நாவல்களும் நானும்

Posted: ஒக்ரோபர் 29, 2017 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

novel1

சஞ்சலத்தில் சஞ்சாரம் செய்யும் மனதிற்கு சஞ்சீவியாக நாவல்கள் திகழ்கின்றன. நாவல்கள் நம்மை உலகின் பல பிரதேசங்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் அழைத்துச் செல்லும் காலயந்திரம்.

எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நாவல் பட்டியலில் 25ஐ கடந்த போது அதைத்தவிர்த்த நாவல் பட்டியலைப் பார்த்தால் 75ஐ தாண்டியிருந்தது. அப்போதே நூறை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது. கடந்து சில மாதங்களாக வாசிப்பை முடுக்கிவிட்டு நிறைய நாவல்கள் வாசித்தேன். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் நூலகத்திலிருந்து பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எடுத்து வந்தேன். சமீபத்தில் வாசித்த தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’யோடு நூறாவது நாவல் ஆசை நிறைவேறியது.

novel2

வாசித்த நாவல்களில் மனதை கவர்ந்த மாந்தர்கள், மனதைத் தொட்ட வரிகள், பார்க்க விரும்பிய இடங்களை தொடர்ந்து எழுத நினைத்துள்ளேன். இந்த நூறு நாவல்களைக் குறித்தும் ஒரு பக்கமாவது எழுத ஆசை. இந்தப் பதிவில் நான் வாசித்த நூறு நாவல்கள் பட்டியலை மட்டும் சேர்த்துள்ளேன். இளங்கலைத் தமிழ் தொலைநிலைக் கல்வி வாயிலாகப் படிக்கையில் அதில் ஜெயகாந்தனின் சுந்தர காண்டம் பாடப்பகுதியாக இருந்தது. அந்நாவல் வாசிக்காமலேயே அதன் சுருக்கத்தை வாசித்தே காலத்தை ஓட்டுவிட்டேன். பாடப்புத்தகமாக ஒரு நாவல் வரும் போது ஏற்படும் சிக்கல் என் வாழ்விலும் வந்துவிட்டது. அதே போல ஆயிரம் பக்க நாவல்களான பூமணியின் அஞ்ஞாடி, பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் பாதியோடு நின்றுபோனது. மீண்டும் ஒரு வாரம் வாசிப்பின் வெறியேறினால் அவைகளை வாசிக்க முடியுமென நம்புகிறேன்.

novel3

 • பார்த்திபன் கனவு – கல்கி
 • பொன்னியின் செல்வன் – கல்கி
 • கன்னிமாடம் – சாண்டில்யன்
 • சித்தரஞ்சனி – சாண்டில்யன்
 • வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
 • கிருஷ்ண பருந்து – ஆ.மாதவன்
 • குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்
 • நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
 • ஆகாயத்தாமரை – அசோகமித்திரன்
 • தண்ணீர் – அசோகமித்திரன்
 • பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்
 • வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
 • அபிதா – லா.ச.ராமாமிருதம்
 • பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
 • புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
 • கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்
 • ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
 • ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
 • கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
 • புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
 • குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
 • பிறகு – பூமணி
 • ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
 • சாய்வு நாற்காலி – தோப்பில் முகமதுமீரான்
 • எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்

novel9

 • கம்பாநதி – வண்ணநிலவன்
 • கடல்புரத்தில் – வண்ணநிலவன்
 • ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
 • அலைவாய்கரையில் – ராஜம் கிருஷ்ணன்
 • குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
 • நளபாகம் – ஜானகிராமன்
 • தூர்வை – சோ.தர்மன்
 • கூகை – சோ.தர்மன்
 • மின்னுலகம் – நீல.பத்மநாபன்
 • பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்
 • எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில்நாடன்
 • கொற்றவை – ஜெயமோகன்
 • விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
 • காடு – ஜெயமோகன்
 • வெள்ளையானை – ஜெயமோகன்
 • கன்னியாகுமரி – ஜெயமோகன்
 • உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 • உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
 • நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
 • யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 • துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
 • நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 • சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன்
 • இடக்கை – எஸ்.ராமகிருஷ்ணன்
 • பதின் – எஸ்.ராமகிருஷ்ணன்
 • சிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்
 • அக்கடா – எஸ்.ராமகிருஷ்ணன்
 • நிழல்முற்றம் – பெருமாள் முருகன்
 • மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
 • ஆழிசூழ் உலகு – ஜோ.டி.குருஸ்
 • கொற்கை – ஜோ.டி.குருஸ்

