இன்று புதிதாய்ப் பிறந்தோம்

Posted: ஜனவரி 10, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

சித்திரவீதிக்காரன் 1

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து

காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.

ஞாயிறும் நன்று; திங்களும் நன்று.

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.

கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.

ஆறுகள் இனியன.

உலோகமும், மரமும், செடியும், கொடியும்,

மலரும், காயும், கனியும் இனியன.

பறவைகள் இனிய.

ஊர்வனவும் நல்லன.

விலங்குகளெல்லாம் இனியவை.

நீர் வாழ்வனவும் நல்லன.

மனிதர் மிகவும் இனியர்.

ஆண் நன்று. பெண் இனிது.

குழந்தை இன்பம்.

இளமை இனிது. முதுமை நன்று.

உயிர் நன்று. சாதல் இனிது.

– மகாகவி பாரதியார்

பாரதியின் வசன கவிதைகளை அதிகாலையில் வாசித்தல் இன்பம். ஒவ்வொரு வைகறையும் அற்புதமாக நல்ல புத்தகங்களை வாசித்தல் இன்பம். ஒரு நாளைப்போல ஒவ்வொரு வருடத்தையும் இலக்குகளோடு தொடங்கி திரும்பிப் பார்க்கும்போது சில நல்ல நினைவுகளோடு முடிப்பது இன்பம்.

2018-ஐ சில இலக்குகளோடு தொடங்கி பயணிக்கலாம் என்று விரும்புகிறேன். அவை, எந்தளவு நிறைவேறின என்று இந்தாண்டு டிசம்பரில் பார்க்கலாம். அந்த இலக்குகளைப் பதிவாக எழுதுவது, அதை நோக்கி தினமும் உழைப்பது என்று முடிவெடுத்துள்ளேன்.

  1. மதுரை திருவிழாக்கள் குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பை இந்தாண்டு சித்திரைத் திருவிழாவிற்கு முன்பாக வெளியிட வேண்டும்.
  2. வாசித்த நூறு நாவல்கள் குறித்து இரண்டு பக்க அளவிலாவது சிறுபதிவு எழுத வேண்டும். இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.
  3. ஆயிரம் சிறுகதைகள் இந்தாண்டு வாசித்து அதைக்குறித்து சிறுகுறிப்புகளும் எழுதி வைக்க வேண்டும்.
  4. சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி, பரிபாடல், திருக்குறள் – இந்த நான்கு நூல்களையும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
  5. மதுரை குறித்த ஒரு நாவலை இந்தாண்டு எழுதத் தொடங்க வேண்டும். அதற்காக நிறைய அலைய வேண்டும்.
  6. ஊர்தோறும் புத்தகத்திருவிழா என்ற நோக்கோடு விடுமுறை நாட்களில் புத்தகங்களோடு மதுரை கிராமங்களில் பயணிக்க வேண்டும்.
  7. எல்லாவற்றையும் சிறப்பாக ஆவணப்படுத்த DSLR கேமரா ஒன்று இந்தாண்டு சித்திரைத் திருவிழாவிற்கு முன் வாங்க வேண்டும்.
  8. திருவிழாக்களில் அலைந்து திரிந்து எளிய மனிதர்களை, கலைஞர்களை ஆவணப்படுத்த வேண்டும்.
  9. தொல்தலங்கள், கடற்கரைகள், மலைகள், கலைகளை நோக்கி தமிழகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்க வேண்டும்.
  10. மதுரைவாசகன் வலைப்பூவில் இந்தாண்டு குறைந்தது நூறு கட்டுரைகளாவது எழுத வேண்டும்.

2020ல் முதல்வராகும் கனவை மட்டும் இன்னும் இரண்டாண்டுகள் கழித்து பார்த்துக் கொள்ளலாம். 2018-க்கு இந்த 10 இலக்குகள் போதும். நன்றி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s