சிறுகதை என்பது மிக இளம் வயதிலிருந்தே என்னை வசீகரித்த ஓர் இலக்கிய வடிவம். குறுகத் தரித்த குறள் போல வளவளப்பே இல்லாத சிக்கனமான சொற்களில் வேண்டாத வருணனைகளைத் தவிர்த்தபடி – தேவையானதை மட்டுமே நறுக்கெனச் சொல்லி வாழ்வின் ஒரு பக்கத்தைக் காட்டி அதன் மூலம் முழு வாழ்க்கைத் தரிசனத்தின் ஒரு துளியை உணர வைக்கும் அற்புத வடிவம் சிறுகதை. தமிழின் சிறந்த சிறுகதைகளில் இதுவரை படிக்காமல் தவற விட்டவற்றைத் தேடித் தேடிச் சேர்த்து ஒரு நாளைக்கு ஒன்றாகக் குறைந்த பட்சம் வருடத்தில் 300 கதைகளையாவது படித்து முடிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தபடி தீவிர வாசிப்பைத் துவங்கினேன். – எம்.ஏ.சுசீலா
சுசீலாம்மாவின் தளத்தில் கதை உதிர் காலம் பதிவை வாசித்ததிலிருந்து நானும் தினமும் குறைந்த பட்சம் ஒரு சிறுகதையாவது வாசித்துவிட வேண்டுமென்று நினைத்தேன். (நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் தேவையில்லை என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது). பல மாதங்களாகவே இழுத்தடித்துக் கொண்டு வந்த இந்த விசயம் சமீபத்தில் நிறைவேறியது. ஆவணி மாதம் தினம் ஒரு சிறுகதையாவது வாசிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு நோட்டுபுத்தகத்தில் தினமும் வாசிக்க, வாசிக்க கதைகளின் பெயர்களை குறித்து வைத்துக்கொண்டேன்.
தினமும் குறைந்த பட்சம் ஒரு சிறுகதையும் அதிக பட்சம் மூன்று கதைகளும் வாசித்தேன். தினமும் வாசிக்காமல் தூங்கக்கூடாது என்ற முடிவால் ஒருவழியாக இம்மாதம் ஐம்பது சிறுகதைகள் வாசிக்க முடிந்தது. கடைசிநாளான ஆவணி 31 அன்று மட்டும் ஐந்து கதைகள் வாசித்தேன்.
ஆவணிக்கதைப்பட்டியல்
- புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- அவனுக்குப் மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்
- காற்றின் அனுமதி – வண்ணதாசன்
- ஒரு தற்காலிக ஒளிவட்டம் – வண்ணதாசன்
- அடி – வண்ணதாசன்
- ஒரு அமர ஊர்தியை முன் வைத்து – வண்ணதாசன்
- நித்யா – பாவண்ணன்
- இடலாக்குடி ராசா – நாஞ்சில்நாடன்
- அவன் பெயர் முக்கியமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
- பெருக்கு – வண்ணதாசன்
- பாசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும் – வண்ணதாசன்
- ஒரு முடிவுக்கு பிறகு – பாவண்ணன்
- கணியன் பூங்குன்றனார் – சுரேஷ்குமார இந்திரஜித்
- மரம் – பாவண்ணன்
- பார்வை – பாவண்ணன்
- கோட்டை காவல்நிலையம் – தமயந்தி
- ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும் – வா.மணிகண்டன்
- அந்தப் பையனும் ஜோதியும் நானும் – வண்ணதாசன்
- அடுத்தமுறை – அசோகமித்திரன்
- காதுகள் – சுப்ரபாரதிமணியன்
- சொற்கள் சோறு போடும் – நடராஜன்
- விழமுடியாத படங்கள் – வண்ணதாசன்
- முடிவற்று நீளும் கோடை – யுவன் சந்திரசேகர்
- அருளிச்செய்தது – வண்ணதாசன்
- வெள்ளம் – வண்ணதாசன்
- கசப்பான ஒரு வாசனை – வண்ணதாசன்
- ஒருத்தருக்கு ஒருத்தர் – வண்ணதாசன்
- ஆற்றைக் கடந்து வீடு – வண்ணதாசன்
- காணிக்கை – பாவண்ணன்
- நிலத்து இயல்பால் – வண்ணதாசன்
- எழுதிவைக்காதவை – வண்ணதாசன்
