செந்திலும் சீமைக்கருவேல மரமும்

Posted: ஓகஸ்ட் 21, 2015 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

பசுமைநடைப் பயணங்களுக்குச் செல்லும்போதெல்லாம் சகோதரர்களுடன், நண்பர்களுடன் செல்வேன். எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் செந்தில் என்ற சிறுவனையும் பசுமைநடைக்கு அழைத்துச் செல்வேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செந்திலுடைய முதல் பதிவாக பசுமைநடையின் இன்னீர் மன்றல் பற்றிய கட்டுரை அமைகிறது.

senthil

எல்லோருக்கும் வணக்கம். நான்தான் உங்கள் செந்தில்.

நான் எங்க அண்ணனோடு பசுமைநடைக்கு வந்துட்டுருக்கேன். இதுவரை கொங்கர்புளியங்குளம், திருவேடகம், யானைமலை, திருமலைநாயக்கர்மஹால், புதுமண்டபம், வெள்ளப்பாறைப்பட்டி, தாண்டிக்குடிக்கு வந்துருக்கேன்.

books

எங்க அண்ணே முன்கூட்டியே இந்த ஊருக்கு பசுமைநடை செல்லணும்னு சொல்லிருவாங்க. நான் மறந்துருவேன்று அதுக்கு முதல்நாள் மறுபடியும்  சொல்லுவாங்க. அன்று இரவு எனக்கு தூக்கமே இருக்காது. அதே நினைப்பாகவே இருக்கும். எப்படா விடியும் என்று காத்திருப்பேன். விடிந்தவுடன் அன்றாடம் செய்யும் வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிடுவேன். எங்கள் அண்ணனும் கிளம்பிவிடுவார். நாங்கள் இருவரும் பசுமைநடைக்கு போய்ட்டு வருவோம்.

இந்த முறை இன்னீர் மன்றலுக்கு பரவை வழியே வந்து ரிங்ரோட்டை பிடித்து கீழக்குயில்குடி சென்றோம். அங்கு தாமரைக்குளத்திற்கு இறங்கும் படிக்கட்டை சுத்தம் செய்தோம். சுற்றியுள்ள மரத்தடியில் கிடந்த மழைக்காகிதத்தை பெறக்கி சுத்தமாக்கினோம். வேலையை முடித்து விட்டு இட்லி சாப்பிட்டோம். பிறகு நவாப்பழம் மரத்தை நோக்கி சென்றுவிட்டு அங்குள்ள நவாப்பழத்தை (இனிய கனியை) பறித்து மிகவும் விரும்பி சாப்பிட்டோம். அங்கிருந்து கிளம்பினோம். வரும்போது நல்ல உச்சி வெயில். ரிங்ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது தொலைவில் ஒரு கரும்புச்சாறு கடையைப் பார்த்தோம். ஆசையாயிருந்துச்சு. சுவையான கரும்புச்சாறை குடித்துவிட்டு அந்த கரும்புச்சாறு பிழியும் அய்யாவுக்கு நன்றி சொன்னோம். அப்படியே வீடு வந்து சேர்ந்தோம்.

samanamalai

11838650_1031262220252218_2182109597109025059_oமீண்டும் மாலை ஐந்து மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். நாகமலைப்புதுக்கோட்டையில் ஒரு டீக்கடையில் ஆளுக்கு இரண்டு வடை சாப்பிட்டுவிட்டு இடதுபக்கமாகத் திரும்பினோம். சிறிதுநேரத்தில் கீழக்குயில்குடி வந்தடைந்தோம். நண்பர்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. சிறிதுநேரம் வேலைகளைப் பார்த்துவிட்டு அமர்ந்தோம். இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடங்கினோம்.

பிறகு சமையல்காரர்களுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவிட்டு விழாக்குழு நண்பர்களுடன் அவ்விழாவிற்கு தேவையான அலங்காரத்தை செய்து கொண்டிருந்தோம். நேரமும் போய்கொண்டிருந்தது. சாலைகளில் இன்னீர்மன்றல் அட்டையைக் கட்ட நாகமலைப் புதுக்கோட்டை மெயின் ரோட்டிலிருந்து கட்டிக்கொண்டுவந்தோம். கட்டிமுடித்துவிட்டு கீழக்குயில்குடி ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தோம். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அரட்டையடித்துவிட்டு ஒருமணி அளவில் ஆலமரத்தடியில் உறங்கினோம்.

11896020_1031263286918778_6854128640561399759_n

மறுநாள் 5 மணி அளவில் எழுந்து குளிப்பதற்கு எங்க தண்ணீர் கிடைக்கும் என்பதை சிந்தித்தோம். ஊர் எல்லையில் உள்ள தண்ணீர் தொட்டியைக் கண்டோம். உடனே அந்த இடத்தில் நண்பர்களுடன் குளித்துவிட்டு மீண்டும் ஆலமரத்தடியை நோக்கி வந்தோம்.

