madurai

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்  

புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்

தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன் 

நான்மாடக் கூடல் நகர்.   

 – பரிபாடல்

 

நான்மாடக்கூடலில் ஒரு நாடறி நன்மணம்

stil

மதுரை புத்தகத்திருவிழா என்றால் எனக்கு பெருங்கொண்டாட்டமாகயிருக்கும். இம்முறை மதுரை புத்தகத்திருவிழா தொடங்கிய 30.8.2012 அன்று எனது சகோதரருக்குத் திருமணம். இந்த இருநிகழ்வுகளையும் சிறப்பிக்கும் வகையில் திருமணத்தன்று புத்தகம் மற்றும் விதைகள் கொடுக்கலாமென்று மற்ற சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தோம். மதுரை மற்றும் தமிழின் முக்கிய ஆளுமைகளின் கவிதைகள் & கொஞ்சம் பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக போட திட்டமிட்டோம் – “உரிமையுடன் எடுத்தாண்டுள்ளோம். படைத்தவர்களுக்கு நன்றி” என்ற வாசகங்களுடனும், பின்னட்டையில் புத்தகத் திருவிழா குறித்த விளம்பரத்துடனும். மின்தடை & நாட்கள் குறைவு என்பதால் புத்தக வடிவமைப்பு நாங்கள் நினைத்தளவு வரவில்லை. இருந்தாலும் இறுதியில் புத்தகமாக வாங்கி பார்த்தபோது திருப்தியாக இருந்தது. இருபது பக்கத்தில் எல்லோருடைய கவிதை & பத்திகளை தொகுக்க முடியாவிட்டாலும் ஓரளவு வாசிப்பின்  மீதான ஆர்வத்தை எல்லோருக்கும் அந்தப் புத்தகம் கொடுக்கும் என்று நம்புகிறோம். திருமணநாளன்று புத்தகத்தையும் மரம், செடிகளின் விதைகளடங்கிய காகித பையையும் வந்தவர்களுக்கு கொடுத்தோம். நாங்கள் வெளியிட்ட அந்தப் புத்தகத்தை பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

தூங்காநகரம்

மதுரையை அல்லும் பகலும் இடைவிடாமல் அங்கயற்கண் அம்மையின் கயல்விழிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. தாய்வழிச்சமூகத்திலிருந்து மனிதர்கள் வந்ததை மதுரை இன்றும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. மதுரைக்கு நான்மாடக்கூடல், கடம்பவனம், திருஆலவாய், விழாமலிமூதூர், கோயில்மாநகரம், தூங்காநகரம், கிழக்கிந்தியநாடுகளின் ஏதென்ஸ் எனப் பல பெயர்கள் உண்டு. தூங்காநகரமான  மதுரையை குறித்த ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை அலுவல் விசயமாக கோயம்புத்தூரிலிருந்து மதுரை வந்தவரை அழைத்து கொண்டுபோய் தங்கும்விடுதியில் சேர்க்கும் பணியை எனக்கு கொடுத்திருந்தார்கள். நானும் நண்பரும் அவர் வரும்வரை ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தை சுற்றிக்கொண்டிருந்தோம். அவர் கோவையிலிருந்து இரவு பதினொரு மணியளவில் வந்தார். அங்கிருந்து தங்கும் விடுதி அழைத்து செல்லும் வழியில் அவரிடம் சாப்டீங்களா என்று கேட்டேன். அவர் இல்லையென்றதும் இரவு உணவு வாங்கி கொடுத்து கொண்டு போய்விடலாமென்று நானும் நண்பரும் முடிவு செய்தோம். சாலையோர இட்லிக்கடைக்கு போனால் நள்ளிரவிலும் நல்ல கூட்டம். அந்நேரமும் சூடாக பொடி தோசை, முட்டைதோசை என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு இட்லி வாங்கினோம். அவர் அந்தக்கடையை ஆச்சர்யமாக பார்த்தது இன்னும் நினைவிலிருக்கிறது. இப்படி மதுரையின் பெருமை சொல்லும் ஒரு நீண்ட கட்டுரை ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவ  தமிழ்ப்பாட நூலில் வந்துள்ளது. அந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

அழகுமதுரை என்ற ஒலிஒளிக்காட்சியையும் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=FJWkRVy0v_4

THE MULTIPLE FACETS OF MY MADURAI – MANOHAR DEVADOSS

மதுரையை சித்திரமாக பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவலை என்னுள் விதைத்தது மனோகர் தேவதாஸ் வரைந்த கோட்டோவியங்களே. மதுரை இரண்டாவது புத்தகத்திருவிழா அரங்கின் முகப்பில் மனோகர் தேவதாஸ் வரைந்த கோட்டோவியங்களே இடம்பெற்றிருந்தன. மதுரையின் முக்கியமான இடங்களை அவர் கோட்டோவியமாக வரைந்த THE MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகத்தை அந்தாண்டு புத்தகத்திருவிழாவில் வாங்கினேன். விலை நானூறு ரூபாய்க்குமேல். அப்போதைய என்னுடைய ஒரு மாதச் செலவுக்கான தொகை. ஒருபக்கம் கோட்டோவியமும் மறுபக்கம் ஆங்கிலத்தில் அந்த இடம் குறித்தும் இடம்பெற்றிருந்தது. படங்களைப் பலமுறை வரைந்து பார்த்தளவு ஆங்கிலத்தில் இருந்ததை வாசிக்கவில்லை. (எனக்கு ஆங்கிலத்தில் கொஞ்சம் வேகமாக & மெதுவாக வாசிப்பது சிரமம்). மதுரை யானைமலை குறித்து மனோகர் தேவதாஸ் எழுதியிருந்த பக்கத்தை ஏழாம் வகுப்பிற்கு பாடமாக வைத்துள்ளார்கள். யானைமலை குறித்து மனோகர்தேவதாஸ் சொன்ன நெஞ்சை அள்ளும் வரிகள். 

அவரது கோட்டோவியத்தை பார்த்து நான் வரைந்த சித்திரத்தை காண்க.

yanaimalai

 

மதுரையின் பெருமையை மாணவர்களுக்கு கொண்டு சேர்த்த சமச்சீர் பாடநூல் குழுவிற்கு நன்றி. எனையாளும் மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார, உன்னுடைய தமிழார்வமும், ஓவியம் தீட்டும் திறமையும், படித்தவைகள் அனைத்தையும் பதிவுகளாக்கும் பாங்கும் மிக மிக நன்று. அத்தனையையும் பொறுமையாகப் படித்தேன் – இரசித்தேன் – மகிழ்ந்தேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. தொப்புளான் சொல்கிறார்:

  இவ்வாறு ஒரு “பாசறை” இருப்பது பவர்ஸ்டாருக்குத் தெரியுமா?

  இந்த கட்டுரையில் மனோகர் தேவதாஸ், தாம் அதுசமயம் பகுத்தறிவு சிந்தனைகளின் வசப்பட்டிருந்தபோதும் யானைமலையை உயிரற்ற பாறைக்குவியலாக எண்ணிப்பார்க்க முடிந்ததில்லை. மதுரையின் வரலாற்றின் வழிநெடுக நிகழ்ந்துவருவனவற்றின் ஒரு மௌனசாட்சியாக அது திகழ்ந்துவருவதாகத் தோன்றியது என்கிறார். அறுபது ஆண்டுகள் கடந்தபின்னரும் நம் போன்ற பலரது கருத்தும் அதுதானே.

 3. ranjani135 சொல்கிறார்:

  சகோதரரின் திருமணத்திற்கு மதுரை நகரைப் பற்றிய புத்தகத்தைக் கொடுத்தது மனதிற்கு மகிழ்வூட்டும் விஷயம்.
  Scribd-இல் புத்தகத்தைப் படித்தேன். நல்லதொரு தொகுப்பு.

  உங்களது சித்திரத் திறன் வியக்க வைக்கிறது. பெயர் காரணம் புரிந்தது!
  பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!

 4. அப்பாதுரை சொல்கிறார்:

  அருமையான சித்திரம். பாராட்டுக்கள்.
  புத்தகங்களை இணைத்தமைக்கு நன்றி – படித்து விட்டுத் திரும்புகிறேன்.

 5. kesavamani சொல்கிறார்:

  புத்தகத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. வண்ணநிலவனின் வரிகள் அருமை. பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளைப் பார்க்கும்போது மனம் குதூகலிக்கிறது.

 6. Geetha Sambasivam சொல்கிறார்:

  அருமையான பகிர்வு. புத்தகங்களை இணைத்திருப்பதற்கு நன்றி. நிதானமாய்ப் படித்துவிட்டு வருகிறேன். உங்கள் ஓவியம் நன்றாக இருக்கிறது. சித்திரக்காரன் என்ற பெயருக்கு ஏற்ப சித்திரம் வரைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

 7. maathevi சொல்கிறார்:

  அருமையான சித்திரம். படங்களும் பகிர்வும் கவர்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s