பொங்கல் படங்கள் – ஒரு பார்வை

Posted: ஜனவரி 15, 2015 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, ,

பொங்கல்

தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறெந்தப் பண்டிகைகளையும் விடவும் பொங்கலுக்குச் சிறப்பான தனித்துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. முதலாவதாக இது ஒரு தேசிய இனத்திருவிழா. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண்டிகைகள் சிறைப்பட்டுக்கிடக்க, பொங்கல் மட்டும் ஓர் இனத்திருவிழாவாகத் கொண்டாடப்படுகிறது. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்தாலும், மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.

பொங்கல்விழா
சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங்கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் வேண்டும் இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி.

– தொ.பரமசிவன் (பண்பாட்டு அசைவுகள்)

முத்துக்கிருஷ்ணன்
தொன்மையான தலங்களையும், இடங்களையும் நோக்கி பயணிக்கும் பசுமைநடைக்குழு இம்முறை மதுரைக்கு அருகிலுள்ள சிறு கிராமமான வடபழஞ்சிக்கு அருகிலுள்ள வெள்ளப்பாறைப்பட்டியில் பொங்கல்விழா கொண்டாட முடிவு செய்தது. அந்தக் கிராம மக்களின் ஒத்துழைப்பினால் பொங்கல் விழா மிகச்சிறப்பாக 11.01.2015 கொண்டாடப்பட்டது. வெள்ளப்பாறைப்பட்டியின் வரலாறு குறித்து பேராசிரியர் முத்தையா அவர்களின் கருத்தை அறியலாம்.

பசுமைநடை
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளப் பாறைப்பட்டி ஒரு அழகான கிராமம். இந்த ஊர் தென்பழஞ்சி-வடபழஞ்சி என்ற இரு கிராமங்களின் நடுவே அமைந்துள்ளது. முழுக்க முழுக்க விவசாயம் தான் இவர்களின் முக்கிய தொழில். இன்றும் கூட இந்த ஊரின் எல்லாத் திசைகளிலும் சம்பங்கிப்பூ, கோழிக்கொண்டை, மல்லிகை, கடலை, துவரை என விதவிதமான வெள்ளாமைகளை காணலாம்.

வழிபாடு
இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு பாறை அமைந்துள்ளது. இந்த பாறைதான் வெள்ளப்பாறைப்பட்டி கிராமத்தின் முகவரியே. ஒரு பெரும் வெள்ளம் உலகையே அழித்த போது இந்தப் பாறைதான் வெள்ளம் பெருகப் பெருக மிதந்து கொண்டே இருந்து இந்த ஊரின் மக்களை காத்தது என்பது இந்தக் கிராமத்தின் நம்பிக்கை.
இந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு சோற்றுடன் இந்த கதைகளையும் சேர்த்தே ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த ஊர் மந்தையில் உள்ள காற்றுடனும் இந்த கதை கலந்தே இருக்கிறது. அதனால் தான் இந்த கிராமத்தின் கருப்பையாக இந்தப் பாறை கருதப்படுகிறது.

போட்டிகள்பானைஉடைத்தல்
இந்தப் பாறையை, நோவாவின் புனிதக் கப்பல், அல்லா அனுப்பிய சஃபினா படகு, புனித ஜூட் குன்று, மெசப்படோனிய அஸ்ட்ராசிஸின் மிதவை, வள்ளுவர் தம் மக்களைக் காப்பாற்ற வடிவமைத்த சுரைக்கூடு என்றால் கூட மிகையில்லை.

விடாமுயற்சி
கிராமம் – கிராமத்தின் தற்சார்பு என்பதெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கேலியாக்கப்பட்டு விட்டது. இன்று பெருவளர்ச்சி என்னும் பெயரில் இப்படியான கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்த மாதிரியான கிராமங்களை காண்பதே அரிதாகிவிடுமோ என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் உள்ளது.

இளவட்டக்கல்பொங்கல்பரிசு
இன்றைய தேவை நம் குழந்தைகளுக்கு ஷாப்பிங் மால்களை காட்டுவது மட்டும் அல்ல, மாறாக கிராமங்களை, வரலாற்று சின்னங்களை, நம் வரலாற்றை அறிமுகம் செய்வதே.

மதுரவரலாறு

வெள்ளப்பாறைப் பட்டியில் கொண்டாடிய பொங்கல்விழா அனுபவங்களை விரைவில் தனிப்பதிவாகக் காணலாம்.

நன்றி – அருண் போட்டோகிராஃபி, ஓவியன் போட்டோகிராஃபி

Advertisements
பின்னூட்டங்கள்
 1. yarlpavanan சொல்கிறார்:

  தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

 2. cheenakay சொல்கிறார்:

  *அன்பின் சித்திர வீதிக் கார,*

  *அருமையான பதிவு – படங்கள் அத்தனையும் அருமை. விளக்கங்களூம் மகிழ்வுடன்
  கொண்டாடப் பட்ட திருவிழாவும் சிறப்பாக இருந்தது.*

  *தன் திருவிழா பற்றிய விளக்க வுரையும் நன்று. எழுத்திலும் சரி பேச்சினிலும்
  சரி – எந்தத் தலைப்பானாலும் முதலிடத்தைப் பிடிக்கும் வண்ணம் உள்ளது.*

  *பாராட்டுகள்*

  *நல்வாழ்த்துகள்*
  *நட்புடன் சீனா*

  *நல்வாழ்த்துகள்*
  *நட்புடன் சீனா *

 3. B.Udayakumar சொல்கிறார்:

  Ithula Namma Padam than Highlightuuuu…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s