சங்கத்தமிழுக்கு என்றும் அழிவில்லை

Posted: ஏப்ரல் 30, 2014 in நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:, ,

தமிழ் உலகின் ஆதிமொழி. காலமாற்றத்திற்கேற்ப கன்னித் தமிழ் கணினித் தமிழாகவும் மாறி இன்றளவும் உயிர்ப்போடு வாழும் மொழி. தமிழின் முக்கியமான நூறு படைப்பாளிகளிடமிருந்து கேள்வி – பதில்களோடு கூடிய பெருந்தொகுப்பாக உயிர்மை நூறாவது இதழ் வந்தது. அதில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யாவின் பதிலை இதில் பதிவு செய்கிறேன்.

tho.paramasivanநமது நாட்டார் மரபுகளுக்கும் பொதுத் தமிழ் அடையாளத்திற்கும் இடையில் உள்ள பிரதான முரண்பாடுகளாக எதைக் கருதுகிறீர்கள்?

முதலில் உங்கள் கேள்விக்கு என்னால் உடன்படமுடியவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றே சொல்ல வேண்டும். சின்ன வேறுபாடுகள்தான் இருக்கின்றனவே ஒழிய, வழமையான நம் தமிழ் மொழியில் முரண்பாடுகள் இல்லவே இல்லை. பேச்சுத் தமிழும் இலக்கியத் தமிழும் ஒன்றுதான் என தொல்காப்பியரே சுட்டிக் காட்டியிருக்கிறார். வேறு எந்த மொழிக்கும் இல்லாத இவ்வகை சிறப்பு தொன்மையான நம் பழந்தமிழுக்கே உண்டு.

மதுரைபோன்ற நகரத்தில் பட்டி என்று சொல்லுடன் முடியும் ஊர்ப்பெயர்கள் வரும். இதுவே குமரியில் விளை என்ற பெயரில் முடியும் ஊர்ப்பெயர்கள் வரும். அதேபோல் சொற்களின் பயன்பாட்டில் வித்தியாசங்கள் ஊருக்கு ஊர் இருக்கின்றன. ஆனால் ஒரே சொல், வட்டாரத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடுகிறது. ஆனால் குறிக்கும் பொருள் ஒன்றாகத் தானிருக்கும். எடுத்துக்காட்டாக, நெல்லை மாவட்டத்தில் சீம்பால் என்று சொல்லப்படுவது வடமாவட்டங்களில் கடம்பு என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அப்பாவை நெல்லையில் ஐயா என்றும், கொங்குமண்டலத்தில் ஐயன் என்றும் விளிக்கிறார்கள். இங்கு சொற்கள் மாறுபட்டாலும் பொருள் மாறாதிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

பொதுத் தமிழையும் நாட்டார் மரபுகளையும் பிரித்துப் பார்க்கவே முடியாததுதான். அந்தளவுக்குப் பேச்சுமொழியாகத் தமிழ் தொல்காப்பியர் இயம்பும் சங்கத் தமிழாகவும் இருக்கின்றது. தமிழ் பேசுகிற அனைத்து மாவட்டங்களிலும் அவ்வூரின் சாதிய அடிப்படைகளுக்குத் தகுந்தவாறு ஒரு சொல் வேறு சொல்லாகப் பேசப்படுகிறதே ஒழிய அர்த்தங்கள் மாறுபடுவதில்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுபோல பழைய 32 உவமை உருவகங்கள் செத்துதான் போய்விட்டன. இன்றைய காலங்களில் கல்லாட்டம் நிற்கிறான் என்பது போன்ற உவமானங்களால் சென்னை போன்ற நகரங்களில் பேசப்படுகிறது. தொன்மைமிக்க முதன்மையான தமிழில் சின்னச் சின்ன வேறுபாடுகளைத்தான் சொல்லமுடிகிறதே ஒழிய முரண்பாடுகளைச் சொல்ல முடிவதில்லை. ஏனெனில் வழக்கியல் தமிழ், சங்கத் தமிழாகத்தான் இருக்கிறது. பேச்சு மொழியென்றும் சங்கத் தமிழென்றும் இனம் பிரிக்கும் வகைமையில் நம் தமிழில் இல்லையென்பதே அதனின் ஆகப்பெரும் சிறப்பு.

(உயிர்மை நூறாவது இதழ், டிசம்பர் 2011)

தொ.பரமசிவன் அய்யாவின் சில கட்டுரைகளைத் தொகுத்து சந்தியா பதிப்பகத்திலிருந்து பரண் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் மதுரை புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யா உலகமயமாக்கல் சூழலில் பண்பாடும் வாசிப்பும் என்ற தலைப்பில் பேசிய உரையை நான் தொகுத்திருந்தேன். அதை இந்நூலில் சேர்த்திருக்கிறார்கள். தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைத் தொகுப்பில் என் பெயர் இடம்பெற்றிருப்பது எனக்கு பெரு மகிழ்வைத் தருகிறது. சந்தியா பதிப்பகத்திற்கு நன்றிகள் பல.

நன்றி – உயிர்மை, மதுரக்காரன் கார்த்திகேயன், என் விகடன்.

பின்னூட்டங்கள்
  1. cheenakay சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார, பதிவு அருமை – நன்று – மதுரை புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யா உலகமயமாக்கல் சூழலில் பண்பாடும் வாசிப்பும் என்ற தலைப்பில் பேசிய உரையை தொகுத்திருந்தது அருமையான செயல். . அத் தொகுப்பு ” பரணில் “ சேர்த்திருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி. . தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைத் தொகுப்பில் உன் பெயர் இடம்பெற்றிருப்பது எனக்கும் பெரு மகிழ்வைத் தருகிறது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s