மனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்

Posted: திசெம்பர் 19, 2018 in பார்வைகள், பகிர்வுகள்

மனசு போல வாழ்க்கை என்ற ஒற்றைச் சொல்லே இந்நூலையும், நம் மனநிலையில் மாற்ற என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்லிவிடுகிறது. தமிழ் இந்து நாளிதழில் செவ்வாய்தோறும் வெற்றிக்கொடிகட்டு இணைப்பு பகுதியில் நாலு மாதங்கள் தொடராக வந்த பகுதிதான் மனசு போல வாழ்க்கை. இத்தொடர் வந்தபோது தொடர்ந்து விரும்பி வாசித்து வந்தேன்.

நாம் நல்லதை நினைக்கும் போது நல்லதே நினைக்கும்.அதேபோல கெட்டது நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமே கெட்டதை நிகழ்த்தி விடுகிறது என்பதையும்தெளிவாகச் சொல்கிறார் உளவியலாளர் ஆர்.கார்த்திகேயன். இந்நூலின் வாயிலாக பல்வேறு விதமானஉள-நல சிகிச்சைகளை எடுத்துரைக்கிறார். குறிப்பாக அபர்மேசன் எனும் நேர்மறை சொற்றொடரைமந்திரம் போல உச்சரிக்கும் முறை. இதன் மூலம் நம்முடைய மனம், உடல், மற்றவர்களோடான பிரச்சனைகளைத்தீர்க்கும் விதத்தை கூறுகிறார். நமக்கான அபர்மேசன் சொற்றொடரை எப்படி உருவாக்குவது என எளிமையாக சொல்லித் தருகிறார்.

முதலில் அதில் நான் அல்லது என் என்ற தன்னிலை வார்த்தை அவசியம் இருக்க வேண்டும். அதற்கடுத்து நேர்மறையான வினைச்சொல் ஒன்றோ அதற்கு மேலோ இருக்க வேண்டும். முக்கியமாக நிகழ்காலத்தில் நடப்பது போல இறுதிச் சொல் அமைய வேண்டும். உதாரணமாக ‘நான் என்னை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன்’. இதில் இந்த மூன்று விதியும் ஒருங்கே வந்திருப்பதைக் காணலாம். அதேபோல நான் பணக்காரன் ஆவேன் என்று சொல்லாமல் நான் பணவரவைத் தொடர்ந்து பெற்று வருகிறேன் என்று சொல்வது நல்ல பலனளிக்கும்.

இந்த அபர்மேசன் சொற்றொடரைத் தொடர்ந்து சொல்லுவதோடு, எழுதி வரும்போது எண்ணத்தில், உணர்வுகளில் மாற்றம் ஏற்படும்போது மனதில் அமைதி கிடைக்கும். இந்நூலில் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்குமான அபர்மேசன்களை ஒருங்கே இப்பதிவில் தொகுத்திருக்கிறேன்.

சிக்கலான தருணங்களில் நாம் சொல்ல வேண்டியது, “நான் வாழ்க்கையின் வழிமுறையை நம்புகிறேன்”. அதேபோல நோய் நீங்க நாம் சொல்ல வேண்டியது “______________ காரணமான என் எண்ணங்களையும், உணர்வுகளையும் நான் முற்றிலுமாக வெளியேற்றுகிறேன்” கோடிட்ட இடத்தில் உங்கள் நோய் குறைபாடை எழுதிக் கொள்ளுங்கள். உதாரணமாக வயிற்றுக்கோளாறு காரணமான என் எண்ணங்களையும் உணர்வுகளையும் நான் முற்றிலுமாக வெளியேற்றுகிறேன்.

உறவுகளில் சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே எதிர்பார்ப்புதான். அதற்கு “நான் என் மகன் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்” மேலும், “நான் என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் சொல்லலாம்.

நன்றியுணர்வின் மேன்மையை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். நாம் நமக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு விசயத்திற்கு பின்னாளும் உள்ள பலரது உழைப்பை எண்ணும்போது நாம் நிச்சயமாக நன்றியுணர்வோடு இருக்க வேண்டியதன் அவசியம் புரியும்.

கோபத்தை கட்டுப்படுத்த, எதிர்மறையான எண்ணங்களை மாற்ற என பல்வேறு விசயங்களை இக்கட்டுரைகளில் பேசுகிறார். மன்னிப்பு குறித்த கட்டுரையில் எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் நமக்கு அமைதி கிடைப்பதைக் குறித்துச் சொல்கிறார். “என் வாழ்க்கையில் என்னை காயப்படுத்திய அனைவரையும் மனமார மன்னிக்கிறேன்” என்று சொல்லலாம். அன்பும் ஏற்றுக் கொள்ளுதலும் கொண்ட வாழ்க்கையில் தோல்வியில்லை, ஏமாற்றம் இல்லை என்ற கருத்தை இந்நூலில் இருந்து பின்பற்றி மகிழ்வோடு வாழத் தொடங்கினால் மனசு போல வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை.

பின்னூட்டங்கள்
  1. Lawrence சொல்கிறார்:

    மனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் -இந்த புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்க வில்லை தாங்கள் எதாவது புத்தக கடையில் பார்த்தால் சொல்லவும் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s