மாதங்களில் நான் சித்திரை

Posted: மார்ச் 25, 2014 in பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, ,

சித்திரை சிறப்பிதழ்

இனி என்னைப் புதிய உயிராக்கி – எனக்

கேதுங் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்  

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

–    மகாகவி பாரதி

சித்திரை என்றாலே மதுரையில் கொண்டாட்டந்தான். கொண்டாட்டமும், கோலாகலமும் சூழ்ந்த சித்திரையில் மீண்டும் உயிர்த்தெழப் போகிறேன். சில மாதங்களாய் பதிவுகள் ஏதும் எழுதாமல் சூன்யமாக இருந்த மனநிலையை மாற்றி மீண்டெழப் போகிறேன். சித்திர வீதிகளில் சித்திரைச் சிறப்பிதழ் நான்மாடக்கூடல், நாட்டுப்புறவியல், திருவிழா, தொல்லியல், புத்தகங்கள், சமயம், பசுமைநடை, ஆளுமைகள், கமலும் தமிழும், மாற்றுமருத்துவம், சித்திரங்கள், நிழற்படங்கள் என பல்சுவை சிறப்பிதழாக தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல மதுரையும் தமிழும் அருளட்டும்.

பின்னூட்டங்கள்
  1. Pandian சொல்கிறார்:

    சித்திரைத் திருவிழாப் படங்கள் வருமல்லவா?

    • சுந்தரே சிவம் சொல்கிறார்:

      பதிவில் உள்ள படமே சித்திரைத் திருவிழாவிற்கு அழகர் வரும் அன்று பதினெட்டாம்படிக்கருப்பு சன்னதிக்கிட்ட எடுத்தது. சித்திரைத்திருவிழா படங்கள் இல்லாமல் சித்திரை சிறப்பிதழா?

      மறுமொழிக்கு நன்றி நண்பரே

  2. Dindigul Dhanabalan (DD) சொல்கிறார்:

    தொடருங்கள்…

    வாழ்த்துக்கள்…

  3. SHANMU சொல்கிறார்:

    All of your pages are good! please post more Madurai related articles!

  4. cheenakay சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார, சித்திரைத் திருவிழா சம்யத்தில் மீண்டு புத்துணர்வுடன் பதிவுகள் இட வந்திருப்பதற்குப் பாராட்டுகள் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

பின்னூட்டமொன்றை இடுக