தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா

Posted: பிப்ரவரி 13, 2013 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:,

happyman

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்

பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி

தோண்டிய புலவர் சொல்லடியும் – இளம்

தோகைமார்தம் மெல்லடியும்

மயங்கி ஒலித்த மாமதுரை – இது

மாலையில் மல்லிகைப் பூமதுரை.  

 – வைரமுத்து

மாமதுரை போற்றுவோம் விழாவில் தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா என்ற பாரம்பரிய நடன அணிவகுப்பு மதுரைக்கல்லூரியிலிருந்து தமுக்கம் வரை நடந்தது. தொன்மையைப் போற்றுவோம் தினத்திற்கு பொருத்தமாக இந்த விழா அமைந்தது. தமிழக ஆளுனர் திரு.ரோசய்யா அவர்கள் கொடியசைத்து துவங்கிவைக்க ஊர்வலம் கிளம்பியது.

maamadurai

kokalikattai

கரகாட்டம், கும்மியாட்டம், முளைப்பாரி, தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கொக்கலிக்கட்டையாட்டம், பொய்க்கால் குதிரை, பலவேசம், பெரியமேளம், ஜிக்காட்டம் என்ற பலவகை ஆட்டங்களுடன் சில வாகனங்களில் மதுரையின் பெருமையை பறைசாற்றும் காட்சிக்கூடங்களுடன் அணிவகுப்பு வந்தது. பாண்டியர்களின் அயல்நாட்டு வாணிகம், பென்னிகுயிக் கட்டிய பெரியாறு அணை, மதுரையில் அரையாடைக்கு மாறிய மகாத்மா எனப் பல காட்சிகளின் மாதிரிச்சிலைகள் வியக்க வைத்தது.நாட்டுப்புறக்கலைஞர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டு தப்பாட்டம், ஒயிலாட்டம் எனப் பல்வகையான நடனங்களை நிகழ்த்தியபடி வந்தனர். மீனாட்சியம்மன், கண்ணகி, திரியாட்டக்காரர்கள், கருப்புசாமி வேடமிட்டும் மாணவ மாணவியர் வந்தனர். தற்காப்புக்கலைகளை நிகழ்த்தியபடி வந்த மாணவமாணவியர்களை காணும்போது பெருமையாகயிருந்தது.

oyillattam

நானும் நண்பர் இளஞ்செழியனும் மதுரைக்கல்லூரி மைதானத்திலிருந்து தமுக்கம் வரை ஊர்வலத்தினூடே சென்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடும் குதிரைகளை மும்பையிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒரு சாரட்டில் திருமலைநாயக்கர் அமர்ந்து வருவதைப் போல கல்லூரி மாணவியர் ஒரு மாதிரிக்காட்சியை அமைத்து வந்தனர்.

மதுரைக்கல்லூரியிலிருந்து கிளம்பி ஊர்வலத்தினூடே நடந்தோம். வழிநெடுக மக்கள் திரளாக வந்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். கடைவாசல்கள் முன்பாக நீர்தெளித்து வண்ணகோலமிட்டு கலைஞர்களை வரவேற்றனர். நிறைய இடங்களில் தண்ணீர் மற்றும் ரொட்டி கொடுத்து கலைநிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு தங்கள் அன்பை தெரிவித்தனர்.

tappatam

kottai

பெரியார்நிலையம் அருகில் நல்ல கூட்டம். மேலவாசல் கொத்தளத்தைக் கடக்குமிடத்தில் நிறைய மக்கள் குழுமியிருந்தனர். நேதாஜிசாலை வழியாக சென்று மேலமாசிவீதியை அடைந்தது. யாதவர் கல்லூரியிலிருந்து ஒரு வாகனத்தில் அழகர் குதிரையில் வருவதைப் போன்ற ஒரு மாதிரியைக் கொண்டு வந்திருந்தனர். மாமதுரையைப் போற்ற திருமாலிருஞ்சோலை அழகன் வந்துவிட்டார். மக்கள் சித்திரைத்திருவிழாவிற்கு சாமி பார்க்க வருவதைப் போல திரளாக வந்திருந்தனர்.

alagar

மேலமாசிவீதியிலிருந்து தெற்குமாசிவீதி மறவர்சாவடி வழியாக ஊர்வலம் வந்தது. மக்கள் கூட்டம் கலைஞர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. முக்கிய சந்திப்புகளிலும், மக்கள் கூடியுள்ள இடங்களிலும் மகிழ்ச்சி பொங்க ஆடிவந்தனர். மதுரை விரிவுபடுத்திய கலெக்டர் ப்ளாக்பர்ன நினைவு விளக்குத்தூண் அருகில் தேவராட்டக்குழுவினர் சுழன்று, சுழன்று ஆடிவந்தனர்.

