வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்

Posted: செப்ரெம்பர் 3, 2012 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

அம்புலிமாமா, பூந்தளிர், படக்கதைகள் என இளமையில் வாசிப்புப்பழக்கம் நன்றாகத்தொடங்கினாலும் பள்ளிநாட்களில் பாடப்புத்தகங்களால் கொஞ்சம் மந்தப்பட்டது. மனப்பாடக்கல்வியிலிருந்து வெளியே வந்து சுயமுன்னேற்ற நூல்களில் மாட்டிக்கொண்டேன். நல்லவேளை ஆனந்தவிகடன் வழியாக தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தின் துணையுடன் கதாவிலாசத்தினுள் நுழைந்தேன். எதை வாசிப்பது என்று கேள்விக்குறியோடியிருந்த எனக்கு சிறிதுவெளிச்சம் கொடுத்தார்.

சமீபத்தில் சகோதரனின் நாட்குறிப்பேட்டை வாசிக்க கொடுத்தார். அதில் தினசரி நடந்தவைகளை எழுதாமல் வாசித்த புத்தகம் குறித்து, மறக்க முடியாத நிகழ்வுகளை குறித்தெல்லாம் எழுதியிருந்தார். அதில் என்னால் எஸ்.ராமகிருஷ்ணனின் வாசகபர்வம் வாங்கி வாசித்ததாக எழுதியிருந்தார். அதை அவரது அனுமதியுடன் கேட்டு பதிவு செய்கிறேன்.

நிரம்ப புத்தகங்களை படித்து எதையாவது எழுத வேண்டும் என்று மனதளவில் மட்டுமே ஆசைகளை சேகரித்த எனக்கு, எடுத்து கையில் தராத குறையாக என்னை புத்தகம் படிக்க தூண்டியதில் என் தம்பிக்கு பெரும்பங்கு உண்டு.

பொதுவாக அவன் பேசுவது கமல்ஹாசனைப்பற்றியும், சமணர்குகைகளையும், நாட்டுப்புறக்கதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளைப் பற்றிய பேச்சாகவும் இருக்கும். அவ்வாறான விருப்பத்தில் எஸ்.ரா. பற்றிய கதைகளை தேடலானேன். அதன் முதல் முயற்சியாக நான் தேர்வு செய்து வாசிக்க ஆரம்பித்த புத்தகம் வாசகபர்வம்.

ஒவ்வொரு வாசகனுக்கும் குறிப்பாக முதல் வாசகனுக்கு உகந்த ஒன்றாக வாசகபர்வம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எழுத்தோடு வாசகனுக்கு உள்ள நெருக்கம் அந்தரங்கமானது என்ற முன்னுரையுடன் துவங்கும் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் பொழுது அந்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தனது வாழ்க்கையில் கண்டு வியந்த மனிதர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகள் மற்றும் வாழ்வில் அவர்கள் கண்ட துயரங்களையும் நேர்த்தியாக விளக்கியுள்ளார். படித்து முடிக்கும் பொழுது சொல்லப்பட்ட ஒவ்வொரு படைப்பாளியின் அனைத்து படைப்புகளையும் படித்து தீர்த்துவிட வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது. குறிப்பாக நானும் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை உண்டானதில் ஆச்சர்யமில்லை.

மிகச்சிறந்த எழுத்தாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் எஸ்.ரா.விற்கு இதனை எழுதுவதற்கு எத்தனை ஆண்டு கால உழைப்பு, அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. எழுத்தாளனாக மட்டுமே வாழ்க்கையை நடத்துவது என்பது நமது சமூகத்தில் மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது.

என்னதான் எழுத்தாளனும் அவனது படைப்புகளும் மக்கள்  மனதில் நின்றாலும் நினைவு படுத்தினாலும், அவரவர் காலகட்டத்தில் தகுதியான மதிப்பு அளிக்கப்படவில்லை என்பது வேதனையாகவே உள்ளது. இன்றும் நம் மக்களிடையே புரிந்து கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல் இல்லாமலே இருக்கிறது.

ஒவ்வொரு படைப்பாளியின் வெற்றியும், துயரங்களும் அவனது சுற்றத்தாருக்கும் துறை சார்ந்த மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக அவனது படைப்பின் வெற்றி சமகாலத்தில் கொண்டாட படாமலே விடப்பட்டு வருகின்றது. (6.8.10)

எஸ்.ராமகிருஷ்ணனின் வாசகபர்வம் உயிர்மையில் தொடராக வந்தபோதே மாதந்தோறும் விடாமல் வாசித்துவிடுவேன். வண்ணநிலவன், வண்ணதாசன், விக்ரமாதித்யன், கோணங்கி எல்லாம் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களால் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். சகோதரரும் அப்படித்தான் சொன்னார். இப்புத்தகத்தைப் படித்து பல ஆளுமைகளின் நூல்களை வாசித்தேன். அதில் ப.சிங்காரம் குறித்த கட்டுரையை வாசித்த பிறகு அவரது ‘கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி’ வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள் பட்டியலை வைத்து வாசிக்கத்தொடங்கினேன். கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகங்களுள் வாசகபர்வமும் ஒன்று.

 

பின்னூட்டங்கள்
 1. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார, அருமையான் புத்தக விமர்சனம் – புத்தகத் திருவிழா நட்க்கிறது – வாங்கி விடுவோம் – படித்திடுவோம் – நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

 2. சிறப்பான பகிர்வு… மிக்க நன்றி…

 3. அப்பாதுரை சொல்கிறார்:

  காவல் கோட்டம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 4. Balu சொல்கிறார்:

  கோணங்கியுடைய மதினிமார்கள் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? ஒரு திறனாய்வு தாருங்களேன்! கோணங்கி இப்பொழுதும் ஊர் சுற்றிப்பறவை தானா?

 5. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  எஸ்.ரா.வின் பல படைப்புகளோடு நான் ஒன்றிப் போவதுண்டு.
  உங்கள் பதிவு மீள நினைந்தூற வைத்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s