11903957_1031264993585274_3689839338198612984_n

முத்துகிருஷ்ணன் சார் வந்திருந்தார். என் குட்டி நண்பனும் விழாவிற்கு வந்துவிட்டான். சார் வந்து என்னிடமும் என் நண்பனிடமும் ஒரு வேலையை ஒப்படைத்தார். அதை விழா முடியும் வரை சரியாக செய்தோம். 1500 நபர்கள் அவ்விழாவை காண வந்திருந்தார்கள். நடைபயணத்திற்கு எதிர்பாராத கூட்டத்தை பார்த்து மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. காலை உணவை முடித்துவிட்டு 9 மணிக்கு விழாவைத் தொடங்கினோம். எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்து விழாவைக் காண வந்திருந்தனர். அதிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் போட்டியில் கலந்துகொண்டு திறனை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றார்கள்.

11902233_1031265410251899_431269620618419117_n

பின்பு என் நண்பனுடன் மலையைக் காண சென்றபோது சமணசிலையைப் பார்த்ததும் என் மனதில் சாந்தலிங்கம் அய்யாதான் வந்தார். கொஞ்சநேரம் மலைமேல் நானும் என் நண்பனும் மலைமேல் கொஞ்சநேரம் ஒக்கார்ந்திருந்து சுற்றிப் பார்த்தபொழுது சுற்றியுள்ள காட்சிகள் என் கண்ணை கவர்ந்தது. இறங்கிவிட்டு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு வந்த ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு கருத்துக்களை பேசினர். பிறகு விளையாடப் போய்விட்டேன். விளையாடிக்கொண்டிருந்த சிறிய கேப்பில் சென்று பார்த்தால் தாண்டிக்குடியைச் சார்ந்த ஈடுஇணையற்ற விவசாயி மோகனசுந்தரம் அய்யா பேசிக்கொண்டிருந்தார். அவர் கருவேலமரத்தை அழிக்க வேண்டும் எனக் கூறினார். அந்த வார்த்தையை கூர்ந்து கவனித்தேன். கருவேலமரத்தின் வேர் சுமார் 100 அடி ஆழத்திற்கு சென்று தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால் சீமைக்கருவேல மரத்தை அழிக்க வேண்டும்.

mohanasundaram

அதை பார்த்துவிட்டு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றேன். பின்பு மதிய உணவு சாப்பிட்டோம். மிகவும் சுவையாக இருந்தது. அந்த சமையல் மாஸ்டர் மிகவும் எங்களுக்கு தெரிந்தவர். அவரிடம் பேசினேன்.

food

விழா முடிந்தது. அந்த இடத்தை விட்டு வர மனதில் விருப்பமே இல்லை. முத்துக்கிருஷ்ணன் சார், வக்கீல் சார், மற்றும் எல்லா நண்பர்களிடமும் சொல்லிவிட்டு கிளம்பினோம். காளவாசலில் மதுமலரன் அண்ணன் கரும்புச்சாறு வாங்கி கொடுத்தார். குடித்து கிளம்பினோம். மழை வந்துருச்சு. நனைந்துகொண்டே சென்றோம். இதோடு என் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். இதுக்குமேல் எழுதினால் எல்லோரும் மயங்கிவிடுவார்கள் என்று சுதாரித்து முன்னக்கூட்டியே நிறுத்திவிடுகிறேன்.

நன்றி. வணக்கம்.

இப்படிக்கு உங்கள் அன்புள்ள

பா.செந்தில்.

(படங்கள் உதவி – அருண்)

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  ‘மல்லாட்டை மாமா’ பவா பேசும்போது வ்ளாடப்போய்ட்டாய்ன்போல…

 2. Nagendra Bharathi சொல்கிறார்:

  பசுமை நடை அருமை

 3. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க செந்தில். உங்களை கூட்டிட்டு வந்த அண்ணனுக்கும், தொடர்ந்து வரும் உங்களுக்கும் வாழ்த்துகள். இது போல நிறைய எழுதுங்கள் !

 4. பாலா, மதுரை சொல்கிறார்:

  நல்ல வருவடா தம்பி………………. சிறப்பா இருக்கு ………

 5. சாலமன் சொல்கிறார்:

  தம்பி செந்தில் வாழ்வில் இதுபோன்ற நல்ல விசயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்…

 6. cheenakay சொல்கிறார்:

  அன்பின் செந்தில்

  நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது. தொடர்க – சித்திர வீதிக்காரன் சுந்தரோடு சேர்ந்து பல்வேறு பதிவுகள் கொடுத்து பலப்பல பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் .

  நட்புடன் சீனா

  • cheenakay சொல்கிறார்:

   அன்பின் சித்திர வீதிக்கார – சுந்தர்.

   செந்திலுக்கு ஊக்கமளித்து – செந்திலைப் பல்வேறு பதிவுகள் இட்டு பல்வேறு பரிசுகள் பெறத் தயார் செய்க.

   அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா

 7. பாடுவாசி சொல்கிறார்:

  தம்பி செந்திலுக்கு அன்பும் வாழ்த்தும் 🙂

 8. kiramathusiruvan சொல்கிறார்:

  அருமை டா தம்பி …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s