நான் நானாக நாலுவிதம்

Posted: ஒக்ரோபர் 22, 2013 in பார்வைகள், பகிர்வுகள்

madurai

மதுரையை அழகழகான சித்திரமாய், விதவிதமான நிழற்படமாய் பதிவு செய்யத்துடிக்கிறேன். எண்ண ஓட்டத்திற்கு இணையாக எழுத முடியாமல் முழிக்கிறேன். இறுக்கிபிடிக்கும் அன்றாடப்பாடுகளை எட்டி உதைத்து மதுரையைச் சுற்றித் திரிகிறேன். வாசல்படிதாண்டி வாசிப்பினுள் நுழைய முயல்கிறேன்.

alagar

பதிவெழுதத் தொடங்குவதற்கு முன்னும், பின்னும் வாழ்வில் நிறைய மாற்றங்கள். சித்திரவீதிக்காரன் என்று சொல்லும்போதும், எழுதும்போதும் மகிழ்வாகயிருக்கிறது. பயணிக்கும் இடங்களும், கொண்டாடும் திருவிழாக்களும், வாசிக்கும் புத்தகங்களும் இப்போது இன்னும் நெருக்கமாயிருக்கிறது. ஒரு சின்ன சங்கடம் என்னவென்றால் பயணிக்கும்போதே பதிவிட வேண்டுமென்ற எண்ணம் வருவது அந்த இடத்தில் இயல்பாக இல்லாமலாக்கிவிடுகிறது.

sonaiya

பதிவெழுதத் தொடங்கி மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் எழுத வேண்டிய பதிவு மற்றும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் அனுமனின் வால்போல நீண்டுகொண்டே போகிறது. மதுரை வீதிகள், மதுரைத் திருவிழாக்கள், காவல்தெய்வங்கள், நாட்டுப்புறக்கலைகள், புத்தகங்கள், நேர்காணல்கள், கோட்டோவியங்கள், வாய்மொழிக்கதைகள் என பதிவு செய்ய வேண்டிய விசயங்களும் ஏராளம். பதிவுலகம் மூலம் கிட்டிய நட்புகளும் ஏராளம். நிறைய நம்பிக்கைகளுடன் நாலடி எடுத்துவைக்கிறேன். என்னைத் தொடர்ந்து உற்சாகமூட்டி எழுதத்தூண்டும் அன்பால் ஆட்கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

maduraivaasagan

Advertisements
பின்னூட்டங்கள்
  1. நண்பா… மிக்க மகிழ்ச்சி… நான்காவது ஆண்டு நாலாபக்கமும் சிறப்பாக அமையட்டும்… வாழ்த்துக்கள்… திண்டுக்கல் வரும் போது மறக்காமல் தொடர்பு கொள்ளவும்… 9944345233

  2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக் கார,

    அருமையான பதிவு – மூன்றாண்டுகள் சிறப்பாக முடிந்திருக்க்ன்றன. மேன்மேலும் சிறப்பாக வரும் ஆண்டுகள் திகழ நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக் கார,

    மதுரை வீதிகள், மதுரைத் திருவிழாக்கள், காவல்தெய்வங்கள், நாட்டுப்புறக்கலைகள், புத்தகங்கள், நேர்காணல்கள், கோட்டோவியங்கள், வாய்மொழிக்கதைகள் என பதிவு செய்ய வேண்டிய விசயங்களும் ஏராளம்.

    பொறுமையாக எழுதுக நண்பா – திருமணம் ஆகி விட்டது – குடும்பத்தினைக் கவனிக்க வேண்டும் – பார்த்துக் கொள்.

    நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  4. ra,mani சொல்கிறார்:

    அறுபது ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தபோதும்
    மதுரையின் சிறப்புக்களை மிக நெருக்கமாக
    தங்கள் பதிவுகளைப் போன்ற பதிவுகள் மூலம்தான்
    அறிய முடிகிறது.
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  5. பசோ சொல்கிறார்:

    பறையோசை எழுப்பி நான்காம் ஆண்டிற்க்குள் அடி எடுத்து வைக்கும் சித்திரவீதிகாரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. k.velmurugan சொல்கிறார்:

    எழுதுங்கள் எழுதுங்கள் உங்கள் எழுத்தை எல்லோரும் ரசிக்கிறார்கள் மேலோட்டமாக எழுதாமல் முழுமையான தகவலுடன் எழுதுவது உங்கள் சிறப்பு

  7. maathevi சொல்கிறார்:

    வாழ்த்துகள். பதிவுகள் மென்மேலும் சிறப்புற தொடரட்டும்

    மதுரை வீதிகளை கண்டு களிக்கின்றோம்.

  8. மதுரக்காரன் சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் சித்திரவீதிக்காரரே. சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது மதுரையோடு எனக்கு இருந்த தொடர்புகளில் மிக முக்கியமானது உங்கள் வலைப்பதிவு. வர முடியாமல் போனாலும் மதுரையிலேயே இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும். நான்காம் ஆண்டில் மேலும் பல பதிவுகள் வர வேண்டும். 🙂

  9. jeevansubbu சொல்கிறார்:

    நிழற்படங்கள் அழகு …! வாழ்த்துக்கள் …!

  10. rathnavelnatarajan சொல்கிறார்:

    வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s