பகல்வீட்டின் சாளரங்கள்: சொல்புத்தி

Posted: நவம்பர் 26, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:

பகல்வீட்டின் சாளரங்கள்: வயிற்றுக்கும் ஈயப்படும் பதிவைத் தொடர்ந்து அடுத்த சாளரம் இங்கு திறக்கிறது. ‘சொல் புத்தி’ என்ற தலைப்பில் ஆங்காங்கே பக்கங்களின்கீழ் இடம்பெற்ற கல்வி குறித்த பொன்மொழிகளின் தொகுப்பு:

 • உங்களுக்கு என்ன தெரியுமோ அத்தோடு குழந்தையின் அறிவைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் அது வேறொரு காலத்தில் பிறந்தது. (ரப்பி(யூத மதகுரு)க்களின் போதனை)
 • பல நேரங்களில் நாம் குழந்தைகளை புதிர்களை அவிழ்க்கச் சொல்வதில்லை; விடைகளை நினைவில் வைக்கவே சொல்கிறோம். (ரோஜர் லெவின்)
 • கல்வி ஒரு வாளியை நிரப்புவது போன்றதல்ல. நெருப்பைப் பற்றவைப்பது போன்றது (வில்லியம் பட்லர் யீட்ஸ்)
 • கல்வியே சமத்துவத்துக்கான தலைவாசல் (ஹோரஸ் மேன்)
 • இவ்வுலகை மாற்றுவதற்கு கல்வியே மிகவும் வலிமைவாய்ந்த ஆயுதம் (நெல்சன் மண்டேலா)
 • மற்றவர் வாழ்க்கையை மேம்படச் செய்யவும், நமக்குக் கிடைத்ததைவிட மேம்பட்டதாக ஒரு சமூகத்தையும், உலகத்தையும் மாற்றிச்செல்லவுமே கல்வி (மரியான் ரைட் ஈடல்மேன்)
 • கல்வி என்பது ஒருவன் தனது அறியாமையை கொஞ்சம்கொஞ்சமாகக் கண்டுகொள்வதே (வில் டுரான்ட்)
 • ஒரு ஆசிரியர் வெற்றி அடைந்துவிட்டதற்கான சிறந்த அறிகுறி இவ்வாறு சொல்லமுடிவதே: “குழந்தைகள் இப்பொதெல்லாம் நான் ஒருத்தி இல்லாத மாதிரியே நடந்துகொள்கின்றனர்” (மரியா மான்டெசோரி)
 • நிரைநிரையாகப் பொருட்களின் பெயர்களையும், வடிவங்களையும் நமது நினைவகத்தில் திணிக்கிற ஆசிரியரைவிட, ஒரு நற்செயலில் ஈடுபடும் உணர்வை அல்லது ஒரு கவிதை எழுதத் தோன்றுகின்ற மனநிலையைத் தூண்டுகின்ற ஆசிரியர் அதிகம் சாதிக்கிறார் (யோஹான் வால்ஃப்கங் வான் கோட்ட)
 • சொல்லித்தர துணிபவர்கள் கற்றுக்கொள்வதை நிறுத்துவதே இல்லை (ஜான் காட்டன் டானா)
 • நான் ஒருவருக்கும் எதையும் கற்றுத்தந்துவிட முடியாது. அவர்களை சிந்திக்க வைக்கவே முடியும் (சாக்ரடீஸ்)
 • இந்த பேரண்டம் விந்தைகள் நிரம்பியது. நமது புலன்கள் கூர்மை அடையட்டும் என்று பொறுமையாகக் காத்திருக்கிறது. (ஈடன் ஃபில்பாட்ஸ்)
 • நான் ஆறு நேர்மையான சேவகர்கள் வைத்திருக்கிறேன் (எனக்குத் தெரிந்த எல்லாமும் அவர்கள் கற்றுத்தந்ததே). அந்த ஆறு பேர்: ‘என்ன?’, ‘ஏன்?’, ‘எப்போது?’, ‘எங்கே?’, ‘எப்படி?’, ‘யார்?’ (ரட்யர்ட் கிப்ளிங்)
 • 21ம் நூற்றாண்டில் கல்வியறிவு அற்றவர்கள் என்போர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அல்லர். புதிதாகக் கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதில் மாறிவிட்டவைகளை மறந்துவிட்டு மறுபடியும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் தவறுபவர்களே. (ஆல்வின் டாஃப்ளர்)
 • நிறைய ஆசிரியர்கள் ஒரு மாணவருக்கு என்ன தெரியாது என்று கண்டறிகிற கேள்விகளாகவே கேட்டு நேரத்தை வீணடிக்கின்றனர். உண்மையான கேள்வி கேட்கும் கலை ஒரு மாணவனுக்கு என்ன தெரியும் அல்லது என்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதிலேயே இருக்கிறது (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
 • ஒருவனுடைய கல்வி ஏழைகள் நலனுக்கு எதிராக இருக்குமென்றால், அத்தகையவன் சமூகத்தைப் பீடித்த சாபக்கேடு ஆவான் (அம்பேத்கர்)
 • படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்

              போவான் போவான் ஐயோவென்று போவான் (பாரதி)

 • உலகில் பள்ளிக்குப் போகாத குழந்தைகளில் 50% பேர் எங்கிருக்கிறார்கள் என்றால், எங்கெல்லாம் வீட்டில் பேசும் மொழியும், பள்ளியில் கற்பிக்கும் மொழியும் வேறாக இருக்கிறதோ அங்கிருக்கிறார்கள் (உலக வங்கி அறிக்கை)
 • மொழி தகவல் தொடர்புக்கான ஊடகம் மட்டுமே அல்ல. மொழி, சிந்தனை, கற்றல் எல்லாம் பிரிக்கமுடியாதபடி ஒன்றிணைந்தவை. குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் அவர்களுக்கு முழுமையாகப் புரியாத ஒரு மொழி வாயிலாகப் படிக்க கட்டாயப்படுத்தும்போது ஒருவித தீவிரமான கற்றுக்கொள்ளச் சிரமப்படும் நிலையை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களது கற்றல் திறன்கள் வளர்வதைத் தடைசெய்வதோடு வாழ்நாள் முழுவதற்கும் அவர்களது தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடுகிறது. பள்ளி மொழி பள்ளிக்கு வெளியே புழங்காத சமூக, பொருளாதாரச் சூழல்களில் இது மேலும் தீவிரமடைகிறது. குழந்தையின் சொந்தப் பண்பாடு அதன் மொழியுடன் சேர்த்து வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும்போது இது இன்னும் மோசமாகிறது. (தீர் ஜிங்ரன் இ.ஆ.ப)
பின்னூட்டங்கள்
 1. சிறப்பான தொகுப்பு நண்பரே… மிக்க நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s