
வாசித்த புத்தகங்களைக் குறித்து எழுதும் பழக்கம் 2020இல் ஊரடங்கு காலத்திலிருந்து தொடங்கியது. அப்பழக்கத்தின் வாயிலாக இந்தாண்டு வாசித்த 84 புத்தகங்கள் குறித்தும் ஒரு நாட்குறிப்பேட்டில் தொகுக்க முடிந்தது. புத்தகங்களின் பெயர் பட்டியலை கீழே காணலாம்.
- நா.வா. வாழ்வும் பணியும் – இரா.காமராசு – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மதுரைச் சிறுகதைகள் – தொகு- பூமிச்செல்வம் – அன்னம்
- இக்கிகய் – ஹெக்டர் கார்சியா, பிரான்செக் – மஞ்சூள்
- உயிர்காக்கும் உணவுநூல் – மயிலை. சீனி.வேங்கடசாமி – கிண்டில்
- அன்புவழி – பெர்லாகர் குவிஸ்ட் – கிண்டில்
- நாபிக்கமலம் – வண்ணதாசன் – சந்தியா பதிப்பகம்
- எஸ்தர் – வண்ணநிலவன் – நற்றிணை பதிப்பகம்
- பாண்டிச்சி – அல்லிபாத்திமா – கிண்டில்
- சில இடங்கள் சில புத்தகங்கள் – ச.சுப்பாராவ் – பாரதி புத்தகாலயம்
- பயணிகள் கவனிக்கவும் – ஜெ.குமரகுருபரன் – குமுதம்
- நிலவொளி எனும் இரகசியத்துணை – எம்.டி.முத்துகுமாரசாமி – அடையாளம்
- நர்மதை நதிவலம் – கே.கே.வெங்கட்ராமன் – இராமகிருஷ்ணமடம்
- ஆரியர் திராவிடர் போராட்ட வரலாறு – டி.எம்.நாயர் – சுயமரியாதை பதிப்பகம்
- வாசிப்பு – அறிந்ததும் அடைந்ததும் – ச. சுப்பாராவ் – பாரதி புத்தகாலயம்
- சமகால இலக்கியக் கோஷ்டி – பாலகுமார் – கிண்டில்
- கடவுள் ஆயினும் ஆக_சங்கச் சுரங்கம் – ஆர்.பாலகிருஷ்ணன் – பாரதி புத்தகாலயம்
- ஹோமர் – பாலகுமார் – கிண்டில்
- உறைப்புளி – செல்வேந்திரன் – கிண்டில்
- எல்லா உயிரும் பசி தீர்க – நம்மாழ்வார் – கிண்டில்
- பின்னணிப் பாடகர் – சுரேஷ்குமார் இந்திரஜித் – கிண்டில்
- நடைவழிக்குறிப்புகள் – சி. மோகன் – கிண்டில்
- படிக்கும் பெற்றோர்களின் கதை – கிருஷ்ண வரதராஜன்- அனுராஜன் – கிண்டில்
- ஹம்போல்ட்: அவர் நேசித்த இயற்கை – ஹேமபிரபா – ஓங்கில் கூட்டம் – கிண்டில்
- அல்குல் – கார்த்திக் புகழேந்தி – கிண்டில்
- நோயினைக் கொண்டாடுவோம் – கோ.நம்மாழ்வார் – கிண்டில்
- மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்புகள் – தொகு. ச.முருகபூபதி – பாரதிபுத்தகாலயம்
- நடைவழிநினைவுகள் – சி.மோகன் – கிண்டில்
- ஜி.நாகராஜன்: வாழ்வும் எழுத்தும் – சி. மோகன் – கிண்டில்
- ஆமையும் ஏனைய விலங்குகளும் – சி.மோகன் – கிண்டில்
- தெறிகள் – சி.மோகன் – கிண்டில்
- அக்னிநதி – சி.மோகன் – கிண்டில்
- தமிழிசை வேர்கள் – ந. மம்மது – எதிர் வெளியீடு
- கி.ரா. என்றொரு கீதாரி – தொகு. கழனியூரன் – கிண்டில்
- குடியின் வரலாறு – கார்த்திக் புகழேந்தி – கிண்டில்
- என் உடல் என் மூலதனம் – போப்பு – சந்தியா பதிப்பகம்
- சுந்தர ராமசாமி – சில நினைவுகள் – சி. மோகன் – கிண்டில்
- மஞ்சள் மோகினி – சி.மோகன் – கிண்டில்
- நவீன உலகச் சிறுகதைகள் – சி.மோகன் – கிண்டில்
- காலம் கலை கலைஞன் – சி.மோகன் – கிண்டில்
- நவீன கலையின் தமிழக ஆளுமைகள் – சி. மோகன் – கிண்டில்
