மதுரைவாசகன்

சித்திரவீதியிலிருந்து மதுரை வாசகன்

மதுரை வீதிகளில் அலைந்து, அலைந்து பித்தேறி ஒவ்வொரு வீதியும் சித்திரமாக மனதில் படிய சித்திரவீதிக்காரனானேன். அலைதலும், வாசித்தலும்தான் என் வாழ்க்கையாய் இருக்கிறது.

நான்காம் வகுப்பு படிக்கும்போதிருந்து நாட்குறிப்பேடு எழுதுகிறேன். வேண்டாத வேலையாகத் தோன்றி நடுநடுவே விட்டாலும் இன்று வரை நாட்குறிப்பேடு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன். புத்தக வாசிப்பு இளமையிலிருந்தே தொடர்கிறது. ஆனால், இணையத்தில் தமிழில் வாசிக்க இது போன்ற வலைத்தளங்கள் இருக்கிறது என்பதே 2009ல்தான் தெரியும். விகடன் வரவேற்பறையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம் குறித்து வாசித்து பின் அவரது தளத்தை முழுவதும் வாசித்தேன்; வாசித்துக்கொண்டிருக்கிறேன். களஞ்சியத்தில் கடனுக்குக் கணினியும் வாங்கி மற்ற வலைத்தள முகவரிகளும் அறிந்து எனக்குப் பிடித்த பக்கங்களைத் தரவிறக்கி வந்து என் கணினியில் ஏற்றி வாசிக்கத் தொடங்கினேன். அப்பொழுதுதான் இதுபோன்று நாமும் எழுதலாமே என்ற எண்ணம் எனக்கு உதித்தது. மதுரையையும், வாசித்ததையும் குறித்துப் பதிவு செய்யவேண்டும் என்ற ஆவல் எனக்குத் தொற்றிக் கொண்டது. என்னுடைய கனவைச் சாத்தியமாக்கிய தமிழ்ச்செல்வ அண்ணனுக்குத்தான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பதிவைப் பார்த்து ஆலோசனைகள் தரும் மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் சித்திரவீதிக்காரனின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. அழகர்கோயில் தேரோட்டம் என்ற கட்டுரைக்கு முதல் பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டிய சகோதரர் மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி. எனது படிப்பும், பணியும் தராத மனநிறைவை, மகிழ்வை இப்பதிவுலகம்தான் தருகிறது. அதற்கு மிகவும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இதில் பெரும்பாலான பதிவுகளை வாசித்தபோது பல பதிவுகளில் நான் பேசிக்கொண்டிருப்பது போலவே இருந்தது. பயணமாகட்டும், புத்தகமாகட்டும், மற்ற விசயமாகட்டும் எல்லாப் பதிவுகளிலும் பேசுவது போன்ற நடைதான் உள்ளது. பெரும்பாலும் உரையாடலும், வாதமும் என இக்கட்டுரைகளில் உள்ளவைபோல பேசிக்கொண்டே அலைபவன்தான் நான். அது எழுத்திலும் ஒட்டிக் கொண்டது எனக்கு திருப்தியாகவும், பெருங்குறையாகவும் தோன்றுகிறது. ‘சதுரகிரிபட்டிமன்றம்’, ‘சிவகாசி ரயில்நிலையமும் கூத்தும்’ எல்லாம் இப்பொழுது வாசிக்கும்போது கூட சிரிப்புதான் வருகிறது. மதுரை புத்தகத்திருவிழாவில் ‘உலகமயமாக்க பிண்ணனியில் பண்பாடும், வாசிப்பும்’ என்ற தலைப்பில் தொ.பரமசிவன் ஆற்றிய உரையைப் பதிவு செய்திருந்தேன். அந்த கட்டுரை தமிழ்ச்சரம் தளத்திலும், ‘அம்ருதா’ இலக்கியமாத இதழிலும் வந்தது பெருமகிழ்ச்சியை தந்தது. எல்லாப் புகழும் தொ.பரமசிவன் அய்யாவுக்கே. என்னைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘’சரியாகவே வாழநினைக்கும் தப்பும் தவறும் கலந்த சராசரி மனிதன்’’.

