முந்நீர் விழவு

Posted: ஜனவரி 20, 2013 in நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்

சமைத்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது ”அடுதல்” எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊற வைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.                                         

– தொ.பரமசிவன் (தமிழர் உணவு)

இன்றைய வாழ்வில் நம் பாரம்பரிய உணவுப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நம்முடைய உணவையும், குடிநீரையும் பன்னாட்டுக்கம்பெனிகள் தீர்மானிக்கும் அளவிற்கு மோசமாக சூழல் போய்விட்டது. இதிலிருந்து நம் பாரம்பரிய உணவை மீட்டெடுக்க பூவுலகின் நண்பர்கள், என்விரோ கிளப் – லயோலா கல்லூரி  ஒருங்கிணைந்து ஜனவரி 26 ஆம்தேதி முந்நீர் விழவு என ஒரு விழா எடுக்கிறார்கள். தண்ணீர் குறித்த விழிப்புணவுக் கருத்தரங்கையும், பாரம்பரிய உணவு விருந்தையும் நடத்துகிறார்கள். சென்னை லயோலா கல்லூரியில் இவ்விழா நடைபெறுகிறது. இதுபோன்ற விழாக்கள் எல்லா ஊர்களிலும் நிகழ வேண்டும்.

Azhaippu 1

Azhaippu 2

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரி யோர் ஈண்(டு)

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே

புறநானூறு, பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

[நீரையின்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார். உணவை முதலாக வுடைத்து அவ்வுணவால் உளதாகிய உடம்பு. ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர். ஔவை துரைசாமிப் பிள்ளை உரை )

நன்றி

பூவுலகின் நண்பர்கள் – ஆனந்தவிகடன் – தமிழ்தொகுப்புகள் – தமிழ்ச்செல்வம்

http://www.poovulagu.net/2013/01/blog-post_16.html

http://www.thoguppukal.in/2011/03/blog-post_9315.html

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார, நல்லதொரு பதிவு – புறநானூற்றுப் பாடலையும், சமையல் முறைகளையும் விளக்கமாகப் பதிவிட்டமை நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. ranjani135 சொல்கிறார்:

  மிகச் சிறப்பானதொரு செய்தியை உலகுக்குச் சொல்லவிருக்கும் இந்த விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்!

  செய்தியை பகிர்ந்த உங்களுக்கு நன்றி!

 3. maathevi சொல்கிறார்:

  நல்ல செய்தி. சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் சித்திரவீதிக்காரன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s