி என்பது தெளிவாகத் தெரிகிறது.
   http://www.thehinduimages.com/hindu/photoDetail.do?photoId=4825932

   இது நடுவண் தடி என்று அழைக்கப்படுகிறது போலும்.
   http://tamilnadu.4tamilmedia.asia/index.php/chennai/1261-2011-05-26-03-39-43

   (விஸ்வ ஹிந்து பரிஷத் பூசாரிகளை அடுத்து குறி சொல்வோரைக் ‘குறி’ வைத்திருப்பதாகத் தெரிகிறது. பில்லி, சூனியம் வைக்காமல் இருந்தால் சரி)

   தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் இலகுலீசர் என்றுதான் சொல்கிறது.
   http://www.tnarch.gov.in/cons/temple/temple33.htm

   மற்றபடி சிற்பக் கலை வல்லுநர்களும், ஆய்வாளர்களுந்தான் விளக்கவேண்டும்.

   பாசுபத சைவத்தை நிறுவி சைவசமயத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் இலகுலீசர்; அவர் சமண சமயத்திற்கு எதிரானவர் என்று கூறப்படுவது இம்மலையில் அச்சிற்பம் வைக்கப்பட்டதுடன் தொடர்புடையதாய் இருக்குமோ?

   • குமரன் சொல்கிறார்:

    நானும் பின்னர் இலகுலீசரைப் பற்றி கூகிளாரைக் கேட்டுப் படித்துத் தெரிந்து கொண்டேன். தொல்லியல்துறை இந்த சிலை இலகுலீசர் சிலை என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். மேல் விவரம் வேண்டும் என்று lakuleesa எண்ணுபவர்கள் என்று கூகிளாரைக் கேட்டுப் பாருங்கள்.

 3. radhakrishnan சொல்கிறார்:

  குமரன் கேள்விக்கு பதில் எங்கே?

 4. சித்திரவீதிக்காரன் சொல்கிறார்:

  இலகுலீசர் குறித்து நானும் பின்னூட்டங்களுக்கு பிறகு தான் தேடத்தொடங்கினேன். அன்று நாங்கள் சரியான நேரம் செல்லதாததால் இதைக்குறித்து சாந்தலிங்கம் அய்யா என்ன சொன்னார் என்று அறியமுடியவில்லை. தொல்லியல்துறை இலகுலீசர் என்று வைத்திருப்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதிவிட்டேன். ”ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுபவர்களும், குத்துவிளக்கு பூஜை செய்பவர்களும் ஓட்டு போடும் போது மதம் பார்ப்பதில்லை” என்று ஒரு முறை தொ.பரமசிவன் அய்யா சொன்னது ஞாபகம் வருகிறது. எனவே சகோதரர் அஞ்சத் தேவையில்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
  -சித்திரவீதிக்காரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s