நான்கு வழிச்சாலைகள்

நாலாபக்கமும் அழைத்தாலும்

நாலாயிரம் சம்பளம் வாங்கி

நாய் படாத பாடுபட்டாலும்

நாலுமாசி வீதிகளுக்குள் சுற்றித்திரியும்

நான்மாடக்கூடல்காரன்

நான்!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐவகை திணைகளுக்கும் கருப்பொருட்கள், உரிப்பொருள்கள் வாசித்திருப்பீர்கள். அது போல சித்திரவீதிக்காரன் குறித்த பட்டியல்தான் கீழே உள்ளது.

பெயர் – ஆலவாய் அழகனுக்கும், திருமாலிருஞ்சோலை அழகனுக்கும் பொதுவான அழகான பேர், சுந்தர்.

வாழ்க்கை – அலைதலும் வாசித்தலும் வாழ்க்கையாய் கொண்டவன்.

தெய்வம் – மதுரை, தமிழ், நாட்டுப்புறத்தெய்வங்கள்…

ஆளுமைகள்– பாரதியார், பிரபாகரன், கமல்ஹாசன், தொ.பரமசிவன், எஸ்.ராமகிருஷ்ணன், உதயசந்திரன், இளையராஜா, கோணங்கி, மனுஷ்யபுத்திரன், பிரபஞ்சன், மனோகர் தேவதாஸ், விக்ரமாதித்தன், வண்ணதாசன், ச.தமிழ்ச்செல்வன், நாஞ்சில்நாடன், அ.முத்துக்கிருஷ்ணன், சாந்தலிங்கம்……..

இடங்கள் – சித்திரை வீதிகள், நூலகங்கள், மலைகள், கடற்கரைகள், கிராமத்து வயல்வெளிகள்..

பிடித்த விசயங்கள் – புத்தகங்கள், பயணங்கள், நாட்டுப்புறக்கலைகள், பாடல்கள்

விழாக்கள் – சித்திரைத் திருவிழா, புத்தகத் திருவிழா, கிராமதெய்வ திருவிழாக்கள், கலைவிழாக்கள்

பகை –  புகை, மது, சாதி, மதம்

சுவைகள் – சாம்பார் சாதம், கரும்புச்சாறு, அன்னாச்சிப்பழம், ரசபானிபூரி, மிளகாய் பஜ்ஜி, பன்னீர் சோடா, பவண்டோ, ஃபுருட்டாங்.

விரும்பி வாசிக்கும் வலைத்தளங்கள்– எஸ்.ராமகிருஷ்ணனில் தொடங்கி மதுரைவாசகன் வரை. மேலும் அறிய, பார்க்க வாசித்த புத்தகங்களும் வாசிக்கும் இணையதளங்களும் பதிவு.

தங்கள் ஆலோசனைகளை (தமிழில்) maduraivaasagan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இயன்றவரை என் குறைகளைத் திருத்திக் கொள்வேன். எங்கிருந்தாலும் தமிழாலும், மதுரையாலும் சித்திரவீதியில் இணைந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி!

மேலும், இந்த வீதியில் உங்கள் தடம் பதிய எதிர்பார்த்துக் காத்திருக்கும்

சித்திரவீதிக்காரன்.

பின்னூட்டங்கள்
  1. radhakrishnan சொல்கிறார்:

    ayya madurai veriare,
    i am overwelmed by ur fantastic love and passion for madurai.nanum ungalaippola maduraikkaranthan.veliyurilirundu madurai yai nerungumpothu nangu gopurangalin
    darisanam kidaiththathume nammai ariyamal oru silirpu varume athai ennavenru solvathu?
    ethai anubaviththirukkireerkala?ungal arimuga urai marrum padivugal abaram. nam viraivil sandippom.