- வாசிக்காத புத்தகத்தின் வாசனை – கொ.மா.கோ. இளங்கோ – ஓங்கில் கூட்டம் – கிண்டில்
- விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் – சி.மோகன் – கிண்டில்
- கமலி – சி.மோகன் – கிண்டில்
- நீராட இருக்கிறது நதி – சி. மோகன் – கிண்டில்
- நவீன கலையின் தமிழக ஆளுமைகள் – சி. மோகன் – கிண்டில்
- அங்கீகரிக்கப்படாத கனவின் வலி – சி. மோகன் – கிண்டில்
- எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை – சி. மோகன் – கிண்டில்
- ஒன்பது வேடிக்கை கதைகள் – செகாவ் – கிண்டில்
- நாகம்மாள் – சண்முக சுந்தரம் – கிண்டில்
- வயக்காட்டு இசக்கி – அ.கா.பெருமாள் – காலச்சுவடு
- மூன்று உரைகள் – சி. மோகன் – கிண்டில்
- ஆளுமைகள் தருணங்கள் – ரவி சுப்பிரமணியன் – காலச்சுவடு
- ரயில் நிலையங்களின் தோழமை – எஸ்.ராமகிருஷ்ணன் – தேசாந்திரி
- நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் – சி. மோகன் – போதிவனம்
- தொ.பரமசிவனின் ஆய்வு முறையியல் – த.கண்ணா கருப்பையா – ஷான்லாக்ஸ்
- பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல் – நற்றிணை பதிப்பகம்
- நம்பிக்கையைத் தேடும் மனிதர்கள் – கிருஷ்ணமூர்த்தி
- கடவுளின் தேசத்தில் – ராம் தங்கம் – கிண்டில்
- நாம் ஏன் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம் – அதிஷா – கிண்டில்
- ஆதிமை வேர் – மு.ராமசாமி – டோக் பெருமாட்டி கல்லூரி வெளியீடு
- மதுரை புகைப்படக்காட்சிகள் – லின்னேயஸ் டிரைப் – கிண்டில்
- ஆகாசம் நீலநிறம் – விக்ரமாதித்யன் – கிண்டில்
- வாங்க அறிவியல் பேசலாம் – ஆயிஷா நடராஜன் – பாரதி புத்தகாலயம்
- உயரப்பறந்த இந்தியக்குருவி -சாலிம் அலி – ஆதிவள்ளியப்பன் – ஓங்கில் கூட்டம் – கிண்டில்
- தமிழ்த்தூதர்: தனிநாயகம் அடிகள் – இரா.காமராசு – நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
- புறநானூறு : தமிழர் பண்பாடு – மு. அருணாசலம் – நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
- வியாழக்கிழமையைத் தொலைத்தவன் – விக்ரமாதித்யன் – கிண்டில்
- ஓரிகாமி: காகிதமடிப்புக்கலையின் கதை – தியாகசேகர் – கிண்டில்
- குழந்தைமையை நெருங்குவோம் – விழியன் – கிண்டில்
- ஆதி கவிதைகள் – விக்ரமாதித்யன் – கிண்டில்
- என் பள்ளி – தொகு. கல்யாண் குமார் – புதிய தலைமுறை வெளியீடு
- கடக்கிட்டி முடக்கிட்டி – பெரியசாமி தூரன் – கிண்டில்
- மறைந்துவரும் கைவினைக் கலைகள் – டோக் பெருமாட்டி கல்லூரி
- மதுரை போற்றுதும் – ச. சுப்பாராவ் – சந்தியா பதிப்பகம்
- நிறத்தைத் தாண்டிய நேசம் – ச.மாடசாமி – வாசல் பதிப்பகம்
- நூறு எண்ணுவதற்குள் – விக்ரமாதித்யன் – கிண்டில்
- நாட்டுப்புறவியலும் கோட்பாடுகளும் – ஆ. திருநாகலிங்கம் – யாழினிபதிப்பகம்
- காட்சிக்குறிப்பு – வெ.நீலகண்டன் – கிண்டில்
- சில பார்வைகள் சில அஞ்சலிகள் – சி. மோகன் – கிண்டில்
- நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா? – சிவபாலன் இளங்கோவன் – உயிர்மை பதிப்பகம்
- தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள் – மு. அருணாசலம் – சாகித்திய அகாதெமி
- சந்தித்திருக்கிறீர்களா? – எம்.பி.உதயசூரியன் – புதிய தலைமுறை வெளியீடு
- கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள் – சி. மோகன் – கிண்டில்
- தொன்மையும் பன்மையும் – தொ.ப. நினைவுச் சிறப்பிதழ் – தமிழறம்
வாசிப்பை நேசிப்போம் 2021 மாரத்தான் போட்டியில் 75 புத்தகங்கள் இந்த ஆண்டு வாசிக்கத் திட்டமிட்டிருந்தேன். அதைக் கடந்ததில் மகிழ்ச்சி. வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழு வாயிலாக அவ்வப்போது நடக்கும்போட்டிகளில் பரிசுகளாக புத்தகங்களும் பெற்றேன். அக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ஊரடங்கு காலத்தில் தன்னுடைய நூல்களை கிண்டிலில் இலவசமாக வழங்கிய சி.மோகன் அவர்களுக்கு நன்றி. இந்தாண்டு சி.மோகனின் நூல்கள் அனைத்தையும் வாசித்து அதைக் குறித்து பதிவெழுதி வாசிப்பை நேசிப்போம் போட்டியில் முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி. சி.மோகன் அவர்களுடன் அலைபேசி வாயிலாகவும் உரையாட வாய்ப்புகிட்டியமைக்கு நன்றி.
விக்ரமாதித்யனும் தன்னுடைய நூல்களை இலவசமாக கிண்டிலில் வழங்கியபோது அவை எல்லாவற்றையும் தரவிறக்கி வைத்துள்ளேன். கசடதபற, எழுத்து இதழ்களை கிண்டிலில் ஏற்றிய விமலாதித்த மாமல்லனுக்கும், அழிசி சீனிவாசனுக்கும் நன்றி. கனலி இலக்கிய இணையதளத்திற்கும் நன்றி.
கிண்டில் வாயிலாக இந்த ஆண்டு ஏராளமான நூல்களை வாசிக்க முடிந்தமைக்கு நன்றி! நன்றி! நன்றி! 500க்கும் மேலான நூல்களை கிண்டில் வழியாகத் தரவிறக்கி வைத்தாலும் 50 புத்தகங்களே வாசிக்க முடிந்தது. பதினாறு பக்க நூல்கள் தொடங்கி பல்வேறு அளவிலான நூல்களை வாசித்தேன்.
ஜனவரி – ஆகஸ்ட் மாதத்திற்குள் 70 புத்தகங்கள் வாசித்துமுடித்தபோது டிசம்பருக்குள் 100 புத்தகங்கள் வாசித்துவிடலாம் என்ற மிதப்பு மனதில் தோன்றியது. செப்டம்பரிலேயே வாசிப்பு குறையத் தொடங்கியது. அக்டோபர், நவம்பர், டிசம்பரில் வாசிப்பு படிப்படியாகத் தேய்ந்தது. சிலப்பதிகாரம் முழுதாக வாசித்து முடிக்க நினைத்தேன். அது இந்தாண்டு கைகூடவில்லை. 2022இல் அது நிறைவேறும். மனோகர் தேவதாஸ் எழுதிய Green Well Years ஆங்கிலம் என்பதால் வாசிக்கத் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. 2022இல் 50 புத்தகங்கள் வாசிப்பு. மேலும், 50க்கும் மேலான புத்தகங்கள் மறுவாசிப்பு எனத் திட்டமிட்டுள்ளேன். வாசித்த புத்தகங்கள் குறித்த வாசிப்பனுபவங்களை பதிவு செய்யவும் நினைக்கிறேன். வாசிக்க புத்தகங்களை கிண்டிலில் வழங்கியவர்களுக்கும், அச்சுப்புத்தகங்களை வாசிக்க கொடுத்தவர்களுக்கும், புத்தகங்களை வாங்கக் கிட்டிய பணத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி!