pudumandabam

சங்க இலக்கியங்கள் பல இயற்றப்பட்ட ஊர் மதுரை. சங்க காலப் புலவர்களில் பலரும் வசித்த ஊர் மதுரை. தமிழகத்திலேயே தமிழிக்கல்வெட்டுகள் அதிகம் காணப்படும் ஊர் மதுரை. மதுரையும் தமிழும் என்றாலே கொண்டாட்டந்தான்.

மதுரையில் புத்தகத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான புத்தக அரங்குகள். கோடிக்கணக்கான புத்தகங்கள். தினந்தோறும் மாலை ஆளுமைகளின் உரைகள்.

அட்சயதிருதியைக்கு நகை வாங்குவது போன்ற கதைகளை நம்புவதை விடுத்து புத்தகத்திருவிழாவிற்கு வந்து நல்ல கதைப்புத்தகங்களை வாங்குங்கள். வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி நடந்தால் குடும்பத்தோடு வருபவர்கள் புத்தகத்திருவிழாவிற்கும் வாங்க. வீட்டில் இருக்கிற எல்லா உபயோகப் பொருட்களைக் காட்டிலும் புத்தகந்தான் முக்கியமானது என உணருங்கள்.

வாரம் ஒருமுறை குடும்பத்தோடு உணவகங்கள் சென்று வயிற்றுப்பசியைத் தீர்ப்பவர்கள் புத்தகத்திருவிழாவிற்கு வந்து அறிவுப்பசியையும் கொஞ்சம் தீர்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளை பெரிய பெரிய ஷாப்பிங்மால்களுக்கு அழைத்துச் செல்வதைவிட புத்தகத்திருவிழாவிற்கு அழைத்துவாருங்கள். நல்ல புத்தகங்கள் உங்கள் குழந்தைகளை நல்ல மனிதர்களாக உருவாக்கும்.

புத்தகங்களின் மேன்மை குறித்து ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என உரத்து தமிழருவி மணியன் சொல்வதை வாசியுங்கள். மதுரைப் புத்தகத்திருவிழாவிற்கு வந்து நிறைய புத்தகங்களை வாங்கி உங்கள் வீட்டு நூலகத்தை நிரப்புங்கள்.

ஒரு புத்தகத்தைப் படிப்பது, ஒரு புதிய நண்பனைப் பெறுவது போன்ற இனிய அனுபவம். அதே புத்தகத்தை மீண்டும் படிப்பது, நெடுநாள் பிரிந்த நெருங்கிய நண்பனைத் திரும்பவும் சந்திப்பது போன்ற சுகமான அனுபவம்.

‘எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் பாதையில் நல்ல லட்சிய வேட்கையுள்ள படைப்பாளிகள் பல்கிப் பெருகினால், இந்தச் சமுதாயத்தைச் சுத்தமாகச் சலவை செய்துவிட முடியும். நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் மனோபாவம் மக்களிடையே மலர வேண்டும். புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் அறை போன்றது. புத்தகங்களின் நடுவில்தான் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். படிப்பதன் மூலம்தான் அறிவுக்கண் திறக்கும்.

நம்மைச் சிந்திக்கச் செய்யும் புத்தகங்களே நல்ல புத்தகங்கள். இசையின் இனிமை இசையமைப்பவரின் இசைக்குறிப்பில் இல்லை; அதைக் கேட்டுச் சிலிர்க்கும் இதயத்தில் இருக்கிறது. அதே போன்று, புத்தகத்தின் பெருமை அதன் உள்ளடக்கத்தில் இல்லை; அது நமக்குள் உருவாக்கும் உந்துதலில் இருக்கிறது.

புத்தகங்கள் புனிதமானவை. அவை எதிர்பார்ப்புகளுக்காக முகத்துக்கு நேரே எவரையும் முகமலர் செய்வதில்லை. முதுகுக்குப் பின்னால் புறம் பேசுவதும் இல்லை. ஆனால், புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசமான புத்தகத்தைவிட நம் நேரத்தைக் களவாடும் தீய திருடன் வேறு ஒருவரும் இல்லை.

ஆங்கில அறிஞர் பேகன் சொல்கிறார்; ‘சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும். சிலவற்றை அப்படியே விழுங்கிவிட வேண்டும். சில புத்தகங்களை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு ஜீரணிக்க வேண்டும்.

