கமலுக்கு நேரமிருக்கிறது; நமக்கேன் இருக்காது?

Posted: செப்ரெம்பர் 1, 2014 in தமிழும் கமலும், பார்வைகள், பகிர்வுகள், மதுரை புத்தகத் திருவிழா, வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:,

மய்யம்

வாசகா – ஓ – வாசகா…
என் சமகால சகவாசி
வாசி…

புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து…

எனது கவி உனதும்தான்
ஆம்…
நாளை உன்வரியில்
நான் தெரிவேன்.  

– கமல்ஹாசன்

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் வாசிப்பை நாசம் செய்யும் வேளையில் நம்மை ஆச்சர்யமூட்டும் விசயமாக தன்னுடைய திரைப்படப் பணிகளினூடே தமிழின் உன்னதமான படைப்புகளை வாசிக்கும் கமல்ஹாசனைப் பார்க்கும்போது பொறாமையாகயிருக்கிறது. வாசிக்க நேரமில்லை என்று சொல்ல வெட்கமாகயிருக்கிறது. புத்தகம் பேசுது  மாத இதழுக்காக கமல்ஹாசனோடு எழுத்தாளர் வெண்ணிலா மற்றும் முருகேஷ் எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு சிறுபகுதி:

கலையுலக இலக்கியவாதியான உங்களின் இலக்கிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?

கலையுலகத்திலிருந்து இலக்கியவாதியின் அனுபவத்தைப் பேசணும்னா, அது ரொம்ப சோகம்தான். ஜே.கே.வினுடைய கலை உலக அனுபவங்கள் மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இன்றைக்கு வாழும் ஹீரோக்களில் முதன்மையானவராக நான் நினைப்பது ஜே.கே.வைத்தான். ஆனால், நான் அவரை வாழ்நாளில் நான்கைந்து முறைகளுக்குமேல் பார்த்ததில்லை. காரணம், அதீதமான வியப்பும் பெருமிதமும். அது மட்டுமில்லாம கிட்ட பார்க்கிறதுல சின்ன தயக்கமும் இருக்கு. நரைச்ச மீசை, உயரம் இதெல்லாம் தொந்தரவு பண்ணிடுமோன்னு தள்ளியே இருக்கேன். குழம்பிடுமோன்னு தோணும். ‘வாழும் ஹீரோ’ அவர் காதுபட சொல்றதுல எனக்கு சந்தோஷம். அந்த மாதிரி நெறய பேர் இருக்காங்க.

Writers

தன்னோட ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு கு.ஞானசம்பந்தன். தொ.பரமசிவன். தொ.ப.வைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம். ஆனா, உடம்பு முடியாம ஒரு வயோதிகரா தொ.ப.வைப் பார்க்கிறதுல ஒரு சின்ன வருத்தம். இளைஞரா இருந்தப்ப எங்க அப்பாவையெல்லாம் பார்க்க வந்திருக்காரு. அப்ப தெரிஞ்சுக்காம போயிட்டமேன்னு தோணும். கோபமான தொ.ப.வைப் பார்த்திருக்கலாம். ஞானசம்பந்தனையே சொல்லலாம். அவர் வெளியே கோமாளி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டாலும் ரொம்ப ஆழமான, கோபமான ஆளு. கோமாளி தொப்பி ஒரு யுக்தி. ஞானக்கூத்தன், புவியரசு இவங்கள்லாம் எனக்குக் கிடைச்ச பரிசு. நட்புன்றது நானா தேடிக்கிட்டதுதான். அதனால் அது பரிசா, நான் சம்பாதித்தான்னு தெரியல. இதே இடத்தில் உட்கார்ந்து சுந்தர ராமசாமியோட ரெண்டு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். ஞானக்கூத்தன்தான் ஏற்பாடு செஞ்சாரு. முக்கியமான ஒரு வேலையை செஞ்ச மாதிரி ஞானக்கூத்தன் அன்னைக்கு நெகிழ்ச்சியா பக்கத்தில் நின்னுக்கிட்டுருந்தார். எனக்கு ரொம்ப நெகிழ்வான அனுபவம். அதே மாதிரி சமீபத்துல படிச்சது ப.சிங்காரத்தை. அவரு செத்துப்போனப்புறம்தான் அவர படிச்சேன். அவரோட புத்தகம் இருக்கிறதால அவர் இல்லாம போனதைப் பத்தி எனக்கு வருத்தமில்ல. சமீபத்தில் தூக்கி வாரிப்போட்ட புத்தகம் கொற்றவை. மிரண்டுட்டேன். சொல்லியே ஆகணும். ஜெயமோகன் சினிமாவுக்கு வந்ததால சொல்லலை. ஒருவேளை அவர் என் சினிமாவில் வேலை செஞ்சு என் புஸ்தகம் படிங்கன்னு குடுத்திருந்தார்னா நான் படிச்சிருக்கமாட்டேன்னு நினைக்கிறேன். நானா தேடி படிச்சதால என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் படிக்கிறது பத்தலன்றது மட்டும் எனக்குத் தெரிஞ்சது.

Books

‘ஆழி சூழ் உலகு’ன்னு ஒரு புஸ்தகம். நண்பர்கள் பரிந்துரை பண்ணாங்க. ஜி.நாகராஜனையே நான் அவர் இறந்து போனதுக்குப் பின்னாடிதான் படிச்சேன். ‘குறத்திமுடுக்கு’, ‘நாளை மற்றொரு நாளே’ எல்லாம் அப்புறம்தான் படிச்சேன். ஜெயகாந்தனைத் தெரிஞ்சுகிட்டது மாதிரி அவரைத் தெரிஞ்சுக்கிட்டிருந்தா அவர் கூட கைகுலுக்கியிருக்கலாமேன்னு தோணுச்சு. கு.ப.ரா.ல்லாம் காலதாமதமாக வாங்கிப் படிக்கிறேன். நான்தான் சொல்றேனே, 15 வருசமாத்தான் தெளிவு வர ஆரம்பிச்சுருக்கு.

(நன்றி – வெண்ணிலா, முருகேஷ் – புத்தகம் பேசுது, ஜனவரி 2008 இதழ்)

கமல்ஹாசன் தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.சா.ரா, கு.ப.ரா, பிரமிள், புவியரசு, ஞானக்கூத்தன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தொ.பரமசிவன், சுந்தர ராமசாமி, சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், கோணங்கி என இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை தேடி வாசித்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என தொ.பரமசிவன் சொல்கிறார். கமல்ஹாசன் மய்யம் என்ற இலக்கிய மாத இதழை முன்பு நடத்தியிருக்கிறார். நாமும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்போம்.

ஜி. நாகராஜன் பிறந்த நாள்  & மதுரை புத்தகத் திருவிழா சிறப்புப் பதிவு

Advertisements
பின்னூட்டங்கள்
  1. aekaanthan சொல்கிறார்:

    கமல் ஹாசன் இலக்கியப்பற்றுள்ள கலைஞர் என்பதை சுஜாதாவின் எழுத்தின் மூலமாக (அவருடைய ‘கற்றதும் பெற்றதும்’ படித்தபோது என்று நினக்கிறேன்) ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அவருடைய கவிதை ஒன்று உங்கள் பதிவில் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 15 வருடமாகத்தான் தான் வாசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். நம்மில் பலரோ வாசிப்பதையே இழந்துவிட்டு ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது சந்ததியினரை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்கள் அச்சுப்பிரதியையே கையில் தொடமாட்டார்களோ எனப் பயமாக இருக்கிறது.
    -ஏகாந்தன்

  2. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s