துலாமிலிருந்து விருட்சிகத்திற்கு வரும் சனிபகவானே வருக! வருக!

Posted: திசெம்பர் 16, 2014 in பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, , , ,

சனியே வருக

சனிஸ்வரன். நவக்கிரகங்களுள் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே ஆள் சனி மட்டும்தான். சனி கருமை நிறமானவர். காகத்தை வாகனமாக கொண்டவர். எள் வைத்து வழிபடுபவர்களின் தொல்லைகளைப் போக்குபவர். வன்னி இலைகளை விரும்பி ஏற்பவர். மகர, கும்ப இராசிகளின் நாயகன்.

நமக்குப் பிரியமானவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நமது பழக்கம். அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசமானவர்கள். வரவேற்க சுவர் விளம்பரம், சுவரொட்டி, பதாகை என பட்டையக் கிளப்பிவிடுவர். துலாமிலிருந்து விருட்சிகத்திற்கு வரும் என் இராசிநாதனான சனிபகவானை மதுரைக்காரனான நானும் சிறப்பாக வரவேற்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.

எல்லோரையும் சனிக்குப் பிடிக்கும். அதனால்தானோ என்னவோ சனியை எல்லோருக்கும் பிடிக்காது. சனி அவரவர் செயல்களுக்கு ஏற்ப நியாயத்தீர்ப்பு வழங்கும் தர்மவான். நாம் நற்செயல்களை செய்தால்தானே நல்லதை எதிர்பார்க்க முடியும்?. சனி குறித்து ஒரு பழமொழி உண்டு ‘சனி போல கொடுப்பவரும் இல்லை, சனி போல கெடுப்பவரும் இல்லை’. ஆனால், நாம் தப்பு செய்பவர்களை திட்டும்போது ‘சனியன் பிடிச்சவன்’ எனத் திட்டுகிறோம். சனி தப்பு செய்பவர்களுக்குத்தான் கெடுபலன்களைத்தருவார். சனி, நல்லவனுக்கு நல்லவர். கெட்டவர்க்கு அவர்களை விடக் கெட்டவர்.

சனியின் வாகனமான காகம், அவருக்கு பிடித்த எள் எனும் தானியம், வன்னி மரம் இவைகளைக் கூர்ந்து கவனித்தால் சனியைப் புரிந்து மகிழ்வூட்டலாம். காகம் கூடி வாழும் பறவை. தனியே உண்ணாது. ஆகாயத்தை சுத்தம் செய்வதோடல்லாமல் பூமியிலுள்ள அழுக்குகளையும் தின்று சுத்தம் செய்கிறது. எள் மிகவும் சத்து வாய்ந்தது. இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு, கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்றொரு பழமொழி உண்டு. இதிலிருந்து எள்ளை எளிதாக எள்ளி நகையாடக்கூடாது என அறியலாம். வன்னி மரத்தின் மீது இடிவிழாது என்ற நம்பிக்கை உள்ளது. பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது வன்னிமரத்தில்தான் தங்களது ஆயுதங்களை வைத்துச் செல்வார்கள் எனக் கதை கேட்டிருக்கிறேன். வன்னி இலைகள் நல்லதொரு மருந்து.

சனியின் பார்வை யாருக்கெல்லாம் தீங்காக அமையும் எனப் பார்க்கலாம். குழுவாக சேர்ந்து செயல்படாமல் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து நிறையப் பேருக்கு கெடுதல் செய்பவர்களை, தனக்கென அதிகமாக சேமித்து வைக்கும் கருமிகளை, நீர்நிலைகளை நாசம் செய்பவர்களை, மரங்களை வெட்டி காயப்படுத்துபவர்களை, ஒருமுறை பயன்படுத்து பிறகு தூக்கியெறி  என USE AND THROW கலாச்சாரத்தில் இருப்பவர்களை, குறைந்த சம்பளம் கொடுத்து ஊழியர்களை கொத்தடிமைபோல் நடத்தும் முதலாளிகளை, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை, மது மயக்கத்தில் மயங்கி தன்னையும் சுற்றத்தையும் நாசப்படுத்துபவர்களை, இயற்கையைப் பாழ்படுத்துபவர்களை எல்லாம் சனி ஒருவழி படுத்தியெடுத்துவிடுவார். மேற்கண்டவாறு செயல்படுபவர்களுக்கு ஏழரை ஆண்டுகள் அல்ல ஆயுளுக்கும் கெடுதலையே செய்வார்.