–    தமிழருவி மணியன் ஆனந்தவிகடன், 16.10.2005

புத்தக அலமாரி  தளத்தில் புத்தகங்கள் குறித்து கேசவமணி அவர்கள் தொடர்ந்து சிறப்பாகப் பதிவு செய்து வருகிறார். அவர் படித்த புத்தகங்களைக் குறித்த பதிவை வாசிக்கும்போது நமக்கும் அந்நூல்களின் மீதான ஆர்வம் அதிகமாகிவிடுகிறது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், படித்ததில் பிடித்த வரிகள் என ஒவ்வொன்றையும் அவர் சொற்களில் வாசிப்பது அலாதி சுகம் தருவது. புத்தக அலமாரியில் புத்தகங்கள் குறித்து வாசித்துப் பாருங்கள். நல்ல புத்தகங்களை வாங்கி வாசியுங்கள்.

best100books

bes100tnovel

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த 100 புத்தகங்கள், 100 நாவல்கள் பட்டியலை ஐந்தாவது மதுரை புத்தகத்திருவிழாவில் ஆயிரம் பிரதிகள் எடுத்து வழங்கினோம். இது போன்ற பட்டியல்கள் நாம் வாங்க வேண்டிய புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க உதவும்.

மதுரை புத்தகத்திருவிழா நாட்குறிப்புகள்

வாசிப்புத்திருவிழா

எனக்கு புத்தகம் பிடிக்கும் – உதயசந்திரன்

என்னைச் செதுக்கிய புத்தகங்கள்

பின்னூட்டங்கள்
 1. ramani சொல்கிறார்:

  புத்தகத் திருவிழா செய்தியுடன்
  சிறந்த புத்தகப் பட்டியலையும் இணைத்தது
  மிகவும் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

 2. Asin sir சொல்கிறார்:

  நல்ல தகவலுக்கும் தரகுக்கும் நன்றி.

  குல தெய்வம் கோவிலுக்குக் குடும்பமாகச் செல்வது போல் அனைவரும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் நாளை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளலாம். கூடவே, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்க வேண்டிய புத்தகங்களை இப்போதே பட்டியலிட்டுக் கொள்ளலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் பேசும்போதெல்லாம் இதைக் குறித்தே பேசலாம்.

  வைரமுத்து எழுதிய, ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ நூலில் ‘புத்தக புராணம்’ என்ற தலைப்பிலிருந்து சில வரிகள்:

  “ஒரு
  நல்ல புத்தகம் திறந்து கொண்டால்
  நரகத்தின் வாசல் மூடப்படும்.

  ஒவ்வொரு பக்கம் நகரும் போதும்
  நீ
  எதிர்காலத்துள் எட்டு வைக்கிறாய்.

  ஒரு புத்தகம்
  முடிகிறது
  மனசின் மர்மப்பிரதேசம்
  விடிகிறது.”

 3. வேல்முருகன்.கு சொல்கிறார்:

  புத்தக திருவிழா சமயம் அழகான தேவையான பதிவு

 4. durairajv சொல்கிறார்:

  //அட்சயதிருதியைக்கு நகை வாங்குவது போன்ற கதைகளை நம்புவதை விடுத்து புத்தகத்திருவிழாவிற்கு வந்து நல்ல கதைப்புத்தகங்களை வாங்குங்கள். வாழ்க்கையை கொண்டாடுங்கள்.//
  🙂
  புத்தகங்களை கண்டால் பயம் கொள்ளும் பாடத்திட்டம் மாறினால் தான் வாசிப்பு அதிகரிக்கும், சிறு வயதிலேயே புத்தக வாசிப்பின் சுவையையும் பயனையும் குழந்தைகட்கு புரிய வைக்க வேண்டும்

 5. kesavamani சொல்கிறார்:

  நன்றி சித்திரவீதிக்காரன். புத்தகத் திருவிழாவை கொண்டாட என் வாழ்த்துக்கள்.

 6. பசோ சொல்கிறார்:

  ஒரு மாநிலத்தில் கலாசார வளர்ச்சியை,பண்பாட்டை அந்த மாநிலம் படிக்க விரும்பும் புத்தகங்களும் ,வெளியிடும் புத்தகங்களும் பிரதிபலிக்கும்.

  – சுஜாதா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s