விகடன் வரவேற்பறையில் சித்திரவீதிக்காரன்…

Posted: ஜனவரி 5, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

மதுரேய்…

மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!

 – ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி

விகடன் வரவேற்பறையில் இருந்துதான் என்னுடைய இணைய வாசிப்புப்பயணம் தொடங்கியது. இன்று விகடன் வரவேற்பறையிலேயே என் பதிவுகள் குறித்த அறிமுகம் வந்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. விகடன் ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. விகடன் குழும ஊழியர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. 2012ன் முதல் இதழான விகடன் விருதுகள் ஸ்பெஷலில் வரவேற்பறையில் இடம் பெற்றதை பெரிய விருதாக எண்ணுகிறேன். என்னுடைய பகிர்வுகளை இன்னும் அதிக சிரத்தையோடு பதிவிடும் பொறுப்பை இந்த அறிமுகம் தந்திருக்கிறது.


விகடனில் வந்த சில கட்டுரைகளை எடுத்துப் பதிவிடும்போது அடியில் விகடனுக்கு நன்றி எனக் குறிப்பிடுவது வழக்கம். இன்று விகடனில் என்னைக்குறித்த அறிமுக வரிகளை வாசித்ததும் ஒற்றை வரியில் நன்றி என்று மட்டும் கூறிவிட முடியவில்லை. விகடனுக்கு நிறைய நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். விகடனும் நானும் என்று ஒரு பெரும் பதிவே எழுதலாம். அவ்வளவு நெருக்கமான பத்திரிக்கை விகடன்.

நிறைய பேசிக்கொண்டே திரிபவன் என்பதாலோ என்னவோ எழுத்திலும் உரையாடுவதைப் போன்ற மொழிநடை உருவாகிவிட்டது. என்னை ஆட்கொண்ட மதுரைக்கும், தமிழுக்கும் நன்றி. தொடர்ந்து உற்சாகமும், ஊக்கமும் தரும் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் நன்றி. பசுமைநடைப் பயணம்தான் மதுரையில் சமணம் குறித்த பதிவுகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் நன்றிகள் பல. என் மீது அன்பு கொண்ட மதுரைப் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

இன்று காலை என்னை அலைபேசியில் அழைத்து விகடன் வரவேற்பறையில் இத்தளம் குறித்த அறிமுகம் வந்ததைக் குறிப்பிட்டும், அதை தன்னுடைய தளத்திலும் பகிர்ந்தும் கொண்ட தமிழன் கோவிந்தராஜ்  அவர்களுக்கு நன்றி. என்னுடைய பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. சித்திரவீதியில் வந்து உலவி தடம் பதித்துச் சென்றமைக்கு நன்றி.

இலக்குகள் அற்றுத்திரியும் தேசாந்திரியாய், கோடுகள் மூலம் பேசும் சித்திரக்காரனாய், நினைவுகளைப் புனையும் கதைசொல்லியாய், மனங்களை ஈர்க்கும் கூத்தாடியாய் வாழத்தான் விரும்புகிறேன். அன்றாட வாழ்வுக்கும், விருப்பங்களுக்குமிடையே அந்நியமாகாமலிருக்க பயணங்களும் பதிவுகளும்தான் பாலமாயிருக்கிறது.

– சித்திரவீதிக்காரன்.

பின்னூட்டங்கள்
 1. neechalkaran சொல்கிறார்:

  மதுரேய்…
  வாழ்த்துகள்ண்ணே

 2. தனபாலன் சொல்கிறார்:

  தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா!

 3. Kumaran Malli சொல்கிறார்:

  வாழ்த்துகள் சித்திரவீதிக்காரரே.

 4. sivakumaran சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.