devarattam

கீழமாசிவீதியில் கடைக்காரர்கள் பாரம்பரிய கலாச்சார நடன ஊர்வலத்தைக் காணத் திரளாக கூடிநின்றனர். தேர்நிற்கும் கீழமாசிவீதியில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க ஆடிவந்தனர். தைமாதத்தில் சித்திரைத்திருவிழா போல மக்கள் திரண்டிருந்தனர். கீழமாசிவீதி, யானைக்கல், புதியபாலம் வழியாக ஊர்வலம் வந்தது. ஜிக்காட்டக்குழுவினருடன் யானைக்கல் பெரிய பாலத்தில் வந்தோம்.

pallivaasal

கோரிப்பாளையம் வந்து கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாடும் சுவைகளில் கிடைக்கும் பவண்டோ குடித்தோம். கோரிப்பாளையம் தர்ஹா சார்பாக ஒரு வண்டியில் முன்னால் சாம்பிராணி போட்டுச் சென்றனர். தமுக்கம் மைதானத்தை வண்டிகள் வந்து சேர்ந்தபோது பார்த்த மக்கள் கூட்டம் சித்திரைப் பொருள்காட்சியை நினைவூட்டியது.

puliyaattam

மைதானத்தில் பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், ஜிக்காட்டம் என ஒவ்வொரு குழுவும் ஆடத்தொடங்க மக்கள் அவர்களைச் சுற்றிக் குழுமினர். பொள்ளாச்சிப் பகுதியில் ஆடப்படும் ஜிக்காட்டத்தை நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த ஆட்டத்தை தமுக்கத்தில்தான் முதன்முதலில் பார்க்கிறேன். துடியான ஆட்டம். ஆட்டம் முடிந்ததும் பார்வையாளர்களில் ஒருவர் ஆடியவர்களை மகிழ்வோடு கட்டுப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இளஞ்செழியனும் ஜிக்காட்டத்தை தனியே பதிவு செய்ய விரும்புவதாகச் சொன்னார்.

நம்முடைய பாரம்பரிய நடனங்களைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எழுகிறது. நினைப்பதையெல்லாம் நடத்த வாழ்க்கை அனுமதிக்குமா என்ன?. நாட்டுப்புறக் கலைஞர்கள் நல்ல மருத்துவர்கள். ஆட்டங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம் மனதில் உள்ள கவலைகள் விழந்தடித்துக் கொண்டு ஓடிவிடுகிறது. நாட்டுப்புறக்கலைகளை போற்றுவதும், நாட்டுப்புறக் கலைஞர்களை கொண்டாடுவதும் நமது கடமை.

jimnastics

மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும், மாவட்ட மேயர் ராஜன் செல்லப்பா அவர்களுக்கும், மாமதுரை போற்றுவோம் விழாக்குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் அவர்களுக்கும், துணைத்தலைவர்கள் சு.வெங்கடேசன் மற்றும் பரத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

மாமதுரை போற்றுவோம்

நாட்டுப்புறக்கலைகள் அகமும் புறமும்

பின்னூட்டங்கள்
 1. மதுரை அழகு (@maduraialagu) சொல்கிறார்:

  நிழற்படங்கள் அருமை! மொபைலில் எடுத்தீர்களா?

  தற்பொழுது மதுரையில் வசிக்காவிட்டாலும் உங்கள் பதிவு அங்கே உலவ வைத்துவிட்டது.

 2. காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை மதுரையின் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். களரி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள், மையம் நாடகக்குழுவின் வீதிநாடகம், தெருக்கூத்து மற்றும் அறிவுமதி, கவின் மலரின் உரை நிகழ்வுகளும் மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
  ‘ வைகைப் போற்றுவோம்’ கொண்டாடிய பின் மதுரையில் நேற்று மாலையிலிருந்தே மழை பெய்கிறது.
  மாமதுரை போற்றுவோம்! மாமழை போற்றுவோம்!

 3. இன்றும் மழை பெய்யட்டும்…

 4. maathevi சொல்கிறார்:

  நாட்டுப் புறக்கலைகளுடன் அழகிய விழா.

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா = மாமதுரை போற்றுவோம், திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் பதிவு. பழைய பதிவு தான், இப்போது தான் படிக்கிறேன். உங்களுக்காக பகிர்கிறேன். படித்துப் பாருங்கள். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s