சித்திரவீதி

Posted: ஜூலை 1, 2012 in பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:

இன்றைக்கு ஏதோ இப்படி எழுத்துக் கூட்டி ‘ஓவியம்’ என்று உச்சரிக்கத் தெரிகிறது. அப்போது அந்தச் சொல்லே ஆடம்பரம். ‘அண்ணனும் தம்பியும் எப்பப் பார்த்தாலும் எதையாவது கிறுக்கிட்டு இருக்காங்க’ என்று சொல்வார்கள். கிறுக்குவது என்றால் வரைவது. வரைவது ஒருவகைக் கிறுக்கு என்பதால், அதை ஆட்சேபிக்கவும் எங்களுக்கு அவசியமில்லாது போயிற்று.

 – வண்ணதாசன்

சித்திரங்களின் மீதான காதலும், சித்திரக்காரனாக வேண்டுமென்ற ஆவலும் இன்னும் தீரவில்லை. அம்புலிமாமாவில் விக்ரமாதித்தன் வேதாளம், பூந்தளிரில் கபீஸ் குரங்கு, காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி சித்திரங்கள் எல்லாம் மனதில் இன்றும் பசுமையாக உள்ளது. சித்திரங்களும், கதைகளுமே புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

வண்ணதாசன் அவர்கள் சொல்வது போல வரையிர கிறுக்கு எனக்கு எங்கப்பாவிடமிருந்து தொற்றிக் கொண்டது. நான் பெரிய சித்திரக்காரனொன்றுமில்லை. புத்தகங்களில் வரும் படங்களை வரைந்து பார்ப்பது வழக்கம். சில்பியின் கோட்டோவியங்கள் எனக்கு அதுபோன்று வரைய வேண்டுமென்ற ஆசையை வளர்த்தது. அதன் பிறகு கோட்டோவியங்களைத் தேடித்தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறேன். குமுதம் பக்தி ஸ்பெஷலில் காந்தனின் கோட்டோவியங்கள், விகடனில் ஜெ.பி வரைந்த கோட்டோவியங்களும் என்னை மிகவும் ஈர்த்தன.

மனோகர் தேவதாஸ் வரைந்த MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகத்தை 2007ல் வாங்கினேன். அதில் மதுரையின் பல இடங்களை மிக அழகான கோட்டோவியமாக வரைந்திருந்தார். அவரைப் போல மதுரையை சித்திரமாகப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆசை அதிகம் உண்டு. வார இதழ்கள், மாத இதழ்களில் வரும் அருமையான ஓவியங்களை எல்லாம் பார்க்கும் போது அதுமாதிரி வரைய வேண்டுமென்ற ஆவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபமாக ஆனந்தவிகடனில் ராஜ்குமார் ஸ்தபதியின் சித்திரங்களில் வரும் விளிம்புநிலை மனிதர்களும், இளையராஜாவின் சித்திரங்களில் வரும் பெண்களும், ஹாசிப்கானின் சித்திரங்களும் தரும் நெகிழ்ச்சியை எழுத்துகளில் பதிய முடியுமா எனத்தெரியவில்லை.

2007 கார்த்திகை மாதம் ஒரு நோட்டில் தினசரி ஒரு படத்தைக் கோட்டோவியமாக கருப்புமை பேனாவினால் வரைந்தேன். ஒரு மாதம் தொடர்ச்சியாக வரைந்த படங்களையெல்லாம் பார்க்கும் போது இப்பழக்கம் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று ஏக்கமாய் இருக்கிறது. அதிலிருந்து கொஞ்சப்படங்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

 இந்தப் படங்கள் எல்லாம் நேர்த்தியாக வரையப்பட்டவை அல்ல. புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். இனிவரும் பதிவுகளில் நிறைய சித்திரங்கள் நன்றாக வரைய வேண்டுமென்ற ஆசை உள்ளது.  மதுரை அருளட்டும்.

