சுங்கடி சேலை

சுங்கடிமதுரை சுங்கடிச்சேலை மிகவும் பிரபலமானது. சுங்கடிச்சேலை பெண்கள் மிகவும் விரும்பி அணியும் சேலையும் கூட.

சுங்கடிச் சேலையின் பழமையைப் பறைசாற்றும் விதமாக ‘மாமதுரை போற்றுவோம்’ விழாவின் முதல்நாளான பிப்ரவரி எட்டாம் தேதியன்று சுங்கடி தினமாக அறிவித்து இருக்கிறார்கள்.

சுங்கடிச் சேலை மதுரையில் நெய்யப்படுகிறது. திருமலைநாயக்கர் காலத்தில் அவருக்கு உடைகள் நெய்வதற்காக சௌராஷ்டிர மக்களை மதுரைக்கு அழைத்து வந்ததாக சொல்வார்கள். இன்றும் திருமலைநாயக்கர் அரண்மனையை சுற்றிய வீதிகளில், தெப்பக்குளம் பகுதியில் அவர்கள் சுங்கடிச்சேலை நெய்வதைக் காணலாம்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுங்கடிச் சேலை பல வண்ணங்களில், பல்வகையான பூ வேலைப்பாடுகளுடன் கிடைக்கிறது.

சுங்கடி வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற வகையில் இருப்பதால் மதுரை தவிர மற்ற ஊர்களிலும் பெண்கள் இச்சேலையை அதிகம் விரும்பி அணிகின்றனர்.

மாமதுரை போற்றுவோம் விழாவில் சுங்கடி தினத்தன்று கட்டுவதற்காக ஒரு சுங்கடிச்சேலை சமீபத்தில் எங்கம்மாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். படித்து முடித்து வேலைக்கு சென்று எங்கம்மாவிற்கு நான் வாங்கித் தந்த முதல் சேலை ‘மாமதுரை போற்றுவோம்’ விழாவிற்கு வாங்கியதுதான். மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாங்காமல் என்னைக் காக்கும் மதுரையைப் போற்றும் விழாவிற்காக சேலை வாங்கித் தந்தது மிகவும் மகிழ்வளிக்கிறது.

invite

invitation

தொன்மையைப் போற்றுவோம்! மாமதுரையைப் போற்றுவோம்!

Advertisements
பின்னூட்டங்கள்
  1. தமிழ் சொல்கிறார்:

    மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாங்காமல் என்னைக் காக்கும் மதுரையைப் போற்றும் விழாவிற்காக சேலை வாங்கித் தந்தது மிகவும் மகிழ்வளிக்கிறது.

    செம!

    சின்னாளப்பட்டியில்தானே சுங்கடிச் சேலைகள் பிரபலம்?

    நாளை முதல் கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள்.

  2. ranjani135 சொல்கிறார்:

    நானும் கூட சுங்கடிப் புடவையின் ரசிகைதான்!
    அம்மாவிற்கு சுங்கடிப் புடவை வாங்கித் தந்தது பாராட்டுக்குரியது.
    விழா பற்றிய பதிவுகளை தொடர்ந்து கொடுங்கள்.

  3. cheenakay சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார

    சுங்கடி தினத்தன்று சுங்கடி சேலை வாங்கி பெற்ற தாய்க்குக் கொடுத்த செயல் நன்று – பதிவு அருமை – அழைப்பிதழ பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  4. சுங்கடி சேலை மட்டுமா…? பல விதமான சேலைகளை காண எங்க ஊருக்கு வாருங்கள்… சேலை தயாரிப்பை அறிந்து கொள்ள எங்கள் மக்களிடம் கூட்டிச் செல்கிறேன்… விழா சிறக்க வாழ்த்துக்கள்…

  5. rathnavel natarajan சொல்கிறார்:

    சுங்கடிச் சேலை பற்றிய அருமையான பதிவு.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s