 5. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திரவீதிக்காரன்

  விகடனில் வரவேற்பறையில் அறிமுகம் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி – உனக்கு அறிமுக வேண்டுமா என்ன ? பாராட்டுகள் தான் குமிய வேண்டும். நல்வாழ்த்துகள் சித்திர வீதிக் காரன் – நட்புடன் சீனா

 6. வி.பாலகுமார் சொல்கிறார்:

  நேற்று ஆ.வி. பார்த்ததும் மனம் மகிழ்ந்தது. வாழ்த்துகள் மதுரைவாசகன் 🙂

 7. சுட்டபழம் சொல்கிறார்:

  மச்சி ட்ரீட்டு..?

 8. தொப்புளான் சொல்கிறார்:

  அம்ருதா இதழில் முழுப்பதிவும் வெளிவந்தது, பல பதிவர்களின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது, தமிழ்மண நட்சத்திரப் பதிவரானது வரிசையில் இப்போது ஆனந்த விகடன் அறிமுகம்.

  எளிய சொல்லல்முறை, நேர்மையான பாசாங்கற்ற பதிவுகள், உருப்படியான உள்ளடக்கம், தொடர்ந்த செயல்பாடு ஆகியவை பார்த்தவர்களின் எண்ணிக்கை, மறுமொழிகளின் எண்ணிக்கையைத் தாண்டி கவனம்பெறும் என்பதற்கு இது சான்று.

  நாய்க்கு அடுத்து நன்றிக்கு உதாரணமாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். பக்கத்துக்குப் பக்கம் நன்றி. மதுரையும் தமிழும் முழுக்கொள்ளளவைத் தாண்டி நன்றி சுமக்கின்றன.

  நானும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எனது முதலும் இறுதியுமான ஒரு சின்னஞ்சிறு கதையை விகடனுக்கு அனுப்பியிருந்தேன். “ஊருக்கு இளைத்தவன்..” என்பது தலைப்பு என்று நினைவு. நானே மறுமுறை படிக்காத அந்தக் கதையைப் பொறுமையாகப் பரிசீலித்து பிரசுரிக்க இயலாது என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்திருந்தார்கள் (எனக்கே சங்கடமாகப் போய்விட்டது)

 9. karthik சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நண்பா! .

 10. rathnavelnatarajan சொல்கிறார்:

  எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.

 11. வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. என்னுடைய தளத்தை விருப்பப்பதிவாக தேர்வு செய்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல. என்னுடைய பதிவுகளை முகநூலிலும், மற்ற வலைப்பக்கங்களிலும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள் பல. என்னை ஒரே நாளில் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய விகடனுக்கு நன்றிகள் பல.

 12. மதுரைக்காரன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் 🙂

 13. Balachandran.J சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நண்பா விகடன் வரவேற்பு அறையில் உங்களது வலைப்பதிவு இடம்பெற்றதற்கு. உங்களின் பெயர் தெரிந்துகொள்ளலாமா. என் நண்பன் ராஜ்குமார் மூலமாக உங்களது வலைப்பதிவு ஏற்கனவே எனக்கு அறிமுகம். கமலைப் பற்றிய உங்ளுடய பதிவு மிகவும் அருமை. நானும் கமலின் மிக தீவிர ரசிகன். நடிகனாக மட்டும் இல்லை நல்ல மனிதானகவும்.

 14. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  உளங்கனிந்த வாழத்துக்கள். பதிவிடுவதில்நீங்கள் காட்டும் சிரத்தையும் ஆர்வமும்
  உங்களை சிறந்த எழுத்தாளராகப் பத்திரிகை உலகில்உயர்த்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தொடரட்டும் உங்கள் தளராத பணி

 15. dharumi சொல்கிறார்:

  //என் மீது அன்பு கொண்ட மதுரைப் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.//

  ஓ! அப்போ எனக்கும் சேர்த்துதானே! நன்றிக்கு நன்றி.

  வாழ்த்துகள் … வளர்க மேலும் மேலும் …

 16. Senthil Kumar சொல்கிறார்:

  Aananth vikatan moolamaga thangalai arinthen.. nanrigal pala vikatanukku… vazhathukkalodu thedarvom….

 17. அப்பாதுரை சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சித்திரவீதிக்காரரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s