சித்திரவீதியில் மதுரைவாசகன்: பட்டியல் – 200

Posted: ஜனவரி 1, 2015 in பகிர்வுகள், பார்வைகள்

2015

எனக்கு வழங்கப்பட்ட மீதியில் ஆதியிருந்தது – அந்த

ஆதியிலிருந்து மீதியை எழுதத் தொடங்கிவிட்டேன்

 – சித்திரவீதிக்காரன்

என்னை ஆளும் மதுரையையும், தமிழையும் வணங்குகிறேன். நாட்குறிப்பேட்டின் நீட்சியாக மதுரைவாசகன் வலைப்பூ மலர்ந்தது. இத்தளத்தில் இதுவரை பதிவேற்றிய 200 கட்டுரைகளின் தலைப்புகளோடு 2015 ஆம் ஆண்டின் முதல் பதிவைத் தொடங்குகிறேன்.

1.        சித்திர வீதிகள் 2.        புத்தகங்களோடு நான் 3.        அழகர்கோயில் தேரோட்டம்
4.        பாண்டி முனி 5.        தொ.பரமசிவன் அய்யாவிடம் பெற்ற கையொப்பம் 6.        காலச்சக்கரம் {திரை இசைப் பாடல்கள்}
7.        குன்றிலிருந்து குன்றம் நோக்கி 8.        மாவீரர் உரைகள்… நேர்காணல்கள்… 9.        சதுரகிரி பட்டிமன்றம்
10.     தேசாந்திரி      – எஸ்.ராமகிருஷ்ணன் 11.     தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன் 12.     வையைப்புனல்
13.     உயரப்பறத்தல் – வண்ணதாசன் 14.     மதுரையில் நாட்டுப்புறக்கலை விழா 15.     மனங்கவர்ந்த கலெக்டரின் உரை
16.     உள்ளானும் சுள்ளானும் 17.     சிவகாசி ரயில்நிலையமும் கூத்தும் 18.     சாத்தியார் அணையும் கல்லுமலைக் கந்தன் கோயிலும்
19.     துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்        {வாதைக்கும் மீட்சிக்கும் இடையேயான பயணம்} 20.     மழையோடு பாதயாத்திரை 21.     கானல் நதி – யுவன் சந்திரசேகர்
22.     காதல் கவிதைகள் 23.     தூங்கா நகரில் உற்சவ விழா 24.     தொ.பரமசிவன் உரை- உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்
25.     டம்மடும்மா டம்மடம்மடும்மா 26.     உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும் 27.     தலைவன் இருக்கிறான்        {சித்திரம்}
28.     எது கலாச்சாரம்?       – ச.தமிழ்ச்செல்வன் 29.     மதுரையில் சமணம் 30.     மதுரை கொங்கர் புளியங்குளமும் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தமிழ்பிராமி எழுத்துருவும்
31.     பம்பாயில பல்டியடிக்கிறவன் வேணுமா? டில்லியில டிமிக்கியடிக்கிறவன் வேணுமா? 32.     தொ.பரமசிவன் பார்வையில் தமிழ்ப் புத்தாண்டு 33.     மதுரை கீழ்குயில்குடியில் சமணத்தின் சுவடுகளும் அய்யனார் வழிபாடும்
34.     மதுரை சமணமலை குறித்து மயிலைசீனி.வே & எஸ்.ராமகிருஷ்ணன் 35.     சமணமும் தமிழும் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி 36.     மதுரை சித்திரை திருவிழா நினைவுகளும் பழமரபுக்கதைப்பாடல்களும்
37.     மதுரை வீதிகள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் 38.     நகுலன் இலக்கியத்தடம் 39.     மதுரை சித்திரைப் பொருட்காட்சியும், சர்க்கஸும்
40.     ஜெயமோகனின் மத்தகம் 41.     நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகத்திருவிழா 42.     நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும்
43.     வாசித்தபுத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும் 44.     அரிட்டாபட்டி மலை ஏன் பாதுகாக்கப்படவேண்டும் 45.     மதுரை அரிட்டாபட்டியில் பசுமைநடை
46.     மதுரை அரிட்டாபட்டி மலையில் பாண்டியர்கால குடைவரைக்கோயில் 47.     தமிழ்ச்சமணம் – தமிழ்ச்சமணனின் வலைப்பூ 48.     அரிட்டாபட்டிமலை எண்பெருங்குன்றங்களுள் ஒன்று – வெ.வேதாச்சலம்
49.     நம்மாழ்வார் உரை – உழவுக்கும் உண்டு வரலாறு 50.     இதயங்கவர்ந்த இடைக்காட்டூர் இருதயநாதர் 51.     மதுரை புத்தகத்திருவிழாவில் பிரபஞ்சன் சொன்ன கதைகள்
