தமிழ்மணத்திற்கும், தமிழ்மனங்களுக்கும் நன்றி

Posted: செப்ரெம்பர் 11, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

தமிழுக்கு நன்றி. மதுரை வீதியில் சுற்றிக்கொண்டிருந்த சாதாரணவாசகனான என்னை இந்த வாரம் நட்சத்திரப்பதிவராக தேர்வு செய்து நல்வாய்ப்பு நல்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. அதற்கு காரணமான தமிழுக்கு நன்றி. தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இல்லாவிட்டால் நம் பதிவுகள் எல்லாம் நாட்குறிப்பேடு போல நாமே எழுதி நாமே வாசித்துக் கொண்டுதானிருக்க வேண்டும். அதற்காகவே தமிழ்மணத்திற்கு நன்றிகள் பல. வேர்ட்பிரஸ் தளத்திற்கும் நன்றி. இது போன்ற தமிழ்ப்பதிவுகளை எழுத இடமளித்து எதற்காக இலவசமாகப் பதிய வாய்ப்பு தர வேண்டும். அதனால் வேர்ட்பிரஸ் மற்றும் ப்ளாக்ஸ்பாட் போன்ற தளங்களுக்கு நன்றி.

தமிழ்மணம் நுகர்ந்து எங்கிருந்தோ வந்து சித்திரவீதியில் வந்து தடம்பதித்துச் சென்ற தமிழ்மனங்களுக்கு நன்றிகள் பல. மறுமொழியிட்டு என்னை மேலும் திருத்திக்கொள்ள வாய்ப்பளித்த அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நிறைய மறுமொழிகள் எனக்கு ஊக்கமளிப்பதாகவே வந்திருந்தன. சிரமேற்கொண்டு நேரம் ஒதுக்கி மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றி. மேலும், கணிணியில் தமிழ்தட்டச்சு வசதியில்லாமை, நேரமின்மை, அலுவலகத்தில் இருந்து வாசிப்பது போன்ற பல காரணங்களால் மறுமொழியிட நேரமில்லாத நண்பர்களுக்கும் நன்றி. ஏன்னா, இது போன்ற காரணங்களால் நானே நிறைய பதிவுகளுக்கு மறுமொழியிடாமல் வாசித்துக்கடந்திருக்கிறேன்.

சாதாரணமாக நாட்குறிப்பேட்டில் குறித்துவைத்ததை எல்லாம் இன்று பலர் அறியும்படி இந்த தளத்தை வடிவமைத்துக்கொடுத்து இந்தப்பதிவு வரை உறுதுணையாக உடன்நிற்கும் சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கு நன்றி. எனக்கு பெரும்பாலான புத்தகங்கள் வாசிக்கத்தந்தும், பெரும்பாலான பயணங்களில் என்னுடன் வந்தும், என் எழுத்து பிழையில்லாமல் வர உதவியதற்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

எனக்கு வாசிப்பின் ருசியை அறிய வைத்த குடும்பத்தினர்க்கு நன்றி. என் பதிவுகளைப் பார்த்து ஆலோசனைகளை வழங்கும் சகோதர, சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. சகோதரர்களுடன் நட்புடனும், நண்பர்களுடன் சகோதரத்துவத்துடனும் பழகுகிறேன். அதுவே, என்னை இயங்க வைக்கிறது.

என்னை மேலும் செதுக்கிய ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் நன்றி. தமிழின் உள்ள எல்லா எழுத்தாளர்களுக்கும் நன்றி. புத்தகங்கள்தான் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் தெய்வங்கள். மதுரைப்பதிவர்களுக்கும், மற்ற பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடைய தளமுகவரியை தங்கள் தளத்தில் இணைப்பாக கொடுத்துள்ள மதுரைபதிவர் ஆனந்தி அவர்களுக்கும், ஆம்பல் தளம் பீரவினுக்கும், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான தளவாய் சுந்தரம் அவர்களுக்கும் நன்றி.

