a«ña»Ça«¬a«+a«¦a«¦a«+a«¿a«+a«»a«òa«¬a»ì

தீபாவளி = தீபம் + ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள். சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் பகவான் வர்த்தமான மகாவீரர். அந்த நாளில் தான் வீடுபேறு அடைந்தார். அந்த நாளை சமண  மக்கள் யாவரும், அரசன் ஆணைப்படி வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். அந்நன்னாளே இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பது போன்ற சம்பிரதாயங்கள், எல்லாம் பின் நாளில் ஏற்பட்ட வழக்கங்கள்.  

 –  இரா.பானுகுமார், தமிழ்ச்சமணம்

கொங்கர்புளியங்குளம், மதுரையிலிருந்து செக்காணூரணி செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. கொங்கர்புளியங்குளத்திற்கு சகோதரரோடு ஒருமுறையும், பசுமைநடைக்குழுவோடும் ஒருமுறையும் சென்றிருக்கிறேன். அதைக்குறித்து மதுரை கொங்கர்புளியங்குளமும் கி.மு.இரண்டாம் தமிழ்பிராமிஎழுத்துருவும், பஞ்சபாண்டவமலையில் பசுமைநடைப்பயணக்குறிப்புகள் என்று இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். இம்முறை கொங்கர்புளியங்குளத்திற்கு பசுமைநடையாக 20.10.2013 அன்று சென்றிருந்தோம். சாந்தலிங்கம் அய்யா வந்ததால் இம்முறை இன்னும் நிறையத் தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

a«¬a«Üa»üa««a»êa«¿a«ƒa»ê

முதல்நாள் பெய்தமழையால் வழியெங்கும் பசுமையாகயிருந்தது. ஈரநப்படித்து மலையைப் பார்ப்பதற்கு மிகவும் இரம்மியமாகயிருந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் இந்நடைக்கு வந்திருந்தனர். மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பேர் தங்குமளவிற்கு படுகைகளை செதுக்கியுள்ளனர். இதை செய்வித்தவர்களின் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டப்பட்டுள்ளது. அதை சாந்தலிங்கம் அய்யாவிடம் கல்வெட்டுக்கலை பயிலும் நண்பர் ராஜன்னா தமிழ்பிராமி எழுத்துக்களை ஆர்வமாக பாறையில் வாசித்துப் பார்த்தார். இந்நடை குறித்த அனுபவங்களை அழகான நிழற்படங்களோடு பதிவாகவும் எழுதியுள்ளார். எல்லோரும் கூடியதும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார்.

santhalingam

a«¦a«¦a«¦a«+a«¦a»ìa«¦a»üa«¦a«òa»üa«¬a»ìa«¬a»ü

a«¬a«+a«»a»ìa«Üa»ìa«Üa«¦a»ì

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இம்மலையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். மதுர வரலாறு நூல் முதல் பதிப்பு தீர்ந்து அடுத்த பதிப்பு தயாராகிக் கொண்டிருப்பதை அறிவித்தார். அடுத்த நடை அவனியாபுரம் அருகில் இராணிமங்கமாள் சிலை உள்ள பழமையான கோயிலுக்கு செல்வோம் என்றார். இதுபோல நாம் தொடர்ந்து பயணிப்பதன் மூலம் திறந்தவெளி மதுக்கடைகளாக மாறிவரும் மலைகள்  ஓரளவிற்கு பாதுகாக்கப்படும் என்பதையும் கூறினார். மேலும், இங்குள்ள மதுபானப்புட்டிகள், குப்பைகளை விருப்பமுள்ளவர்கள் அகற்றினால் உதவியாக இருக்கும் என முத்துக்கிருஷ்ணன் கேட்டுக்கொள்ள தன்னார்வமாக பலரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்தோம். பின் அங்கிருந்து மலைமேல் ஏறி சுற்றிப்பார்த்தோம். நாகமலை மிக அருகில் எழிலோடு காட்சியளித்தது. மலைகளிலிருந்து வேடிக்கை பார்க்கும் போது மனம் இலகுவாகிறது. பறவைக்கோணத்தில் ஊர்களைப் பார்க்கும் போது ஏற்படும் இன்பத்தை சொல்லில் அடக்க முடியாது.

a«¿a«+a«òa««a«¦a»êa«»a«+a«¬a»ì a«Äa«¦a«+a«¦a»ì

எல்லோரும் காலை நேரத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டும், படமெடுத்தும் கொண்டும் இருந்தனர். பின் மலையை விட்டு மெல்ல இறங்கினோம். பாறையிலிருந்து மௌனமாக மகாவீரர் தன்னைக் காணவந்த பசுமைநடை குழுவினரைப் பார்த்து புன்னகையோடு விடைகொடுத்தார். மலையடிவாரத்தில் உள்ள நாட்டார் தெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அதை கொஞ்சம் வாங்கி உண்டோம்.

a«¿a«+a«ƒa»ìa«ƒa«+a«¦a»ìa«¬a»èa«Öa»ìa«òa«¦a»ì

அனைவரும் மலையடிவாரத்தில் உள்ள மாயன் கோயில் முன்புள்ள மரத்தடியில் உணவருந்தினோம். இட்லியோடு கேப்பை ரொட்டி, கொள்ளுப் பொடி என இயற்கை உணவு கொஞ்சம் வழங்கினர். மிக மகிழ்வோடு உண்டு உரையாடி அங்கிருந்து கிளம்பினோம்.

a«ëa«úa«¦a»ü

இம்முறை பசுமைநடைக்கு எங்கள் வீட்டுக்கருகிலுள்ள சிறுவன் மற்றும் இராஜபாளையத்திலிருந்து பசுமைநடைக்கு தொடர்ந்து வரும் சகோதரியின் மகனுடன் சென்றிருந்தேன். பள்ளி மாணவனான சிறுவனுக்கு இந்நடை பெரும் உற்சாகத்தைத் தந்தது.

a«¬a»üa«ña«+a«»a«¬a«»a«úa«+

கொங்கர் புளியங்குளம் குறித்த மற்ற பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள். கொங்கர் புளியங்குளத்தின் அழகைக் காண நண்பர் இளஞ்செழியனின் ‘குவியம்’ பாருங்கள். கொங்கர்புளியங்குளம் பசுமைநடை குறித்த நண்பர் வேல்முருகன் அவர்களின் பதிவையும் வாசியுங்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள்
  1. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

  2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார,

    அருமையான் புகைப் படங்களூடன் கூடிய அழகிய பதிவு – சென்ற இடங்களிலெல்லாம் கண்ணுக்கும் சிந்தைக்கும் வேலை கொடுத்து – உணர்வுகளைப் பதிவாக்குவது நன்று – நற்செயல் – பலருக்கும் பயன்படும் பதிவு. நல்வாழ்த்துகள் – இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  3. k.velmurugan சொல்கிறார்:

    அருமையான பதிவு ஆனால் சுருக்கமாக முடித்துகொண்டீர்கள், இராஜபாளையம் சகோதரி பையன் பெயரை பதிவு செய்து இருக்கலாம், அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

  4. மதுரக்காரன் சொல்கிறார்:

    நல்ல பதிவு சித்திரவீதிக்காரரே!

    இணைப்பிட்டதற்கு நன்றிகள் பல.

    நானும் எனது பதிவை மேம்படுத்தி உங்கள் பதிவிற்கான இணைப்பை பதிகிறேன். 🙂

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    தீபாவளிநாயகனைக் காண…= திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் அற்புதமான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்காரன்

பின்னூட்டமொன்றை இடுக