 

 

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார அருமையான பதிவு- படங்களும் அருமை. படம் வரையத் தூண்டிய பல்வேறு பாலய வயது நிகழ்வுகளும் – ஆர்வமும் ஒரு சிறந்த ஓவியனை உருவாக்கி இருக்கிறது. தொடர்க ஓவியம் வரைவதினை. படகுச்சவாரி, பிரமிட், புது மண்டபம் ( நந்தி உட்பட), மாமல்லபுரக்கடல், ரதம், யானை, தஞ்சைப் பெரிய கோவில், மதுரைக் கோபுரம், அழகர் ஆற்றில் இறங்கும் கண் கொள்ளாக்காட்சி அனைத்தும் உன் திறமையை வெளிக் காட்டுகின்றன, நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை. உங்கள் வரைவுகள் பாராட்டத் தக்க அளவில் இருக்கின்றன. தொடர்ந்து முயற்சி செய்யலாம். சித்திரமும் கைப்பழக்கம். வாழ்த்துகள்.

 3. வி.பாலகுமார் சொல்கிறார்:

  படங்கள் அனைத்துமே அருமையாக உள்ளன. பயணங்களில் விருப்பம் உள்ள நீங்கள் பல்வேறு காட்சிகளை சித்திரமாக பதியும் போது அவை மேலும் மெருகேறும். தொடருங்கள். வாழ்த்துகள்

 4. சாக்பீஸ் சொல்கிறார்:

  படங்கள் அருமையாக உள்ளன. தொடர்ந்து வரையுங்கள். அவ்வப்போது அவற்றைப் பதிவிடுங்கள்.

 5. vidhaanam சொல்கிறார்:

  நேர்த்தி என்பது நுணுக்கங்களில் மட்டுமல்ல. overall form-தான் முக்கியம். அது உங்கள் கோட்டோவியத்தில் கைவந்துள்ளது. உண்மையில் இவை நேர்த்தியான சித்திரங்களே.

 6. மே.இளஞ்செழியன் சொல்கிறார்:

  நண்பரும் மதுரைவாசகனுமாகிய சித்திர வீதிகாரருக்கு வாழ்த்துக்கள். அனைத்துச் சித்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் சித்திர ங்களுக்குள்ளேயே போட்டி நடைபெறுகிறது. நீ முதலா நான் முதலா என்று? சரி நாம் தான் தீர்த்து வைத்து போட்டியை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றால்…. எந்த சித்திரத்துக்கு முதல் தரம் தரலாம் என்றால்??? அங்கு என் மனதில் போட்டி ஆரம்பமாகியது. இது என்ன புது கொடுமை. சரி அனைத்துமே முதல் தரம் என்பதால், பாராட்டுகளும் முதலிடமும் நண்பர் சித்திரவீதிகாரருக்குத்தான்.

 7. தருமி சொல்கிறார்:

  அடப் பாவி மனுஷா!
  இந்த மாதிரி scribbling art வரைய எம்புட்டு ஆசை சிலருக்கு (எனக்கு!?) … இம்புட்டு நல்லா வரையிற மனுஷன் அத தூங்கப்போட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கே.

  நம்ம காபா கல்யாணத்துக்கு தமிழ்ப்பறவை வரஞ்ச படம் மாதிரி இருக்கு ..முயற்சி பண்ணினா ரொம்ப நல்லா வரும் போல இருக்கு. உடாதீங்க … பிடிங்க!!

 8. mahashree சொல்கிறார்:

  mikka nandru. Kottoviyangal ennudaiya aarvamum kooda!

 9. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அன்பின் சுந்தர்,
  அடேயப்பா, இந்த அருமையான படங்களைக் கொடுக்க இவ்வளவு நாட்களா?
  அருமையான திறமையை ஒளித்து வைத்திருந்தீர்களே? ஏன்?
  இனி உங்கள் ஓவியங்களோடு கூடிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s