52.     பஞ்ச பாண்டவ மலையில் பசுமைநடைப் பயணக்குறிப்புகள் 53.     அழகனைக்காண அலை அலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும் 54.     மதுரை புத்தகத்திருவிழாவில் கவிஞர் தமிழச்சி
55.     மறக்க முடியாத ஆளுமை – ஜி.நாகராஜன் 56.     தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக சித்திரவீதிக்காரன் 57.     மிதமான காற்றும் இசைவான கடலலையும் ச.தமிழ்ச்செல்வன் கதைகளும்
58.     மறைந்துவரும் விளையாட்டுக்களும் மறக்காத நினைவுகளும் 59.     நாஞ்சில்நாடனின் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை 60.     நாட்டுப்புறக்கலைகள் அகமும்புறமும்
61.     மதுரை உலகின் தொன்மையான நகரம் 62.     காணாமல் போனேன் சாமியேய்… சரணம் ஐயப்பா! 63.     மதுரை புத்தகத்திருவிழா நாட்குறிப்புக்கள்
64.     அணிகலன்களின் தேவதை 65.     சில நிகழ்வுகள் சில பகிர்வுகள் 66.     தமிழ்மணத்திற்கும், தமிழ்மனங்களுக்கும் நன்றி
67.     கதவைத்திற காற்றுவரட்டும் 68.     மின்வெட்டில் இருளும் மின்னுலகம் 69.     அன்பின்பாதை சேர்ந்தவனுக்கு
70.     சரக்குன்னா சரக்குதானா? 71.     அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் 72.     பசுமைநடை நட்சத்திரங்கள்
73.     கோணங்கி எனும் தேசாந்திரியின் பயணக்குறிப்புகள் 74.     மதுரையும் தொ.பரமசிவனும் 75.     மாவீரர்தினத்தில் மகாவீரரைக் காண…
76.     வண்ணநிலவனுடன் கடல்புரத்தில் 77.     திரும்பிப்பார்க்கிறேன் 2011 78.     விகடன் வரவேற்பறையில் சித்திரவீதிக்காரன்
79.     அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன் 80.     கலைப்பார்வையா, காமப்பார்வையா 81.     யானைமலையும் பசுமைநடையும்
82.     அருகி வரும் இசைக்குறிப்புகள் 83.     யானைமலையில் சமணம் 84.     தெப்பத்திருவிழா
85.     மதுரை விக்கிரமங்கலத்தில் பசுமைநடை 86.     பெண் என்னும் சுமைதாங்கி 87.     அன்னவாகனத்தில் அழகுமலையான்
88.     என்னைக்காக்கும் காவல்கோட்டம் 89.     காவல்கோட்டத்திலிருந்து 90.     வாழ்வு – வரலாறு – புனைவு
91.     மனதைக் கவர்ந்த காவல்கோட்டக்காரர்கள் 92.     அரவான் – காவல்கோட்டம் – அரிட்டாபட்டி 93.     அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள்
94.     அழகர்மலையில் ஆதிகாலக் குகை ஓவியங்கள் 95.     அவ்வைநோன்பும் சில நம்பிக்கைகளும் 96.     மகுடேஸ்வரன் கவிதைகள்
97.     வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன் 98.     புரவியெடுப்பு 99.     சித்திரவீதி
100.  நன்றி 101.  முனிப்பாட்டு 102.  ஆடித்தேர்நடை ஆடியாடி
103.  பால்பன் அழைக்கிறது… பாலமேடு செல்கிறோம் 104.  மதுரை புத்தகத்திருவிழா 105.  வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
106.  கும்பமுனி 107.  குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல் 108.  ஆவணிக்கதைகள்
109.  வாசிப்புத்திருவிழா 110.  மாடக்குளக்கீழ் மதுரை 111.  இப்படியும் ஒரு சுற்றுலா
112.  இங்கும் ஒரு எல்லோரா 113.  அரைமலை ஆழ்வார் 114.  வீரசிகாமணி குடைவரை, குகை, கல்வெட்டு
115.  திருமலாபுரம் பாண்டியன் குடைவரை 116.  எதிர்பாராத தரிசனம் 117.  கமல்ஹாசனின் கானமழை
118.  திருச்செந்தூரின் கடலோரத்தில் 119.  சித்தர்மலையில் பசுமைநடை 120.  நான்மாடக்கூடலில்…
121.  நினைத்தாலே இனிக்கும் 122.  கொடும்பாளூர் மூவர்கோயில் 123.  குடுமியான்மலை குகையும் குடைவரையும்
124.  முந்நீர் விழவு 125.  மாமதுரை போற்றுவோம் 126.  சுங்கடி தினம்