SATURN copy

சனிக்கு பிரியமானவராக யாரெல்லாம் திகழ முடியும் எனப் பார்க்கலாம். சாதி&மதம் பார்க்காமல் பழகுபவர்களை, நிழல்தரும் மரங்களை வளர்ப்பவர்களை, நீர்நிலைகளை சுத்தம் செய்பவர்களை, தொன்மையைப் பாதுகாப்பவர்களை, நேர்மையாக நடப்பவர்களை, பிறர் துன்பத்தை துடைக்க உதவிக்கரம் நீட்டுபவர்களை, கற்பதோடல்லாமல் அதைப் புரிந்து கொண்டு நடப்பவர்களையெல்லாம் சனிக்கு மிகவும் பிடிக்கும். பிடித்தமானவர்களுக்கு சனிபகவான் நல்லதையே செய்வார். அவர்களுக்கு வரும் தடைகளை தானே முன்நின்று தடுப்பார்.

சனிப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்வது மிகவும் எளிது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுப்பது, அவர்களுக்கு சத்தான எள்ளுருண்டை, கடலைமிட்டாய், சிறுதானியத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பது, நம் பகுதியில் ஒரிரு மரங்களை நட்டாலும் அவை நன்றாக வளரும்படி பாதுகாப்பது, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் துணிப் பைகளைப் பயன்படுத்துவது, நம் பகுதியில் சிறிய நூலகம் அமைப்பது, பொதுக் கழிப்பிடங்களை கட்டி விடுவது, எதற்கெடுத்தாலும் அலோபதியின் பின் ஓடாமல் பாரம்பரிய மருத்துவத்தையோ அல்லது மாற்று மருத்துவத்தையோ பின்பற்றுவது, நம் பண்டைய உணவு முறைகளை ஏற்பது என நிறைய வழிகள் உண்டு. எல்லாவற்றையும் கொஞ்சம் முயற்சி எடுத்து செய்தால் சனி மட்டுமல்ல நவக்கிரகங்களும் உங்களுக்கு நன்மையையே செய்யும். சனிப் பெயர்ச்சி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள், இராகு-கேது பெயர்ச்சி பலன்கள், 2015 புத்தாண்டு பலன்கள் என எதைப் படித்தாலும் இந்தப் பதிவில் உள்ளதை கொஞ்சம் நினைவில் வையுங்கள். என்னுடைய எல்லாப் பதிவுகளையும் படிப்பவர்களுக்கு சனி இன்னும் நற்பலன்களைத் தருவார். (சும்மா ஒரு விளம்பரம்)

பின்னூட்டங்கள்
  1. தொப்புளான் சொல்கிறார்:

    சனீஸ்வரன் விருழ்ச்சிகத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்தாரா? நலமறிய ஆவல். அவர் நவம்பர் 2 வாக்கிலேயே அங்கு வந்துவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறதே, உண்மை நிலவரத்துக்கு உடனே பதில்.
    ஒரு ராசியை ஓரிரு நாட்கள்/ மாதங்களில் காலிசெய்துவிடும் அப்பிராணிகளான சந்திரன், சூரியன், அங்காரகன், புதன், சுக்கிரன் ஆகியோருக்கெல்லாம் அவர்களுக்குரிய முறையான அங்கீகாரம் கிடைப்பது எப்போழ்து?

  2. ranjani135 சொல்கிறார்:

    புதுமையான சனிப்பெயர்ச்சி பலன்களை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s