‘அனிமல் லவர்ஸு’க்கு அன்பான அழைப்பு

Posted: ஜனவரி 20, 2014 in பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, ,

‘மிருதுநெஞ்சர்’ கொப்பரமுழுங்கி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இக்கவிதை இங்கும் இடம்பெறுகிறது:

Call for Animal Lovers

சல்லிக்கட்டுக்கு எதிராக

சளைக்காது சமர்புரியும்

‘அனிமல் லவர்ஸு’க்கோர்

அன்பான அழைப்பு!

அறம்பொங்கும் நம்போரின்

அடுத்த நகர்வுக்கு

ஆயத்தம் ஆகுங்கள்!

 

நம் தாவரநேயம் காட்ட

நல்லதொரு வாய்ப்பு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடிய வளமரபு ஈங்குண்டு

விலங்குநேயம் தாண்டி

தாவரநேயம் தழைக்கட்டும், வாருங்கள்!

 

பசும்புல் தரைதன்னை

பந்துதடுப்பாளன் கால்நசுக்கும்

ஒவ்வொருமுறையும் என்

உள்ளம் துடிக்கிறது

ஐயகோ, அச்சிறுபுல் நுனி என்செய்யும்!?

ஆம், கிரிக்கெட்டைத்தான் சொல்கிறேன்

 

புல்பரப்பை ஆடியோடி

துவம்சம் செய்தும்

பூண்டறுத்து ஆடுகளக்

கட்டாந்தரை அமைத்தும்

 

ஓரறிவு உயிர்களையே படுத்துகிறார்

ஆறறிவு அமைந்தவர்கள் ஐயோ வெட்கம்!

 

பயிர்வதை போதாதென்று

சுயவதையும் செய்துகொள்கின்றனர்

 

காளைதழுவுபவர்கள்

காயமுறுதல் கண்டு

கண்ணீர் உகுக்கிறோம்

 

அருமை வீரன் கிரிக்கெட்டில்

‘அடிவயிற்றுக் கவசம்’ தாண்டி

அடிவாங்கி கொட்டைவீங்கி

அலறிச் சுருள்தல் கண்டும்

அசமந்தமாய் இருக்கிறோம்

 

உங்களுக்கு நினைவில்லையா?

உண்டக்கட்டி வாங்கி

உதிரம் சிந்தியும்

 

நாடிக்கட்டுடன் நம் கும்ப்ளே

குதித்துக் குதித்துக்

குறிபார்த்து வீசிய

சுழலாப்பந்தும்

சொல்லொணாத் துயரும்

சொற்பந்தானா?

 

பரிசுக்காய் பலியாகும்

பரிதாப முட்டாள்கள் என்று

பராதி சொல்கிறோம்

மாடுபிடி மண்டுகள் பார்த்து

 

அவன் பெறுவது

அதிகபட்சம் அண்டா, குத்துச்சட்டி

இல்லாமல் போனால்

இருக்கவே இருக்கிறது:

‘இனிய பொங்கல் வாழ்த்துகள்’

 

இவனைப் பாருங்கள்

விளம்பர வருமானமாம்,

வீடு அரசு தருமாம்

விருதாம், பதக்கமாம்

இதற்குத்தானே ஆசைப்பட்டு

இப்படி அடிபடுகிறாய் கிரிக்கெட்வீரா?

 

மட்டைப் பந்தின் வழியில்தான்

மாடுபிடி விளையாட்டும்

இப்போதே வினோத்குமாருக்கு

மேன் ஆஃப் த மேட்சாம்

அடுத்தென்ன

பெட்டிங், ஃபிக்ஸிங், சூதாட்டமா?

அனுமதிக்கலாமா?

 

விதிமீற வழிகாட்டும்

விளையாட்டாம் கிரிக்கெட்டை

விரைந்து தடைசெய்வோம்

வீரர்காள் வாரீர்!

 

நம் உயிர்க் கரிசனம்மீது

ஒருசிறிதும் ஐயம்வேண்டாம்

நம்மில் இளகிய சில இதயங்கள்

இன அழித்தொழிப்பின்போது

எதிரிக்கு மாமா வேலைபார்த்தது

உண்மைதான்

ஆனால் அது அந்த

கடையர்களுக்குக்

கடைத்தேற்றம் பெற்றுத்தரவே

 

நம் காருண்ய ஒளிகொண்டு

இந்த காட்டுமிராண்டிகளுக்கு

மூக்கணாங்கயிறிடுவோம்

வாருங்கள்!

செடிநாச கிரிக்கெட் எதிர்ப்புப் போரில்

சேருங்கள்! ‘லைக்’ இடுங்கள்

 

தங்கள் ஆதரவை நாடும்

மிருதுநெஞ்சன் கொப்பரமுழுங்கி

தனியர், தமிழ்நாடு பிரிவு

தாவரநேயச் சங்கம்

பின்னூட்டங்கள்
  1. வரிகள் உண்மை… பாராட்டுக்கள்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html) சென்று பார்க்கவும்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s