127.  பூம்பூம் மாட்டுக்காரர் 128.  மணியாட்டிக்காரர்கள் 129.  தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா
130.  புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் 131.  திருப்பரங்குன்றமலையில் பசுமைநடை 132.  திருப்பரங்குன்ற மலையில் பசுமைநடை – பகுதி 2
133.  வைகை ரயிலாக மட்டும் ஓடினால்.. 134.  பக்தியாத்திரையா? ஜாலியாத்திரையா? தீனியாத்திரையா? 135.  கண்டதையெல்லாம் கவிதையென்று சொல்லாதே
136.  குன்றத்திலே குமரனுக்குத் தேரோட்டம் 137.  எனக்கு புத்தகம் பிடிக்கும் – உதயசந்திரன் 138.  அழகர்கோயில் – தொ.பரமசிவன்
139.  எனக்குப் பிடித்த பிரகடனம் 140.  பறவைக்கோணம் – எஸ்.ராமகிருஷ்ணன் 141.  மதுரை வீதிகளில் பசுமைநடை
142.  ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம் 143.  பாண்டியனின் சமணப்பள்ளியில் 144.  தொல்குடிகள் வாழ்ந்த கருங்காலக்குடி
145.  மதுரையில் இஸ்லாம் 146.  தோல்பாவைக்கூத்து 147.  நிறைகண்மாய் சிலுசிலுப்பு
148.  பகல்வீடு தன்னில் உயிர்வாழ ஒரு மரம் 149.  விருட்சத் திருவிழா அழைப்பு 150.  எழுத்தாளுமைகளுடன் பசுமைநடை
151.  பகல்வீடு மின்னூலை தரவிறக்க… 152.  மதுரையில் 8-வது புத்தகத்திருவிழா 153.  மதுர வரலாறு
154.  தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் 155.  தென்பறம்பு நாட்டுத் திருவாதவூரில் பசுமைநடை 156.  ஐந்து கருட சேவை
157.  நான் நானாக நாலுவிதம் 158.  யாரோ எழுதிய கவிதை 159.  தீபாவளி நாயகனைக் காண..
160.  கமலின்றி அமையாது கலை உலகு 161.  சேரன் பாண்டியன் பெருவழித்தடம் 162.  பகல்வீட்டின் சாளரங்கள் – வயிற்றுக்கும் ஈயப்படும்
163.  பகல்வீட்டின் சாளரங்கள் – சொல்புத்தி 164.  பகல்வீட்டின் சாளரங்கள் – தாய்மொழி வழிக்கல்வி காந்தியடிகள் 165.  நெடுஞ்சாலை – வாழ்க்கைப் பயணம்
166.  நினைவோ ஒரு பறவை 167.  காரி 168.  திருப்பரங்குன்றம் போற்றுவோம்
169.  அனிமல் லவ்வர்ஸ்க்கு அன்பான அழைப்பு 170.  சமணமலை – அகிம்சைமலை – தமிழர்மலை 171.  வேர்தேடும் பயணத்தில் விரல்பற்றி அழைத்துச் செல்பவர்
172.  பயணங்களே கசடுகளைப் போக்கும் – அ.முத்துக்கிருஷ்ணன் 173.  திருப்பரங்குன்றமும் சிக்கந்தர் தர்ஹாவும் 174.  மாதங்களில் நான் சித்திரை
175.  சொக்கப்பனையும் பூரொட்டியும் 176.  விக்ரமாதித்யன் கவிதைகள் 177.  சங்கத்தமிழுக்கு என்றும் அழிவில்லை – தொ.பரமசிவன்
178.  ஜெயமோகனின் வெள்ளையானை 179.  சித்திரைத் திருவிழா நாயகரின் அரண்மனையில் 180.  ஈரம்பிரியன் மதுரைக்காரன்
181.  எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் – நிராகரிப்பின் வலி 182.  தொல்குடிகளின் வாழிடங்களின் மடியில் 183.  பேரையூரில் பாண்டியர்கால மலைக்கோயில்
184.  நெஞ்சில் பதிந்த மிளிர்கல் 185.  மதுரையில் வாழ்ந்த ரோசாப்பூதுரை 186.  வாசிப்பது தியானம்
187.  கமலுக்கு நேரமிருக்கிறது. நமக்கேன் இருக்காது? 188.  பாறைத்திருவிழா கொண்டாட வாருங்கள் 189.  விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக்காட்சிகள்
190.  பிரகடனம் 191.  தெப்பக்குளத்தில் முகிழ்த்த காற்றின் சிற்பங்கள் 192.  மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா
193.  திருமாலிருஞ்சோலையில் தைலக்காப்புத் திருவிழா 194.  வைகைக்கரையில் தோன்றிய தாமரைச் சிரிப்புடையோன் 195.  சிலம்பாற்றில் தலைமுழுகும் சீடன்?
196.  மீனாட்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமைப் பள்ளி 197.  சேலம் – மேட்டூர், வழி: தாரமங்கலம் 198.  துலாமிலிருந்து விருச்சிகத்திற்கு வரும் சனிபகவானே வருக!
199.  குன்றேறி வையைவளம் காணல் 200. மறக்க மனங்கூடுதில்லையே

தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. பதிவுகளைத் தொடர்ந்து எழுத ஊக்கமளித்து வரும் சகோதரர் தமிழ்செல்வத்திற்கும், பசுமைநடை மற்றும் வலைப்பதிவுலக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  இருநூறு பதிவுகளடங்கிய இந்த பட்டியலை ஒருசேரப் படிக்கும்போது சித்திரவீதியின் வண்ணமயமான சில அம்சங்கள் துலக்கமாகத் தெரிகின்றன:

  ஆகாய மார்க்கமாக ஆயிரமாயிரம் கிமீ பயணம் செய்தும் அதே சுருங்கிய மனத்துடன் திரும்பிவர முடியும்; பக்கத்தில் பத்து இருபது கிமீ தொலைவேயுள்ள இடங்களுக்கு ‘ஊர்சுத்தியும்’ பரந்துபட்ட அனுபவமும், பார்வையும் பெற முடியும் என்பதைக் காட்டுவனவாக உள்ளன மதுரையை சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று வந்தது பற்றிய பயணக்குறிப்புகள். கம்புக்குக் களையெடுத்த மாதிரியும் ஆச்சு, தம்பிக்குப் பொண்ணுப் பார்த்தது மாதிரியும் ஆச்சு என்பதுபோல இப்பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள்.

  மதுரை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களின் சுண்டியிழுக்கும் தேரோட்டங்களோடு கூடவே அதிகம் அறியப்பெறாத விழாக்களான ஐந்துகருட சேவை, தைலக் காப்பு போன்றவற்றையும் அறியத் தந்திருக்கிறீர்கள்.

