எனது முதல் நூல்

Posted: பிப்ரவரி 23, 2019 in பார்வைகள், பகிர்வுகள்
திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை நூல் வெளியீடு, 10 பிப்ரவரி 2019


தொல்லியல் திருவிழாவாக நடைபெற்ற பசுமைநடையின் நூறாவது நடையில் பசுமைநடை வெளியீடாக திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை என்ற எனது நூல் வெளிவந்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை
சித்திரவீதிக்காரன்
பசுமைநடை வெளியீடு,
200 பக்கங்கள், விலை – 130ரூ

நன்றி

‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என மலைப்பிரசங்கத்தில் இயேசுகிறிஸ்து சொன்னது எத்தனை சத்தியமான வரிகள். கடந்த 9 ஆண்டுகளாக பசுமைநடை மலைவகுப்புகளில் நான் கற்றது ஏராளம். மதுரையில் நடைபெறும் இருபதிற்கும் மேலான திருவிழாக்களில் அலைந்து திரிந்து பார்த்தவைகளை தொகுத்து கட்டுரையாக எழுதியதை பசுமை நடை வெளியீடாக சிறப்பான வடிவமைப்புடன் கொண்டுவந்த பசுமைநடை அமைப்பாளர் தோழர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், பசுமைநடை குடும்பத்திற்கும்

பின்னட்டை

திருவிழாக்களின் தலைநகரம் நூலிற்கு வாழ்த்துரை வழங்கிய பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யாவிற்கும், தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும்


இந்த நூலை வெளியிட்ட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்,
ஓவியர் ட்ராஸ்கி மருது , டோக் பெருமாட்டி கல்லூரியின் முதல்வர் முனைவர் கிறிஸ்டியானா சிங் ஆகிய ஆளுமைகளுக்கு

தம் சித்திரங்கள் வாயிலாக எமைக் கவர்ந்த மனோகர் தேவதாஸ் அவர்களுக்கு

வரலாற்று மாணவராக்கிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யாவிற்கு

வாசிப்பு, அலைதல் மீதான காதலை விதைத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு

இந்நூல் வெளியான அன்றே 200-க்கும் மேலான பிரதிகள் விற்க காரணம் பசுமை நடை வெளியீடாக வந்ததுதான். இந்த நூலை தங்களுடைய நூலாக எடுத்துக் கொண்டாடிய அனைத்து அன்புள்ளங்களுக்கும்

வலைப்பூ எழுதத் தொடங்கியதில் இருந்து இந்தப் பதிவு வரை உறுதுணையாக இருந்துவரும் சகோதரர் ப.தமிழ்ச்செல்வத்திற்கு

திருவிழாக்களின் தலைநகரம் நூலிற்காக படங்களை கேட்டதும் கொடுத்து உதவிய நிழற்படக் கலைஞர் ஒவ்வொருவருக்கும்

இந்த நிகழ்வை சிறப்பாக  ஒலிஒளிப் பதிவு செய்த ஷ்ருதி டி.வி.க்கும், நிழற்படக்கலைஞர்கள் அனைவருக்கும்

தொல்லியல் திருவிழா செய்திகளை பகிர்ந்த ஊடகங்களுக்கு

திருவிழாக்களில் தொடர்ந்து பயணிக்க உந்துதலாக இருக்கும் ஒவ்வொருவருக்கும்

எனைக் காக்கும் மதுரைக்கும், தமிழுக்கும் நன்றி.

பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு மற்றும் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை ஆகிய நூல்கள் மதுரை ரயில்வே நிலையம் எதிரே அமைந்துள்ள மல்லிகைப் புத்தக நிலையத்திலும், சர்வோதய இலக்கியப்பண்ணையிலும், கீழஆவணிமூலவீதியிலுள்ள ஜெயம் புத்தகநிலையத்திலும் கிடைக்கின்றன. இணையம் வாயிலாக உலகெங்கிருந்தும் டிஸ்கவரி புக் பேலஸ் வழியாக வாங்கலாம்.

படங்கள் – பிரசாத் ஜெயராம், அருண், ரகுநாத்

பின்னூட்டங்கள்
 1. RAVIJI RAVI சொல்கிறார்:

  vaazthukal. arumai. thodarungal.
  என்றும் அன்புடன்,
  *MGR*

  On Sat, Feb 23, 2019 at 2:30 PM சித்திரவீதிக்காரன் wrote:

  > சித்திரவீதிக்காரன் posted: ” திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை நூல்
  > வெளியீடு, 10 பிப்ரவரி 2019 தொல்லியல் திருவிழாவாக நடைபெற்ற பசுமைநடையின்
  > நூறாவது நடையில் பசுமைநடை வெளியீடாக திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை என்ற
  > எனது நூல் வெளிவந்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. திருவிழாக்களின்”
  >

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s