  2. நீச்சல்காரன் சொல்கிறார்:

    அற்புதமான தளமும் பதிவுகளும்! நானும் மதுரை என்றபோதும் உங்கள் பதிவு மதுரையை இன்னும் நெருக்கமாக ஆக்குகிறது. காலம் கிடைத்தால் உங்கள் பயணங்களில் கலந்துக்கொள்ள ஆவல்

    என்றும் நட்புடன்
    நீச்சல்காரன்

  3. radhakrishnan சொல்கிறார்:

    நல்ல பதிவு.மதுரையின் மீது உங்களைப்போலவே எனக்கும் ஆராக்காதல்
    உள்ளது.சங்க் கால பாரம்பரியமுள்ள ஊர் அல்லவா நமது மதுரை.

  4. பாண்டியன் சொல்கிறார்:

    அருமையான முயற்சி!

  5. தி. பிரபாகரன் சொல்கிறார்:

    மதுரை மண் தந்த மாணிக்கமே,

    கடந்த ௩ (3) ஆண்டுகளாக தமிழ் வலைபூக்களை வாசித்து இன்புறும் மவன ரசிகன் நான்.

    ஆனந்த விகடனின் வரவேற்பறையில் தங்கள் முகவரி கண்டு, வாசிக்க வந்தேன்.

    நேற்று உங்கள் “சித்திரவீதியிலிருந்து மதுரை வாசகன்” வாசித்த பொழுது

    நான் கண்டது,
    நான் நேசிக்கும் ‘மதுரை’யையும் !
    நான் சுவாசிக்கும் மதுரை வளர்த்த தமிழையும்!
    காலத்தால் அழியா மதுரையின் மங்கா புகழையும்!

    அளப்பறியா ஆனந்தமடைந்தேன், ஆனந்த கூத்தாடினேன்!!!!

    விகடனின் மதிப்புரை மிக சரியே// இது,,,”மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள்”….தான் என தங்களை தொடர்ந்தேன்.

    இன்று, நான்மாடக்கூடல் தொகுப்பில் சில பதிவுகளையும், அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் பதிவையும் கண்ட பிறகு,

    நான் காண்பவைகளை, எனது கண்கள் கொண்டு நீர் கண்டது போல் உள்ளது!!!

    இதுவரை நான் வாசித்த பல பல பதிவர்களின், எண்ணற்ற பதிவுகள் என்னை கவர்ந்த போதிலும்.

    பின்னுட்டம்மிட எனக்கிருந்த சிறு தயக்கத்தை, நேச உறவே உன் தமிழோ, உன் கருத்தோ, எதோ ஒரு நொடி பொழுதில் கரைத்தது;)

    இதோ எனது முதல் பின்னுட்டம்!!!,

    உங்களை மேலும் வாசித்து, சுவாசித்து இன்புறபோகம்

    அரபு தேசம் வாழ் மண்ணின் மைந்தன்,
    தி. பிரபாகரன்

  6. போஸ் திரு சொல்கிறார்:

    மதுரயில் உங்களை சந்திக்க விரும்புகிறேன் ….. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் ….

  7. Prasanna சொல்கிறார்:

    En Madurai thangal pathivil innum azagaaga therigirathu…..nandri nanba….mikka nandri….maduraiai pirinthu vaadum en pondravargalukku satre aaruthal tharum padaippukkal

  8. பீர் | Peer சொல்கிறார்:

    வாழ்த்துகள் சித்திரவீதிக்காரன்

  9. c j nelson சொல்கிறார்:

    ur comments abt nanjil nadan are nice. u have introduced his poems to me. thanks…

  10. c j nelson சொல்கிறார்:

    Ur page in vikatan was nice….

