வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன்

Posted: ஜூன் 6, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக் குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின், அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது.

 – வண்ணதாசன்.

வாசித்தலும், அலைதலும் இன்பமென்றால் அதை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதுதான் அலாதி இன்பம். வாசித்த புத்தகங்களைக் குறித்தும், அலைந்து திரிந்த இடங்களைக் குறித்தும் மற்றவர்களிடம் சொல்லாவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும். வாழ்க்கையே ஒரு பகிர்தல்தானே. நம்முடைய இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதில்தான் நிம்மதியே கிடைக்கிறது.

 வலைச்சரம் என்னும் தளத்தில் வாரம் ஒரு வலைப்பதிவர் தனக்கு பிடித்த பதிவுகளைக் குறித்து பதிவு எழுதி வருகிறார்கள். அத்தளத்தில் என்னையும் ஒரு வாரம் பதிவிட வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் சீனாஅய்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. வேர்டுபிரஸ் பதிவரான எனக்கு ப்ளாக்ஸ்பாட்டிலும் பதிவிட கற்றுத்தந்தமைக்கும் நன்றிகள் பல.

 மதுரையின் பலவிதப் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டு 16.4.2012 முதல் ஏழுநாட்களுக்கு பதிவுகளை ஏற்றினேன்.  இந்தப் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள், முக்கியமான வலைத்தளங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய பதிவுகள், வேர்டுபிரஸ்பதிவுகள், பசுமைநடை குறித்த பதிவுகள், விழாக்கள், ஆளுமைகள், புத்தகங்கள், ஓவியங்கள், விளையாட்டுகள், நாட்டுப்புறக்கலைகள் எனப் பலவற்றையும் குறித்த பதிவுகளை குறிப்பிட்டிருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. ஒவ்வொன்றையும் மெல்ல வாசித்துப்பாருங்கள்.

  1. மதுரை சித்திரவீதிகளிலிருந்து…
  1. கடம்பவனத்திலிருந்து…
  1. காவல்கோட்டத்திலிருந்து…
  1. நான்மாடக்கூடலிலிருந்து…
  1. தூங்காநகரிலிருந்து…
  1. விழாமலிமூதூரிலிருந்து…
  1. சங்கத்தமிழ் வளர்த்த ஆலவாயிலிருந்து…
பின்னூட்டங்கள்
  1. வலைச்சரத்தில் சென்ற வாரம் அப்பாத்துரை அவர்கள் அருமையாக தனக்கு பிடித்த பதிவுகளைக் குறித்து எழுதினார். அதை வாசிக்க
    http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_03.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s