பசுமைநடை என்ற குழுவை சிறப்பாக நடத்தி வரும் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நன்றி. ஏனென்றால், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், வரிச்சூர் எல்லாம் ‘பசுமைநடை’ குழு இல்லாவிட்டால் அங்கெல்லாம் நான் பயணித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். மதுரை குறித்த தொல்லியல் சுவடுகளை எளிமையாக அறிமுகப்படுத்தி எங்களுடன் பசுமைநடை பயணத்திற்கு உடன் வரும் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கும் நன்றி.

கணிணியில் முதன்முதலாக தமிழை பார்த்த போது இருந்த மனமகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. கன்னித்தமிழ் இன்று கணிணித்தமிழாகி உலகம் முழுக்க பயணித்துக் கொண்டிருக்கிறது. கணிணியில் தமிழை இன்னும் பல தளங்களுக்கு எடுத்துச்செல்ல உழைத்துக்கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

பொதுவாக இன்று நன்றி சொல்ல நினைக்கும்பொழுது பலர் வந்து நினைவில் நிற்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி. ‘நன்றி மறந்த தமிழர்கள்’ என்று ஒரு முறை கமல்ஹாசன் சொன்னார். அது உண்மைதான். தேங்க்ஸ், ஹன்ஸ் ரெண்டையும் ஒழிக்க முடியவில்லை. நானே சில நேரங்களில் தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு வருத்தப்படுறேன்.

மதுரைக்கு நன்றி. அதைக்குறித்து மேலும் எழுதத்தொடங்கினால் இந்தப்பதிவு போதாது. என்னுடைய வலிகளை, துயரங்களை எல்லாம் மறக்கச்செய்யும் மதுரைவீதிகளுக்கு நன்றியெல்லாம் ஒருவரியில் சொல்லிவிடமுடியாது.

எல்லோரும் என் தளத்தையே வாசியுங்கள் என்று சொல்ல மாட்டேன். இன்னும் நிறைய புத்தகங்கள், தளங்கள் இருக்கின்றன. வாசியுங்கள். வாசிப்பை இயக்கமாக்குவோம். நிறைய தளங்கள் தமிழில் மிக முக்கியமாக உள்ளன. கட்டாயம் அவைகளைத் தொடர்ச்சியாக வாசியுங்கள். நல்ல தமிழைத் தேடித்தேடி படியுங்கள். புத்தகங்களைப் பரிசளியுங்கள். இது வரை என்னுடைய பதிவுகளை வாசித்த முகமறியாத தமிழ் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

நாளை முதல் நட்சத்திரப் பதிவிட காத்திருக்கும் நபருக்கு நன்றி. ஏனென்றால் ஒரு வாரம் தொடர்ச்சியாக ஒன்றை செய்வது மிகவும் கடினம். எனவே, என்னிடமிருந்த அந்தப்பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கிறேன். இன்று மாலையே சித்திரவீதிகளை நோக்கி சுற்றக்கிளம்பிவிட்டேன். உலகின் எல்லா வீதிகளும் மதுரை சித்திரவீதிகளை நோக்கியே வருகின்றன.

பின்னூட்டங்கள்
  1. சீராசை சேதுபாலா சொல்கிறார்:

    தங்களை அறிமுகப்படுத்திய மீடியா வாய்ஸில் கட்டுரை எழுதிய ஹைதர் அலிக்கு நன்றி.அவர் எழுதிய சவூதிவரை நீண்ட சாதி என்ற கட்டுரைக்கான படங்கள் தங்கள் வலைப்பூவிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.(மீடியா வாய்ஸ் வார இதழ் 05-11-2011)
    ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்று தோன்றினால் அதனைச் செய்யாதிருப்பதே நன்று. என்பது என்றோ படித்ததொரு அனுபவ மொழி. தாங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றீர்கள். தங்கள் வலைப்பூ வடிவமைப்பு வெகு அருமை. படிக்கவும் தூண்டுகின்றது. தொடரட்டும் தங்கள் பணி. நான்காம் வகுப்பிலிருந்து நாட் குறிப்பு எழுதுவது வியப்பினைத் தருகின்றது. வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s