மதுரை புத்தகத்திருவிழா

Posted: செப்ரெம்பர் 1, 2012 in பார்வைகள், பகிர்வுகள், மதுரை புத்தகத் திருவிழா

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு. புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத்திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப் பட வேண்டியவை”.                  – தொ.பரமசிவன்

மகிழ்ச்சியாகயிருக்கிறது. மதுரையில் புத்தகத்திருவிழா தொடங்கிவிட்டது. இம்முறை புத்தகத்திருவிழாவிற்கு தினமும் செல்ல வேண்டும்; நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும்; ஆளுமைகளின் உரைகளைப் பதிவு செய்ய வேண்டும் என நிறைய ஆசைகள் முளைத்துவிட்டன. மதுரை புத்தகத்திருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. எல்லோரும் வாருங்கள். வாசிப்புத்திருவிழாவைக் கொண்டாடுங்கள்.

வாழ்க்கை முழுக்க ஒளிந்துகிடக்கிற ரகசியங்களை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும், கேள்விகளால் நம் மனதில் நிறைய வெளிச்சங்களைக் கொண்டுவருதற்கும் வாசிப்புப் பழக்கம் அவசியம்.

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி. அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். எழுத்துக்களையோ, சிந்தனைகளையோ யாரும் யாருடைய மூளையிலும் திணிக்க முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியின் மூலமே நடைபெறும். 15 வயது ஆகிற குழந்தை இன்று 24 மணி நேரத்தில் 15 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பாடப்புத்தகங்களுடன் செலவிடுகிறது. கல்லூரி வரை நம் குழந்தைகளின் மூளையில் திணிக்கப்படுகிற பாடப் புத்தகங்களைத் தவிர அவர்களுக்கு வேறென்ன படிக்கக் கற்றுத் தருகிறோம்? வாசிப்புப் பழக்கம் என்பது பசியாகவும் ருசியாகவும் இருக்க வேண்டிய நிலைமை மாறி, நம் அடுத்த தலைமுறைக்கு அது அலர்ஜியாகிவிட்டது! கல்லூரி முடிந்ததும் புத்தகங்களுக்கும் அவர்களுக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது.

வீடுகளுக்குள் ‘படிக்கிற பழக்கம்’ இருந்தால்தான் அது பிள்ளைகளுக்கும் வரும். குழந்தைகளுக்கு நீச்சல் பழக்குவதைப் போல, இசை கற்றுக்கொடுப்பது போல நூல்களை வாசிக்கவும் கற்றுத் தர வேண்டும். ஒரு விடுமுறை நாளை குழந்தைகளோடு நூலகத்தில் செலவிட பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

வீடுகட்டுகிறபோது சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை என்று பார்த்துப் பார்த்துக் கட்டுகிறோம். அந்த வீட்டில் படிப்பதற்காக ஓர் அறையைத் தனியே ஒதுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு அலமாரியையாவது ஒதுக்கலாமே!

– அசோகமித்ரன்

நன்றி – தமிழ் மண்ணே வணக்கம், ஆனந்தவிகடன்

தொடர்புடைய பதிவு

மதுரை புத்தகத்திருவிழா நாட்குறிப்புகள்

பின்னூட்டங்கள்
 1. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  நல்லதொரு பதிவு – புத்தகத் திருவிழா செல்ல வேண்டும் – செல்கிறோம் – இயன்றால் எங்களுடன் வா – எந்தப் புத்தகம வாங்கலாம் என உன ஆலோசனைகள் தேவை. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. /// வீடுகளுக்குள் ‘படிக்கிற பழக்கம்’ இருந்தால்தான் அது பிள்ளைகளுக்கும் வரும். ///

  முதலில் அதை செய்ய வேண்டும்…
  நன்றி… வாழ்த்துக்கள்…

 3. Bhaskar சொல்கிறார்:

  மீண்டும் புத்தகம் வாங்க ஒரு வாய்ப்பு. வாங்கிய புத்தகப் பட்டியை வெளியிடுங்கள். மேலும் இந்த பதிவில் இருக்கும் மீனாட்சியம்மன் கோவில் புகைப் படம் எப்போது எடுத்தது? மிகவும் நன்றாக உள்ளது. மதுரைப் பற்றி நினைத்தால் முதலில் நினைவிற்கு வருவது உங்கள் தளம் தான்.

  • மதுரை கிழக்கு சித்திரை வீதி புகைப்படம் 1875ல் எடுக்கப்பட்டதாக ஒரு புத்தகத்தில் பார்த்தேன். இந்த முறை மதுரை புத்தகத்திருவிழா நாட்குறிப்புகளை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன். தங்கள் மறுமொழிக்கு நன்றி

 4. அப்பாதுரை சொல்கிறார்:

  கொண்டாடுங்கள் .

 5. Balu சொல்கிறார்:

  சித்திரவீதிக்காரரே! மதுரை புத்தக திருவிழாவிற்காக மெனக்கெட்டு பெங்களூரிலிருந்து மதுரை வந்து ஒரு நாள் பூரா சுற்றினேன்! பணப்பற்றாக்குறையால் 4000 க்கு மட்டுமே புத்தகங்கள் வாங்க முடிந்தது. காவல்கோட்டம் வாங்க பர்சில் பணம் இல்லை. ஊர் திரும்ப ரூபாய் 600 மட்டும் வைத்துக்கொண்டேன். ஸ்டால்களும் குறைவாக இருந்த மாதிரி ஒரு தோற்ற பிரமை! யாராவது நூலகத்தை விற்பனை செய்வதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். உங்கள் தளம் மிகவும் அருமை. விகடனுக்கு நன்றிகள் உம்மை அறிமுகப்படுத்தியமைக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s