நிறைகண்மாய்ச் சிலுசிலுப்பு

Posted: ஜூலை 30, 2013 in பார்வைகள், பகிர்வுகள்

வயல்

இந்தப் பக்கத்துக் கண்மாய்களுக்கு நீர் வரத்தொடங்கியுள்ளது. சோணையா மலையாளம் புண்ணியத்தில் நிறைந்து நிலைத்து வளம்தரட்டும் என்று வேண்டிக்கொண்டபடி அண்ணன் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  இவ்வாறு புதுவெள்ளம் வரும்போது உந்தப்பட்டு தாம் எழுதியதை  உங்களுடன் பகிர்ந்துகொள்ளச்சொன்னார்:

மஞ்சள் நுரைக்கூடுகளை

விளிம்புகளுக்குத் தள்ளியபடி

ஒற்றைப் பட்டையாக

கண்மாயில் நுழைகிறது

அந்த ஆண்டுக்கான

புது வெள்ளம்

நீரோடை

அழிந்த வெள்ளரிச்சருகுகளை

அழுகச்செய்தபடியே

பரவுகிறது;

பள்ளங்களில் நிரம்புகிறது;

பெருகுகிறது; பின்

ததும்புகிறது

கொஞ்ச நாட்களிலேயே மீன்களாய்

மேலெழுந்து துள்ளும் குஞ்சுகள்

கீழ்விழுந்து அள்ளும் கொத்திகள்

பின்

தூரத்து வானம்

நீர்ப்பறவைகளை

அனுப்பி வைக்கிறது

மடைவழி

சிறுகப் பாயும் வெள்ளத்துளிகள்

கதிர்மணிகளாகப்

பயிர்களைப் பற்றுகின்றன

இங்கு வற்றுகிறது

பிடிபடும் மீன்களிடம்

பகை மறந்து விடைபெற்று

நீங்குகின்றன பறவைகள்

ஈரத்தை அசைபோடும்

கரம்பையின்மீது

மீண்டும் விழுகின்றன

வெள்ளரி விதைகள்

அழியாது மீள்கிறது

ஒவ்வொரு ஆண்டும்

ஒற்றைக் காலடித்தடம்

பின்னூட்டங்கள்
 1. ரசிக்க வைக்கும் சிலுசிலுப்பு… நன்றி…

 2. cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  படம் 1938 ஆ – பரவாய் இல்லையே – தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறாய் – நன்று நன்று = கவிதையும் அருமை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. முனு.சிவசங்கரன் சொல்கிறார்:

  ”பிடிபடும் மீன்களிடம்

  பகை மறந்து விடைபெற்று

  நீங்குகின்றன பறவைகள்” கிராமத்து அரிவாள்கள் அன்பையும் வீசும் இல்லையா…

 4. தொப்புளான் சொல்கிறார்:

  பகிர்விற்கு நன்றி

 5. வேல்முருகன்.கு சொல்கிறார்:

  மதுரை அண்ணாநகரில் 1985 யில் குடியிருந்தபோது இப்போது உள்ள தாசில்தார்நகர், சதாசிவநகர் பாதிக்கும் மேல் வயலாக நெல்விளையும் பூமியாக இருந்தது, கே கே நகரில் உள்ள வண்டியூர் கண்மாய்தான் பாசனத்துக்கு உதவியது,இன்று பார்க்கும் போது மனது வலிக்கிறது

 6. manikandan சொல்கிறார்:

  நல்ல கவிதை… சகோதரருக்கு வாழ்த்துக்கள்

 7. தொப்புளான் சொல்கிறார்:

  நீர் வரும்போது, கருவேல் நீங்கிய கம்பளிப் புழுக்கள் கரையேறி ஊர்வரும். எல்லையாய் நிற்கும் வரிசைப் பனை கால்நனைக்கக் காத்திருக்கும். எருமைவிடும் குசுவில் நீர் கொப்புளிக்கும். இரவுக்காற்றுக்கு குளுமை கூடும். கால், கை, முகத்தைக் கொசுக்கள் ஆயும். நீரின்றி அமையாத ஊரில் இன்னும் என்னென்னவோ ஆகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s