  11. ஆருத்ரா சொல்கிறார்:

    உங்களுக்கு பிடித்த ஆளுமைகளில் ஒருவரான இளையராஜா எனது காதலுக்கு இசை அமைத்து கொண்டிருக்கின்றார்.
    பிடித்த ஆளுமைகளில் பிரபாகரன் என்றும் குறிப்பிட்டுள்ளீாகள். இந்த நள்ளிரவு கனத்த சோகமாக உள்ளது.

  12. mohan சொல்கிறார்:

    romba nanri nanba..
    mudintha tamil nTtoda sirappugalai kuda sollungalen

  13. P.Sermuga Pandian சொல்கிறார்:

    மதுரை மீது மாளாக் காதல் கொண்ட உங்களைப் போல் நானும் ஒருவன் . ஒவ்வொரு முறையும் மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களை பார்க்கும் போதெல்லாம் முதன் முறையாகப் பார்க்கும் கிராமத்தானைப் ப் போல் ஆகிவிடுகிறேன் எப்போதும் அவை எனக்கு அதிசயமாகவே படுகின்றன .மதுரை குறித்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள்……. P.Sermuga Pandian

  14. cheenakay சொல்கிறார்:

    இயல்பான எண்ணத்தை அப்படியே எழுதி வீட்ட சுந்தர் ! இவையே ஏற்றமிகு எண்ணங்கள் – சிந்தனைகள் – இதை நினைக்கவும் எழுதவும் துடிக்கின்ற உன் செயல் பாடு மிக உயர்ந்தது. சாதரணமானது அல்ல – அழகாக எழுதுகிறாய். சித்திரங்களை வரைகிறாய். சிந்தனைகளைத் தீட்டுகிறாய். இயற்கையை விரும்புகிறாய். இதை விட வேறென்ன வேண்டும் உய்ர்ந்து நிற்க ! இவ்வாறே எண்ணங்களை எழுத்தாக்கி ஏடாக்கிச் செயல் பட்டால் ஏற்றமும் தோற்றமும் தானே வரும் ! அலைதலும் வாடுதலும் வாழ்க்கையின் இயற்கை.! அதுவே ஒரு காலத்தில் உயர்ந்தோங்கி விடும் ! . உள்ளம் உறுதியாய்ச் செயல் படு – உண்மையை உரை !

    நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  15. சொ.வினைதீர்த்தான் சொல்கிறார்:

    தமிழ்மன்றம் குழுமத்தில் திரு பானுக்குமார் கொடுத்திருந்த தொடுப்புச்சுட்டி மூலம் உங்கள் வலைப்பூ பார்க்க வாய்த்தது. பதிவுகள், புகைப்படங்கள், கோட்டோவியங்கள் சிறப்பாக உள்ளன. சிந்தனைகளை இயல்பாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    சொ.வினைதீர்த்தான்

  16. sankar சொல்கிறார்:

    Thamilukkaga thodaratum ungal thmil sevai”vaalga Madurai nanba” I like it”

  17. solomon jayaraj சொல்கிறார்:

    வெட்டி நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் வலைப்பதிவு. தொடருங்கள் பணியினை

  18. பெ.இராஜாமணி சொல்கிறார்:

    அருமையான வலைப்பூ அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் …

  19. adur சொல்கிறார்:

    nanbar, madurai avargale, nandri, nan oru thamzhi vasipaplan. medum nandri, adur

  20. ஆனந்தன் சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் சுந்தர் அருமையான பதிவுகள் மிக்க மகிழ்ச்சி

  21. vrajesh42 சொல்கிறார்:

    உங்கள் வலைத்தளத்திற்கு இன்றுதான் முதன்முறை வந்தேன். சுவையான பதிவுகளை அழகான தமிழில் தருவதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    வெ. ராஜேஷ்.

  22. madurai elayapari சொல்கிறார்:

    naan madurayil oru iyarkai angaadi nadathugiren , maatru thiranaaligalukku ena ,..anna perundhu nilaya perundhu niruthathil , poomaalai vaniga valaagam en 3. mudindhaal varalaam ,..

பின்னூட்டமொன்றை இடுக