வைகைக்கரையில் தோன்றிய தாமரைச்சிரிப்புடையோன்

Posted: நவம்பர் 6, 2014 in தமிழும் கமலும், பகிர்வுகள், பார்வைகள்

சித்திரவீதிக்காரன்

எனக்குள் ஒருவன், தசாவதாரம் – விஸ்வரூபம் எடுத்த உயர்ந்த உள்ளம், நம்மவர், கலைஞன், அன்பால் ஆளவந்த வெற்றிவிழா நாயகன், அபூர்வசகோதரர் கமல்ஹாசன் பிறந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். ஆச்சர்யமாக இருக்கிறது. புதிய விசயங்களைத் தேடித்தேடிக் கற்று என்றும் இளமையாக இருக்கும் சகலகலாவல்லவருக்கு வயது என்றும் பதினாறுதான்.

1989ல் அபூர்வ சகோதரர்கள் வெளியானது. நான் ஓரளவு விவரம் தெரிந்து பார்த்த படம். அப்பு கதாபாத்திரமும், சர்க்கஸ் காட்சிகளும், பாடல்களும் மனதைக் கவர்ந்தன. குள்ளமாக வந்து நெஞ்சில் வெள்ளமாக நிறைந்து விட்டார் கமல்ஹாசன். அந்தப் படம் வெளியானபோது நாங்கள் அண்ணாநகரில் குடியிருந்தோம். சுந்தரம் தியேட்டரில்தான் கமல்ஹாசன் படங்கள் பெரும்பாலும் வெளியாகும்.

பள்ளிநாட்களில் பாட்டுப்புத்தகங்கள் வாங்கி வகுப்பறைகளில் புத்தகங்களுக்கிடையில் வைத்துப்படிப்பது, அங்கேயே பாடுவது என எல்லாம் நடக்கும். சிலநேரங்களில் ஆசிரியர்களால் பறிக்கப்பட்டு கிழிக்கப்படுவதும் உண்டு. கமல்ஹாசன் பாடல்களின் மொத்த தொகுப்பு புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் யார் யாரோ பாட குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லோருமே சூப்பர் ஸிங்கர்ஸ்தான். எங்கள் வகுப்பில் பெரும்பாலான பேர் கமல் ரசிகர்களாக இருந்ததால் கமல்ஹாசன் பாடல்களை மனப்பாடப்பகுதிக்கு குறித்து கொடுத்ததுபோல படித்துக்கொண்டிருந்தோம்.

எட்டாம் வகுப்பிற்கு பிறகு நண்பர்கள் எல்லோரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டாலும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பேசிக்கிட்டே கண்மாய்கரையோரம் உள்ள சோனையா கோயிலுக்கு போய்ட்டு வந்து மந்தையில் ஒளியும் ஒளியும் பார்க்க அமர்வோம். கமல்ஹாசன் பாடல் எப்போது போடுவார்கள் என்று காத்திருந்த அந்தக் காலம் திரும்ப வருமா?

Kamal Haasan's Uthama Villain First Look Wallpapers

தேவர்மகன் வெளியான போது ஒரு கம்பை எடுத்து கொண்டு குண்டு பல்பு வெளிச்சத்தில் என் நிழலைப் பார்த்து சாந்துப்பொட்டு பாடலை பாடிக்கொண்டே கம்பு சுற்றிப் பழகியதையெல்லாம் மறக்க மனங்கூடுதில்லையே. தனிமை கிட்டும்போது கணினியில் கமல்ஹாசன் பாடலைப் போட்டு ஆடுவது பெருங்கொண்டாட்டமான விசயம். சமீபத்தில் அப்படி ஆடத்தூண்டிய பாடல் ‘உன்னைக் காணாமல் நானிங்கு நானில்லையே’.

பாலிடெக்னிக் படிக்கும்போது எங்கள் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் நான் கமல்ஹாசன் ரசிகனென்று தெரியும். அன்பே சிவம் வெளியான சமயம் மீசையை எப்போதும் முறுக்கிக் கொண்டு திரிந்த காலம். விருமாண்டி வந்த போது தினமலரில் ஒருபக்க ப்ளோஅப் கொடுத்தார்கள். அதை எனக்கு எடுத்துவர வேண்டுமென்று ஒரு ஆசிரியர் நினைக்குமளவிற்கு பிரபலமாக இருந்தேன்.

2004ல் விருமாண்டி பார்த்துத் தொடங்கினேன். கல்லூரி காலமென்பதால் அந்த வருடம் மட்டும் 24 படங்கள் பார்த்துவிட்டேன். இறுதியாக டிசம்பர் 28 அன்று மீனாட்சி தியேட்டரில் விருமாண்டி பார்க்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டு சென்று 25வது படமாக விருமாண்டி பார்த்தேன். படித்து முடித்தபின் இருசக்கர வாகன விற்பனை பிரதிநிதியாக இருந்தபோது அங்குள்ளவர்கள் என்னை கமல் என்றே அழைப்பார்கள்.

