திருமாலிருஞ்சோலையில் தைலக்காப்புத் திருவிழா

Posted: நவம்பர் 5, 2014 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:,

???????????????????????????????

மதுரை அழகர்கோயிலுக்குச் சென்று பதினெட்டாம்படியானை வணங்கி மலைமேல் உள்ள சிலம்பாற்றில் நீராடி இராக்காயி அம்மனைத் தொழுது வருவது அடியவர்களின் வழக்கம். சிலம்பாற்றில் தேன் போன்று தித்திக்கும் நீர் வருவதால் தேனாறு என்று அழைக்கப்பட்ட காலமெல்லாம் போய் இன்று நூபுரகங்கையாகிவிட்டது. மலைமேல் அமைந்த தீர்த்தத்தொட்டியில் அழகரே வருடத்திற்கொருநாள் போய் நீராடுகிறார் என்றால் எவ்வளவு சிறப்பாய் இருக்கும். அதைக்காண இந்தாண்டு சென்று வந்ததைக் குறித்து பதிவு செய்யும்முன் அழகர்கோயில் குறித்து ஆழ்வார்களின் பாசுரங்களை ‘அழகர்கோயில் தல வரலாறு’ நூலிலிருந்து கொஞ்சம் பார்ப்போம். அழகுமலைத் தமிழ்ச்சாரலில் நனைவோம்.

???????????????????????????????

ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக  
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிரமாறுகளும் சுனைகள் பல வாயிரமும்
ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே

பெரியாழ்வார் திருமொழி, 357

???????????????????????????????

???????????????????????????????

சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை, சுரும்பார்குழல் கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வார்களே!

நாச்சியார் திருமொழி, 595

???????????????????????????????

சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலைமலை உறையும்  
மாயா! எனக்குரையாயிது மறைநான்கினு ளாயோ
தீயோம்புகை மறையோர்ச் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ உனதடியார் மனத்தாயோ! அறியேனே!

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, 1634

???????????????????????????????

உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள்மாலே – மணந்தாய்போய்
வேயிருஞ்சாரல் வியலிருஞாலம் சூழ்
மாயிருஞ் சோலைமலை.

 பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி, 2229

???????????????????????????????

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர்.

பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதி, 2342

???????????????????????????????

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே!
புயல் மழைவண்ணர் புரிந்துறை கோயில்
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை
அயன் மலையடைவது அது கருமமே!

 நம்மாழ்வார் திருவாய்மொழி, 2888

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

அழகர் தீர்த்தத்தொட்டியில் நீராடுவதால் நல்ல மழை பொழியும் என்று மக்கள் நம்புவதாக  நாளிதழ்களில் தைலக்காப்புத் திருவிழா குறித்து போட்டிருக்கிறார்கள். ஆனால், அழகர் தைலக்காப்பிட்டு நீராட என்ன காரணம்? தொ.பரமசிவன் அய்யா அழகர்கோயில் நூலில் என்ன கூறியிருக்கிறார் என்று ‘சிலம்பாற்றில் நீராட வந்த சுந்தரத்தோளுடையான்’ பதிவில் பார்க்கலாம்.

???????????????????????????????

படங்கள் உதவி – இளஞ்செழியன்

பின்னூட்டங்கள்
  1. ranjani135 சொல்கிறார்:

    மிக அழகான படங்களுடன், திவ்ய பிரபந்த பாடல்களுமாக பதிவு அருமை.

  2. […] திருமாலிருஞ்சோலையில் தைலக்காப்புத்… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s