- முழுக்கைச்சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் – வண்ணதாசன்
- கண்ணன் – நகுலன்
- காடன்விளி – ஜெயமோகன்
- மரகதமலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு – க.சீ.சிவக்குமார்
- நடேசக்கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும் – வண்ணதாசன்
- மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது – வண்ணதாசன்
- சில சமயங்கள் – வண்ணதாசன்
- வாழையடிகள் – வண்ணதாசன்
- ஒரு உயிர் விலை போகிறது – எம்.ஏ.சுசீலா
- இழப்புகள்… எதிர்பார்ப்புகள்… – எம்.ஏ.சுசீலா
- லூஸூ ஓனர் – ம.காமுத்துரை
- கென் மாமா – ரஸ்கின் பாண்ட்
- நீலப்படம் – வா.மணிகண்டன்
- நூறுகள் – கரிச்சான்குஞ்சு
- அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார்
- அணையா நெருப்பு – கமல்ஹாசன்
- ஏழுமலை ஜமா – பவா செல்லத்துரை
- நொந்தலாலா – ராஜூ முருகன்
- சோற்றுக்கணக்கு – ஜெயமோகன்
வண்ணதாசனின் நடுகை சிறுகதைத்தொகுப்பும், பாவண்ணனின் வெளியேற்றப்பட்ட குதிரை சிறுகதைத்தொகுப்பும் இருந்ததால் தினம் ஒரு சிறுகதை வாசிக்க வசதியாக இருந்தது. வியாழன்று விகடனில் வரும் நட்சத்திர எழுத்தாளர் சிறுகதையை விடாமல் வாசித்துவிடுவேன். மேலும், சில கதைகள் இணையத்திலிருந்து வாசித்தேன்.
ஆவணி16 அன்று புத்தகத்திருவிழா சென்றுவிட்டு அங்கிருந்து கிளம்பும் போதுதான் அன்றைக்கான சிறுகதை வாசிக்கவில்லையென்ற ஞாபகம் வந்தது. பின் உணவகத்தில் தோசைக்காக காத்திருந்த பொழுதில் சகோதரன் வாங்கிய சொற்கள் சோறு போடும் என்ற அங்கதச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘சொற்கள் சோறு போடும்’ என்ற கதையை வாசித்தேன். இப்படித்தான் தினம் ஒரு சிறுகதையை எப்படியாவது வாசித்தேன்.
ஆர்.எம்.நௌஸாத்தின் நட்டுமை என்ற நாவல், ந.முருகேசபாண்டியனின் குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் என்ற கட்டுரைத் தொகுப்பு, வண்ணதாசனின் சில இறகுகள் சில பறவைகள் என்ற கடிதத்தொகுப்பும் இம்மாதம் வாசித்தேன்.
சுசீலாம்மாவின் தளத்தில் தற்போது தப்பவிடக்கூடாத சிறுகதைகள் என்னும் தொடர்பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார். புரட்டாசி மாதமும் இன்னும் நிறைய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் வாசிக்க வேண்டும்.
சிறுகதைகளை இணையத்தில் வாசிக்க
”பதிவு ஒன்றிற்கு படம் ஒன்று” என்றும் ஒரு முடிவெடுங்களேன்.
அப்பப்பா… ஐம்பது சிறுகதைகள்…
இணைப்பில் கொடுத்ததை வாசிக்கிறேன்… நன்றி நண்பரே…
நல்ல பதிவு ,அருமையான தகவல்
இணையத்தில் நிறைய பேர் நல்ல சிறுகதைகள் எழுதுகிறார்களே – நீங்கள் குறிப்பிட்டிள்ள சில “இலக்கியக் காவலர்களை” விட சிறப்பாக எழுதுவதாக நினைக்கிறேன். படித்துப் பாருங்களேன்?
பழக்கம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து படிக்க வாழ்த்துகிறேன்.
அன்பின் சித்திர வீதிக்கார , உனது வாசிப்புப் பசி பிரமிக்க வைக்கிறது – அத்தனையும் படித்து – பதிவிட்டு – படம் வரைந்து – அட்டகாசம் . தருமி அண்ணனின் மறு மொழியில் அவரது ஆலோசனைஅயைக் கடைப் பிடிக்கலாமே – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா