காணாமல் போனேன் சாமியேயேய்…சரணம் ஐயப்பா!

Posted: செப்ரெம்பர் 9, 2011 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

“கூஜாவும் பையும் சேர்த்து, வீட்டிலேருந்து கிளம்புகிறபோது, இருபத்திரெண்டு சாமான்தான்…இப்போ எண்ணினால் இருபத்திமூணு இருக்கே… …ஆமாம். அதோ, அங்கே என்ன சாமான்?…”

“அது சாமான் இல்லே, அம்மா!… நம்ம சாமா!”

 

மேலே உள்ள நகைச்சுவைத்துணுக்கு சற்று மாறி என் வாழ்வில் நிகழ்ந்த கூத்தைக் குறித்த பதிவுதான். முதன்முதலாக சபரிமலைக்கு ஒண்ணாப்பு படிக்கையில்(1990-91) மாலை போட்டேன். மதுரையிலிருந்து கொல்லம் போய் அங்கிருந்து சபரிமலை செல்லத் திட்டம். அப்ப கொல்லத்துலதான் எங்க அத்தைவீடு இருந்தது. மதுரை ரயில்நிலையத்திற்கு படத்தில் உள்ளதைப் போல நிறைய உருப்படிகளோடு வந்தோம். என்னிடம் ஒரு பையைக் கொடுத்துட்டாங்க. ரயில் வந்ததும் இடம் பிடிக்க எல்லோரும் வேகமாகப் போக நானும் எங்க மாமா பின்னாடியே நடந்தேன். சரியான கூட்டம் வேறு. திடீர்ன்னு பார்த்தா அவரு எங்க மாமா இல்ல. எங்க மாமாவோட சட்டை நிறத்திலேயே அவரும் சட்டை போட்டிருந்ததால் கூட்டத்துல வழிமாறி வேறொருத்தர் பின்னாடி போய்ட்டேன். என்ன செய்வது எனத் தெரியாமல் அழாக்குறையா ஒரு இடத்துல உட்கார்ந்துட்டேன். இந்த சமயத்துல இடம் போட்டதும் கொண்டுபோன உருப்படிகளை எண்ணி வண்டியில் ஏற்றும்போது ஒரு பை குறையவும் அப்பத்தான் பையனக் காணோம்ன்னு ஆளுக்காளு தேடி ஒரு வழியா என்னையக் கண்டுபிடிச்சாங்க. அப்புறம் நல்லபடியா போய்ட்டு வந்துட்டோம். அப்ப எங்கப்பா எம்மகன் மட்டும் இல்ல உங்க எல்லாத்தையும் வெட்டி கொன்னுருவேன்னு கத்தியிருக்காப்ல. அத இன்னமும் சொல்லி எங்க அத்த, சித்தப்பாலாம் சிரிப்பாங்க.

அடுத்த முறை டிராவல்ஸ் குரூப்புடன் சபரிமலை சென்றோம். அப்போது எரிமேலியில் புலிமேல்வரும் அய்யப்பன் படத்துகிட்ட நானும் அப்பாவும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். அதை பள்ளி நண்பர்களிடம் காட்டி அய்யப்பனுடன் நின்று உண்மையிலேயே ஃபோட்டோ எடுத்ததாக அள்ளிவிட்டுத் திரிந்தேன்.

அதற்கு பிறகு பத்தாவது விடுமுறையின் போது (2000) எங்க மாமா சித்திரை விஷூவுக்கு அய்யப்பன் கோயிலுக்குப் போக மாலை போட்டுருந்தாரு. கிளம்புவதற்கு முதல்நாள் என்னையும் என் சகோதரனையும் கூட வர்றீங்களான்னு கேட்டார். நாங்களும் சரின்னு பகுமானமா கிளம்பிட்டோம். மாமா மற்றும் அவரது நண்பர்கள் அவங்க வீட்டு சின்னப்பிள்ளைகளோடு எல்லோரும் சேர்ந்து ஒரு வேன் நிறைய கிளம்பினோம். அதில் எங்க மாமாவோட நண்பர் ஒருத்தர் நாங்க வர்றதக் கேள்விப்பட்டு அவங்க வீட்டு ஆளுகட்ட இட்லி பத்துமான்னு கேட்டார். பகுமானமா கிளம்பி இருந்த எங்களுக்கு மானமே போச்சு. இருந்தாலும் வர்லன்னு சொன்னா மாமா திட்டுவாருன்னு பேசாட்ல கிளம்பிட்டோம். கடைசியில கொடுமை என்னன்னா நாங்க மாலை போடாததால அவங்கல்லாம் இருமுடியத் தூக்க எங்கள இட்லித்தூக்கத் தூக்கவிட்டுட்டாங்க. சாமியெல்லாம் கும்பிட்டு சாப்பிடும் போது சரியான பசியிருந்தும் நாலு இட்லியோட எந்திரிச்சுட்டோம். என்ன இருந்தாலும் நாம ரோசக்காரங்ங இல்லையா?

இதெல்லாம் இப்ப நினைக்கும்போது சிரிப்புதான் வருது. 1990 மற்றும் 2000’ல நடந்த சபரிமலை பயணக்கூத்த படிச்சுட்டீங்க. முடிஞ்சா சதுரகிரிக்கு 2010ல போன கூத்தயும் படிச்சுப்பாருங்க. இன்னிக்கும் ரயில் நிலையம் போகும்போது இந்த சம்பவம் ஞாபகம் வந்தால் சிரிச்சுக்குவேன். நம்ம வாழ்க்கையே கூத்துத்தான்.

பின்னூட்டங்கள்
  1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் மதுரை வாசகன் , அருமையான மலரும் நினைவுகள் – ஒண்ணாப்பு முதல் இன்று வரை – நானும் எழுதி இருக்கேன் – http://cheenakay.blogspot.com/2007/11/5.html – பத்தாவது 2010ல படிச்சியா – தட்டசுப் பிழை சரி செய்யவும். – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. suryajeeva சொல்கிறார்:

    history.. created..

  3. அப்பாதுரை சொல்கிறார்:

    சுவையான பதிவு. ‘பகுமானமா’ என்றால் என்ன பொருள்?

  4. சீனாஅய்யாவுக்கும், சூர்யஜீவா அவர்களுக்கும், அப்பாதுரை அவர்களுக்கும் நன்றி. அய்யா தட்டச்சு பிழையை சரிசெய்தாச்சு. நன்றி. படிக்கையில் இருந்தே வருசம் மறந்துடும். ”இதுவரை பொதுவா இத்தளத்தை தினமும் இருபது அல்லது இருபத்தஞ்சு பேர் பார்ப்பாங்க. இன்று மட்டும் முன்னூறுக்கும் அதிகமான பேர் பார்த்து இருக்காங்க. இதைப்பார்த்தவுடனே ரொம்பபகுமானமா ஆயிருச்சு” குஷி, ஜாலின்ற அர்த்தம் தான் பகுமானன்னு நினைக்கிறேன். இன்னொரு வார்த்தையில் சொன்னா ‘அதிகமகிழ்ச்சி’. மதுரையப்பக்கம் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவாங்க. வேற அர்த்தம் எதாவது இருந்தா யாராவது சொல்லுங்க. அனைவருக்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s