Actor Kamal Haasan in Papanasam Movie Stills

உரையாடலின் போது கமல்ஹாசன் பட வசனங்களை அடிக்கடி சொல்வேன். அதிலும் வசூல்ராஜா பட வசனங்களைத்தான் மேற்கோளாக பெரும்பாலும் கூறுவேன். வசூல்ராஜாவை திரையரங்குகளில் மட்டும் ஆறுமுறை பார்த்தேன். கமல்ஹாசன் குறித்த செய்தியோ, பேட்டியோ நாளிதழ்களில் வந்திருந்தால் அதை அப்போதே வாங்கிவிடுவேன். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தை மட்டும் எப்படியாவது எடுத்துருவேன். அப்படி தொகுத்தவை இரண்டு பெட்டி நிறைய இன்னமும் இருக்கிறது. இப்போது கணினியில் கமல்ஹாசனின் நேர்காணல்கள், பாடல்கள், படங்கள் எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

விஸ்வரூபம்2

திருமணம் முடிந்தபிறகு கமல்ஹாசன் படம்தான் முதலில் பார்க்க வேண்டுமென்று இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என ஹாட்ரிக் ஹிட் கொடுக்க வருகிறார். என்னுடைய திருமண ஆல்பத்தில் ஒருபக்கம் எங்க படமும் மறுபக்கம் கமல் பியானோ வாசிப்பது போல் உள்ள படத்தையும் சேர்த்திருந்தோம். பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

கமல்ஹாசன்

எங்க வீட்டில் இன்னமும் கமல்ஹாசன் படங்களைப் பார்க்கும் இடங்களில் ஒட்டி வைத்திருக்கிறேன். மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சலாடும் நவம்பர் மாதத்தில் கமல்ஹாசனைப் போல வைகையெனும் மகாநதிக்கரையில் நானும் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. கமல்ஹாசனை நினைத்தாலே இனிக்கும். பார்த்தால் பசி தீரும். அன்பே சிவம், அன்பே கமல்.

பின்னூட்டங்கள்
 1. வஹாப் ஷாஜஹான். சொல்கிறார்:

  “என்னை போல் ஒருவன்” தம்பி சித்திரவீதிக்காரனும் என் போன்றே கமல் ரசிகன் என்பதில் மகிழ்ச்சி. சத்யா படத்தில் கமல் நண்பன் சுந்தர் கொல்லப்பட சாட்சிகளுக்காக ஆள் தேடுவது போல் கமல் சொல்லுவார் பாய் நம்ம சுந்தர் பாய் என்று அது உண்மையில் கமலுக்கு சிறந்த ரசிகனான சுந்தர் பெயரை உச்சரித்தது போன்று இருக்கின்றது.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  மிக்க மகிழ்ச்சி.
  எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கும், திரு கமலஹாஸன் அவர்களுக்கும்.

 3. Jose சொல்கிறார்:

  நம் காலத்து நாயகன் வாழ்க. நான் கமல் அவர்கள் பற்றி எழுதியதை பகிர்கிறேன். நான் மார்தட்டிக் கொள்வதற்காக அல்ல. நம்மை போன்ற கமல் ரசிகர்கள் மனம் மகிழ….

  ஆங்கிலத்தை சற்றே சகித்துக் கொள்ளுங்கள்.

  Kamalji – The King of all trades!

  Would you believe reaching destiny at the age of six? Probably not if you did not know about Kamal Haasan. Though powerful roles were enacted during the early part of his career (Courtesy K. Balachander), 1990’s saw the emergence of Kamalji from being a terrific performer to a complete filmmaker.

  If CK Prahlad were to develop the concept of Core competence in the early part of the 21st century, he would have cited the film industry with Kamal hassan as the example rather than the Honda one. Every small step of this prolific filmmaker in the recent past represents a giant leap for Tamil and the Indian film industry.

  Though many of his films witnessed Vetri Vizha since he attained 16 Vayathinile, this multi-faceted Nayagan seems to persistently hone his Panchathanthiram skills catapulting Indian cinema to greater heights. Anbe Sivam, which had screenplay as smooth flowing as a Mahanadhi made him feel like Thenali at the box office. Apoorva Sagotharargal is a testimony of his Unnal Mudiyum Thambi attitude to achieve excellence. This Punnagai Mannan’s Raaja paarvai could be the reason for his Manmadha leelai even at Avvai Shanmughi age:)

 4. salamon சொல்கிறார்:

  Beautiful post…. best wishes for kamalhasan and you…..

 5. T.N.MURALIDHARAN சொல்கிறார்:

  கமல் மீது நீங்கள் கொண்டுள்ள அபிமானம் வியக வைக்கிறது. கமல் ஒரு அற்புதக் கலைஞன் என்பதில் ஐயமில்லை

 6. Balasubramaniam G.M சொல்கிறார்:

  உங்களைப்போல ரசிகர்கள் பெறுவதற்கு கமல் கொடுத்து வைத்திருக்க வேண்டும்பதிவை ரசித்தேன்

 7. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார,

  அருமையான பதிவு – கமலஹாசனின் தீவிர பக்தராக இருப்பது குறித்து மகிழ்ச்சி – பதிவினைப் படித்து மனம் மகிழ்கிறது

  பாராட்டுகள்
  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s