  பதிவுகள்தோறும் படைப்பாளிகளும், நூல்களும் வழித்துணையாக வருகிறார்கள். நாடறிந்த எழுத்தாளுமைகளான எஸ்ரா, ஜெயமோகன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன், யுவன் சந்திரசேகர், ச. தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் முதலியோரின் படைப்புகளை வாசித்துப் பெற்ற அனுபவம்; நகுலன், ஜி.நாகராஜன், கோணங்கி போன்றோர் மீதான பிரமிப்பு; தாணு பிச்சையா, இரா. முருகவேள் போன்றோரைக் கண்டடைகிற பரவசம் எல்லாம் பதிவாகியிருக்கின்றன.

  மதுரையில் புத்தகத் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்க்கவும், பங்குகொள்ளவும் ஆட்களுண்டு என்பது தெரிகிறது.

  தொ.ப-வுக்கும் கமலுக்கும் நம்மையும் ரசிகனாக்கிவிடுகிற தகவல்கள். அ.முத்துகிருஷ்ணன், சொ.சாந்தலிங்கம் போன்றோரின் களப்பணிகளை எடுத்துரைக்கும் பதிவுகள். பூம்பூம் மாட்டுக்காரர்கள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பூரொட்டி, சொக்கப்பனை என்று நாட்டுப்புற வாழ்வின் சாட்சியங்கள் – எல்லாம் நன்று.

  படங்கள் வரைந்து பார்க்கிறீர்கள். பசுமை நடையின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருப்பது, நூல் பட்டியல் போட்டு புத்தகக் காட்சியில் வினியோகிப்பது, பகல் வீடு போன்று சிறுநூல் வெளியிடுவது என்று ஏதாவது செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இருந்தும் சில சமயங்களில் சலிப்பைக் கடந்துவர தனக்குத்தானே சில பிரகடனங்கள் தேவையாயிருக்கின்றன.

  நூல்களைப் பகிர்ந்துகொள்ளவும், பயணங்களின்போது உடன்வரவும், நிழற்படங்கள் எடுத்துத் தரவும் சகோதரர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களோடு பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். நன்றி ததும்ப, கிடைத்த அங்கீகாரங்களுக்காய் சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள்.

  இப்பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், ஏதாவது குறிப்பாய்த் தேடி எதேச்சையாய்க் கண்டடைபவர்களுக்கும், வேகமாய்ப் படம் பார்த்துச் செல்பவர்களுக்கும் மிகுந்த பயன்விளைவிப்பதாகவே உள்ள இச்சித்திரவீதி இன்னும் ஆறு கிடந்தன்ன அகலமாய், ஆழமாய், நீளமாய், நிறைந்து பரவி வண்ணம் சுழித்தோடட்டும்.

  பி.கு: இப்பதிவுகளன்னியில் இத்தளத்தில் தொப்புளானின் மறுமொழிகளும் முக்கியத்துவமுடையன என்று வாசகர்கள் கருதுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது.

  • cheenakay சொல்கிறார்:

   அன்பின் சித்திர வீதிக்கார – சுந்தர்
   அறிவது நலனே ! விழைவதும் அஃதே !
   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ( தாமதமாயினும் வாழ்த்துகள் தான் )

   200 பதிவுகளையும் பட்டியலிட்டு சக பதிவர்களைப் படிக்கத் தூண்டியது நன்று.

   தொடர்க பதிவுகளை

   நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா

   *நல்வாழ்த்துகள்*
   *நட்புடன் சீனா *

 2. பிரபுவின் சொல்கிறார்:

  அற்புதமான பதிவு நண்பரே.

 3. Salamon சொல்கிறார்:

  Vazhthkkal!!!

 4. Asin sir சொல்கிறார்:

  அன்பு நண்பருக்கு,
  வாழ்த்துக்கள்.

  ஒவ்வொரு நிலையிலும் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, அதன் நீளம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அதேதான் இப்பட்டியலைப் பார்க்கும் போதும் ஏற்படுகிறது.

  உங்கள் வாசிப்பும் எழுத்தும் தொடரட்டும்.

  வாழ்த்துக்களுடன்,
  அசின் சார், கழுகுமலை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s