novel10

 • ஏழரைப்பங்காளி வகையறா – எஸ்.அர்ஷியா
 • பொய்கைகரைப்பட்டி – எஸ்.அர்ஷியா
 • அப்பாஸ்பாய்தோப்பு – எஸ்.அர்ஷியா
 • கரும்பலகை – எஸ்.அர்ஷியா
 • சொட்டாங்கல் – எஸ்.அர்ஷியா
 • கல்மரம் – திலகவதி
 • நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்
 • எங்கதெ – இமையம்
 • தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
 • கன்னி – பிரான்சிஸ் கிருபா
 • காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
 • மிளிர்கல் – இரா.முருகவேள்
 • ஆட்டம் – சு.வேணுகோபால்
 • நிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
 • கூந்தப்பனை – சு.வேணுகோபால்
 • திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
 • பால்கனிகள் – சு.வேணுகோபால்
 • மணற்கேணி – யுவன்சந்திரசேகர்
 • கானல்நதி – யுவன்சந்திரசேகர்
 • ஊர்சுற்றி – யுவன்சந்திரசேகர்
 • நட்டுமை – ஆர்.எம்.நௌசத்
 • குன்னிமுத்து – குமாரசெல்வா
 • துருக்கித் தொப்பி – கீரனூர் ஜாகிர்ராஜா
 • கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா
 • மீன்காரத்தெரு – கீரனூர் ஜாகிர்ராஜா
 • கருப்பாயி என்ற நூர்ஜகான் – அன்வர் பாலசிங்கம்
 • கானகன் – லஷ்மிசரவணக்குமார்
 • பருக்கை – வீரபாண்டியன்
 • சேவல்கட்டு – ம.தவசி
 • கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
 • கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
 • சித்திரப்பாவை – அகிலன்

novel4

மொழிபெயர்ப்பு நாவல்கள்

 • அந்நியன் – ஆல்பெர் காம்யூ
 • ஜமீலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
 • ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) – சிங்கிஸ் ஜத்மதேவ்
 • அன்னைவயல் – சிங்கிஸ் ஜத்மதேவ்
 • எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
 • பால்யகால சகி – வைக்கம் முகமது பஷீர்
 • பாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர்
 • மதில்கள் – வைக்கம் முகமது பஷீர்
 • தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
 • இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
 • சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா
 • கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

novel5

வாசித்த எல்லா நாவல்களும் எனக்கு நெருக்கமான நாவல்கள் என்பதே உண்மை. வாசித்த நாட்களில் அந்த கடற்கரைகளில், மலைகளில், வீதிகளில் அந்த மனிதர்களோடு அலைந்து திரிந்தேன். அவர்களது கஷ்டம் என்னையும் உலுக்கியது. பல கதாமாந்தர்களை எனக்கு நெருக்கமான மனிதர்களைப் போல இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். 2018ல் 25 நாவல்களும், 1000 சிறுகதைகளும் வாசிக்க வேண்டுமென்ற இலக்கோடு பயணிக்கிறேன். படித்து பதிவிடுகிறேன். நன்றி.

novel7

பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாவலையும் யார் யாரிடம் வாங்கினேன், எந்தெந்த நூலகங்களில் எடுத்தேன், எந்தெந்த நாவல்கள் பரிசாக வந்தது, எந்தெந்த நாவல்களை நான் வாங்கி வாசித்தேன் என நினைவில் உள்ளது. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. நாவலாற்றின் கரையில் நான் என்ற பதிவில் நான் நாவல் வாசிக்க வந்த கதையை விரிவாக எழுதியுள்ளேன்.

novel6

நாவல்களின் அட்டைப் படங்கள் எல்லாம் கூகுளில் இருந்து எடுத்துள்ளேன். அட்டைப்படங்களை வடிவமைத்த கலைஞர்களுக்கு நன்றி. மேலும், மின்னுலகம் நாவலின் அட்டைப்படம் மட்டும் கிடைக்காததால் அதை நான் வடிவமைத்துள்ளேன்.

novel8

பின்னூட்டங்கள்
 1. துரைமுருகன் சொல்கிறார்:

  எப்படிங்க முடியுது இவ்வளவும் படிக்க… மகிழ்ச்சிங்க..

 2. Aranganayagi Arasan சொல்கிறார்:

  அருமையான பதிவு.

  நானும் இத்தனை புத்தகம் படிக்க வேன்டும் என்ற இலக்கை வைக்க வில்லை. ஆனால் கடந்த ஆண்டு பிற்பகுதியில் அதிகமாக புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

  நான் எற்கனவே எழுதி வைத்திருக்கும் என் புத்தகப் பட்டியலில் உங்கள் வலைபூவிலிருந்தும் சில புத்தகங்களின் பெயர்களை பார்த்து எழுதி வைத்துக் கொண்டேன். நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த சில புத்த்கங்களின் பெயர்கள் உங்களின் பட்டியலிலும் இருந்ததில் மகிழ்ச்சி.

  2018 ஆம் ஆண்டுக்கு படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் புத்தகப் பட்டியலையும் பதிவு செய்யுங்கள். உதவியாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s